Tamil News Updates: பீகார் சட்ட மன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அங்கு ஏற்கனவே அமலில் இருக்கும் தளர்வுகள் தொடரும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் மீது, 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஹர்ஷ் வர்தன் ஆய்வு மேற்கொண்டார். அதில் கோவிட் தடுப்பு பணியில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியுள்ளார்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக முன்னெடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது, தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து - ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு - தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பெண்ணினத்திடம் பா.ஜ.க.விற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பா.ஜ.க. “பிராண்ட்” கலாச்சாரமா?
பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் மரியாதைக்குரிய டாக்டர் சுதா சேசையன் அவர்களையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.
பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட திருமதி. சுதா சேசையன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும் கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும்!
மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல!
அப்படியிருக்கும் போது - ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த – அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக - அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்!
“பெண்ணினத்தை அவமதித்த சுப்பையா சண்முகத்தை மதுரை AIIMS மருத்துவமனை நிர்வாகக்குழுவில் இருந்து நீக்கிவிட்டு - தமிழக MP -களுக்கு இடமளிக்க முதல்வர் அவர்கள் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதி அழுத்தம் தரவேண்டும் என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.
‘இவர் தான் அடுத்த CM, காலத்தின் கட்டாயம்...’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வருங்கால முதல்வராக சித்தரித்து திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ‘இவர் தான் அடுத்த CM, காலத்தின் கட்டாயம்... தப்புன்னா தட்டி கேட்பேன். நல்லதுன்னா தட்டி கொடுப்பேன்’ என்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்டைல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிமுகவில் நிர்வாக வசதிக்காக சென்னையை அதிமுக 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமனம்.
வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக பாலகங்கா நியமனம்.
தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளரக ஆதிராஜாராம் நியமனம்
தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக தி.நகர் சத்யா நியமனம்.
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக எம்.கே.அசோக் நியமனம்.
தென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக விருகை வி.என்.ரவி நியமனம்.
காமராசர் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி தேர்வு முறைகேடு புகாரில் சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில், பதிலளிக்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளை வழக்கு மூலம், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட கொள்ளையன் முருகன் உடல்நலக்குறைவால் மரணம்
கொடிய நோயால் பாதிக்கப்பட்ட முருகனை மேலும் பல நோய்களும் தொற்றிக்கொள்ள, சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பெங்களுரூ சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன், வாதநோயால் அவதிப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்ச்சி நாளை திருவாரூரில் நடக்கிறது.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 10 அரசு கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை நடத்த முயற்சிக்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழகத்தில் இன்று சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு என 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரித்துறை சோதனை நடப்பதாக வருமானவரித்துறையைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில், உள்ளார். நாஞ்சில் முருகேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனு 3வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகளிலெல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்டதோ அங்கெல்லாம் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது. டெல்லியில், மறு உத்தரவு வரும் வரையில் அனைத்து பள்ளிகளையும் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை பொது நல மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது பொது நலம் சார்ந்த விவகாரம் என்பதால், ரிட் மனுவை வாபஸ் பெறவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதலமைச்சர் பழனிசாமி மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். தனியார் விடுதியில் நடைபெறும் நெடுஞ்சாலை துறை ஆலோசனை கூட்டத்தில் நிதின் கட்கரியுடன் முதலமைச்சரும் பங்கேற்கிறார்.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினராக சுப்பையாவை நியமித்ததற்கு அரசியல்வாதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக எம்.பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், விசிக எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் இதுகுறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை. வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர். ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா? பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்
அவசரம்.— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020
"வட கிழக்கு பருவமழை இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
மாவட்டங்களில் கொரோனா குறித்த நிலவரத்தை ஆராய, மாவட்ட ஆட்சியர்களுடன் 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். தொற்றுநோய்கள், வடகிழக்கு பருவமழை, நீர்நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights