பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2023 . ஹைதராபாத் , லக்னோ அணிகள் மோதல். இன்று இரவு 7.30 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையே பலப்பரீட்சை.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காரில் ரூ. 32 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் காரில் இருந்து ரூ. 32 லட்சம் பறிமுதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பறிமுதல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:47 (IST) 07 Apr 2023ஸ்டெர்லைட் ஆலை: ஆளுநரின் கருத்து; மிக மிக வேதனை அளிக்கிறது - கே.பி. முனுசாமி
மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து தமக்கு வேதனை அளிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
- 21:36 (IST) 07 Apr 2023தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும் - அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: “தமிழ்நாடு மக்களின் உணர்வுகள், பேரவையின் இறையாண்மையை மதிக்க ஆளுநர் கற்றுக்கொள்ள வேண்டும்; அரசியல் சட்டம் மீது நம்பிக்கையின்றி ஆளுநர் செயல்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்று கூறினார்.
- 21:33 (IST) 07 Apr 2023தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு
* தற்போது கொரோனாவுக்கு 1,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* சென்னையில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு
- 21:01 (IST) 07 Apr 2023சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப். 8-ம் தேதி பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை இல்லை
பிரதமர் வருகை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 08) பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை செய்யப்படாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் அனைத்தும் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- 20:19 (IST) 07 Apr 2023ஆன்லைன் ரம்மி விவகாரத்தை ஆளுநர் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் - சத்யராஜ்
கோவையில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை கண்காட்சியைப் பார்வையிட்ட பின் நடிகர் சத்யராஜ் பேட்டி: “ஆன்லைன் ரம்மி விவகாரத்தை ஆளுநர் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்; சூதாட்டம் என்பது தடை செய்யப்பட வேண்டிய விஷயம்தான்; அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
- 20:16 (IST) 07 Apr 2023விமானப் பயணிகள் முன்னதாகவே வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தல்
சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் தங்களது பயண நேரத்திற்கு முன்னரே வருகை தர வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 20:05 (IST) 07 Apr 2023கோபியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2.80 கோடி கொள்ளை
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சுதர்சன் என்பவரது வீட்டில் வைத்திருந்த ரூ.2.80 கோடியை மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுதர்சன் புதிய வீடு வாங்க ரூ.2.80 கோடி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
- 19:05 (IST) 07 Apr 2023கோயில் பணியாளர்கள் ரூ.2,984 ஊதியத்தில் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? - ஐகோர்ட் கேள்வி
அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி கோயில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் 8 வாரத்தில் ஊதியம் நிர்ணயித்து தர உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில்கள் நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம்; கோயில் பணியாளர்களின் கோரிக்கைகளை அப்படியே விட்டுவிட முடியாது. பழமையான கோயிலை பராமரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பணிகளை கோயில் ஊழியர்களால் மட்டுமே செய்ய முடியும்.
ரூ.2,984 ஊதியம், கோயில் ஊழியர்களுக்கு தரும் பொருட்களைக் கொண்டு ஊழியர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில், கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். ஆண், பெண் பேதமின்றி அரசு பணியாளர்களுக்கு சமமான வாழ்வாதாரம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
- 18:54 (IST) 07 Apr 2023கோவையில் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை புகைப்பட கண்காட்சி தொடங்கி வைத்தார் சத்யராஜ்
கோவை வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் தொடங்கியுள்ள இப்புகைப்பட கண்காட்சி, ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது,.
- 18:51 (IST) 07 Apr 2023வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட் கேள்வி
“வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது, நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும். நிலத்தடி நீர் எடுப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும் வரை, மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசு பின்பற்ற வேண்டும்” என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
- 18:21 (IST) 07 Apr 2023மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண கண்காட்சியை தொடங்கி வைத்த நடிகர் சத்யராஜ்
கோவை வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார் . சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் தொடங்கியுள்ள இப்புகைப்பட கண்காட்சி, ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது
- 17:56 (IST) 07 Apr 2023பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வாரிசு அரசியலுக்கு ஆபத்து : அமித் ஷா
உத்திரபிரதேச பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் எதிர்க்கட்சிகளை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வாரிசு அரசியலே ஆபத்தில் உள்ளது, ஜனநாயகம் அல்ல என கூறியுள்ளார்.
- 17:54 (IST) 07 Apr 2023மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசு பின்பற்ற மதுரைக்கிளை உத்தரவு
வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதில் அரசின் நிலைப்பாடு என்ன?" அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது, நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும். நிலத்தடி நீர் எடுப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும் வரை, மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசு பின்பற்ற மதுரைக்கிளை உத்தரவு
- 17:31 (IST) 07 Apr 2023கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம்
தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக ₹700 கோடி மதிப்பில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
- 17:22 (IST) 07 Apr 2023பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கன ரக வாகனங்களுக்கு தடை
தமிழகத்தில் சுற்றுப்பயணம் வரும் பிரதமர் மோடி நாளை மறுநாள் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு, வரவுள்ள நிலையில், கக்கநல்லா - பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கன ரக வாகனங்களுக்கு இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை தடைவிதிப்பு!
- 17:20 (IST) 07 Apr 2023கேரளா ரயிலுக்கு தீ வைத்த சம்பவம்
கேரளா, கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபி-ஐ 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவு
- 16:41 (IST) 07 Apr 2023பிரதமர் தமிழகம் வருகை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஒத்திகை. விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு ஒத்திகை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
- 16:02 (IST) 07 Apr 2023கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு : விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்
நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம், தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அமுதா ஐஏஎஸுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 16:00 (IST) 07 Apr 2023ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு
இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், வரும் 9ம் தேதி முதுமலை செல்லும் பிரதமர் மோடி, தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படத்தில் நடித்த தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்திக்கிறார். இதன் காரணமாக, இந்த தம்பதிகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- 15:57 (IST) 07 Apr 2023மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும். கொரோனா தொற்று குறித்து தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
- 15:55 (IST) 07 Apr 2023ராஜஸ்தான் - சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை
சென்னையில் 12ம் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 9ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு. டிக்கெட் விலை ₨1500ல் இருந்து ₨3000 வரை நிர்ணயம் - சென்னை அணி நிர்வாகம்
- 15:26 (IST) 07 Apr 2023உயர்மட்ட விசாரணை அதிகாரி நியமனம்: ஒரு மாதத்திற்குள் அறிக்கை வழங்க உத்தரவு
திருநெல்வேலி காவல்நிலையத்தில் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தைக் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு உத்தரவு
- 14:59 (IST) 07 Apr 2023சென்னைக்கு பிரதமர் வருகை: போக்குவரத்து மாற்றம்
சென்னைக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம்.
சென்ட்ரல் - விவாகானந்தர் இல்லம் இடையே பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வாகனங்கள் மெதுவாக செல்ல நேரிடும்
காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும். அண்ணா ஆர்ச் முதல் முத்துச்சாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
- 14:52 (IST) 07 Apr 20231-9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11-19ந் தேதி தேர்வு: கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்
"கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வுகள் நடத்தத் திட்டம்.
தேர்வு முடிந்த பின்னர் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை"
- கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
- 14:00 (IST) 07 Apr 2023நிலக்கரி சுரங்கம் எதிர்த்து முதல்வருக்கு கடிதம்: அன்புமணி ராமதாஸ்
"தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும்"
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
- 13:55 (IST) 07 Apr 2023சட்டமன்ற மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாக புகார்: ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி நடத்துவதாகக் குற்றச்சாட்டு.
பாஜகவினரை மகிழ்விக்கத் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆளுநர் கூறிவருவதாகப் புகார்.
- 13:36 (IST) 07 Apr 2023"கொரோனா பரிசோதனையை உயர்த்த திட்டம்": அமைச்சர் மா.சு.
"கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
விமான நிலையங்களில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்னிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனையை உயர்த்த திட்டமிடுகிறோம்", என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
- 13:20 (IST) 07 Apr 20238 தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்.ஜி.ஆர் சாதனை- பண்ருட்டி ராமச்சந்திரன்!
ஈரோடு இடைத்தேர்தலில் வடமாநிலத்தை சேர்ந்த பாஜகவினரும், அருந்ததியினரும் வாக்களிக்கவில்லை என்றால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். எட்டு தோல்விகளை சந்தித்தது தான் சூப்பர் எம்.ஜி.ஆர் (இ.பி.எஸ்) செய்த சாதனை- பண்ருட்டி ராமச்சந்திரன்
- 13:19 (IST) 07 Apr 2023ஆளுநரை கண்டித்து வரும் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு!
ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
- 12:43 (IST) 07 Apr 2023'சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்': ஓ.பி.எஸ் பேட்டி
"சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்; இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
- 12:42 (IST) 07 Apr 202324-ம் தேதி திருச்சியில் மாநாடு; ஓ.பி.எஸ் ஆதரவளர் பண்ருட்டி ராமச்சந்திரன்
"ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும். அதிமுக பொதுக்குழு போலியானது. அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்தில் சென்றால் தான் விலகும்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
- 12:25 (IST) 07 Apr 2023'அந்நிய நாட்டு பணங்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு பிரதமர் அனுமதிக்க மாட்டார்": கே.பி.முனுசாமி
"உலக தலைவராக உள்ள பிரதமர் மோடி அந்நிய நாட்டு பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்க மாட்டார்" என ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து அதிமுக எம்.பி., கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
- 12:23 (IST) 07 Apr 2023பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் முதல்வர்!
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டி, பாஜகவில் இணைந்தார்.
- 12:02 (IST) 07 Apr 2023ஜெயலலிதா சொத்து ஏலம்!
ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கறிஞரை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலி ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12:00 (IST) 07 Apr 2023சென்னை வரும் மோடிக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 11:49 (IST) 07 Apr 2023ஷாருக் கான் - விராட் கோலி நடனம்; வைரல் வீடியோ!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணி மோதின. இதில் கொல்கத்தா 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு, கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நட்சத்திரமுமான ஷாருக் கான் முன்னாள் சாப்பிட விராட் கோலி சந்தித்து பேசினர்.
அப்போது, விராட் கோலிக்கு ஷாருக் கான் நடனமாட சொல்லிக் கொடுத்த காட்சிகள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 11:45 (IST) 07 Apr 2023எடியூரப்பா உடன் ஓ.பி.எஸ் அணி சந்திப்பு!
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உடன் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சந்திப்பு மேற்கொண்டனர். கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
- 10:46 (IST) 07 Apr 2023தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,640 ரூபாய்க்கு விற்பனை
- 10:19 (IST) 07 Apr 2023கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழப்பு
| நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 13 பேர் உயிரிழப்பு
- 10:17 (IST) 07 Apr 2023புதுச்சேரி பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம்
புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு . புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
- 09:57 (IST) 07 Apr 2023பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும்
பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் * மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் . சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் சமர்ப்பித்தது தமிழக பொதுப்பணித்துறை
- 09:20 (IST) 07 Apr 2023சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம்
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம் . வந்தே பாரத் ரயிலை நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் இருந்து துவக்கி வைக்கிறார்.
- 08:43 (IST) 07 Apr 2023பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. ஏப்ரல் 10-28ம் தேதிக்குள் 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும் . ஏப்ரல் 17-21ம் தேதிக்குள் 1-3ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வை முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
- 08:08 (IST) 07 Apr 2023ட்விட்டர் லோகோவை மீண்டும் மாற்றிய எலான் மஸ்க்
மீண்டும் குருவியையே ட்விட்டர் லோகோவாக மாற்றினார் எலான் மஸ்க்; சில தினங்களுக்கு முன் தனது பிட்டியின் நிறுவனமான ‘Doge Coin'-ன் லோகோவை ட்விட்டர் லோகோவாக மாற்றி இருந்தார்.
- 08:07 (IST) 07 Apr 2023மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை
மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை . கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.