பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆகவும். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கிரீஸ் ரயில் விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு
கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம். உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமருக்கு வாழ்த்துகள் : எடப்பாடி பழனிசாமி</p>
ஈரோடு இடைத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். திரிபுரா, நாகலாந்து மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
உதவி எண்கள்: 9498101300, 0421 – 2203313
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளின் வாழ்த்துக்கள் என்னை நெகிழ வைத்தது; உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பான நன்றி. அனைவரின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுவேன் என தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்
சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். பண்டிகையையொட்டி குடும்பத்தினர் சொந்த ஊர் திரும்புமாறு கேட்டதால், ஊர் செல்வதாக சில பயணிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி இன்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து நடக்கிறது. இரவுக்குள் கோளாறு சீர் செய்து நாளை காலை முதல் வழக்கம்போல ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
திருப்பூரில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளி சஞ்சீவ் குமார் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு நடந்த உரிமை மீறல் விவகாரத்தில் 6 காவலர்களுக்கு ஒருநாள் சிறை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த 6 போலீஸ்காரர்களும் சபை வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், திருத்தணி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், அரக்கோணம், திருத்தணி செல்லக்கூடிய ரயில்கள் காலதாமலமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டில் பிகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸ் கர்நாடக தலைவர்களை அவமதித்தது என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “காங்., தலைவர்கள் நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல் ஆகியோரை அவமதித்தது” என்றார்.
பிப்ரவரி 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 325 மில்லியன் டாலர் குறைந்து 560.94 பில்லியன் டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சில விதிமுறைகளுக்கு இணங்காததற்காக அமேசான் பே (இந்தியா) மீது ரிசர்வ் வங்கி ரூ.3.06 கோடி அபராதம் விதித்துள்ளது என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மார்ச் 17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி நகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை: “ஓர் இடைத்தேர்தலில் அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இதுவே முதல்முறை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேகாலயாவில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், என்.பி.பி தலைவர் காண்ட்ரா சங்மா ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். மேகாலயாவில் 31 இடங்கள் ஆட்சியமைக்கத் தேவை என்ற நிலையில், 26 என்.பி.பி கட்சி வென்றுள்ளது. 2 இடங்களை பெற்ற பா.ஜ.க சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது.
மேகாலயாவில் கான்ராட் சங்மா ஆட்சியமைக்க பாஜக ஆதரவு அளித்துள்ளது. தேர்தல் பரப்புரையில் 'ஊழலில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மேகாலயா' இருப்பதாக கான்ராட் சங்மா மீது அமித்ஷா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அ.தி.மு.க-வை அழிவுப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் பழனிசாமி; ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
2011 – 2016 ஆண்டுகளில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டுவருவதற்காக செலவிடப்பட்ட பணத்தில் சுமார் ரூ.908 கோடி மோசடி செய்யப்பட்டதாக, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிரமான கழக பொறியாளர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், குமாரவயலூர் கோவிலில் ஆகம விதிக்கு முரணாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் நியமனம் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக அர்ச்சகர்களாக உள்ள மனுதாரர்களை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு ஈபிஎஸ் தான் காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க-வை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்ற ஜெயலலிதாவின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று ஓ.பி.எஸ் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு குறித்து பீகார் சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உறுதி செய்யப்படாத விவகாரங்களை பா.ஜ.க எழுப்புவதாக தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்தார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நாங்கள் முழுத் தடை விதிக்கவில்லை. நடைமுறைதான் தவறு என்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் பேரணிக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. RSS பேரணிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மார்ச் 17-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் சரிந்து ஒரு சவரன் ரூ.41,920 ஆக விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ,5,240-க்கு விற்பனை
கடந்த மாதம் 2ஆம் தேதி யானைகவுனியில் போலீஸ் என கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 11 பேரை கைத போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். ரூ.75 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகன் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 6 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் கர்நாடகாவின் சன்னகிரி பாஜக எம்எல்ஏவுமான கே மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல். பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (BWSSB) தலைமைக் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகள் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்திய நாராயணா பிரசாத் ஆகிய 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுள்ளது; ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிகமான வெற்றி, செயற்கையான வெற்றி. இடைத்தேர்தல் வெற்றி என்பது திமுக மற்றும் கூட்டணி கட்சியின் முறைகேடுகளால் நடந்தது – கோவையில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் முதல்வர் கான்ராட் சங்மா உரிமை கோரினார்.
திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார்; விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவதே கடினம் தான்; திருச்சியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணை மார்ச் 17ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இரட்டை இலை சின்னம் இல்லையென்றால், அதிமுகவின் நிலை மோசமாகி இருக்கும்; இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். வரும் காலத்தில் அனைவரும் ஒரே அணியில் திரண்டு, திமுகவை வீழ்த்த வேண்டும்- மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
சென்னை சென்ட்ரலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஆகியுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில் இயக்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி, மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
மாசிமக திருவிழாவை முன்னிட்டு வரும் 7ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
திமுக அரசு வரும்முன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. கடல் அரிப்பைத் தடுக்க பனைமரம் நடும் திட்டம் தொடங்கப்படும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடங்கப்படும்- காலநிலை மாற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
நாகூரில், சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கடலுக்கு அடியில் போடப்பட்ட குழாயில் உடைப்பு. பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு . நாகூர் மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு; மீன்கள் உயிரிழக்கும் அபாயம்
சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் . தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம். ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்
டெண்டர் ஒதுக்க லஞ்சம் கேட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் பணிபுரியும் அரசு அலுவலகத்தில் ரெய்டு . கணக்கில் வராத ரூ.7.22 கோடி பறிமுதல் – பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 4 பேர் கைது
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம். தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய குழு நாளை வேங்கைவயலில் நேரில் விசாரணை.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் புதிய வழக்கு . ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை. எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்ததை ரத்து செய்ய கோரிக்கை. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானத்தை எதிர்த்தும் மனு தாக்கல்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவக்கம் . இன்றும், நாளையும் நடைபெறும் விழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி. ராமேஸ்வரத்தில் இருந்து 72 படகுகளில் 2400 பேர் பயணம்