Advertisment

Tamil News highlights: புத்தாண்டில் புத்தொளி பரவட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

31-12-2023: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin

Petrol and Diesel Priceசென்னையில் பெட்ரோல்டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும்டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியா மேற்கு பபுவா பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். வீடுகள் குலுங்கியதால் மக்கள் பதமற்றமடைந்தனர்.

 ஏரிகளின் நீர் இருப்பு

புழல் ஏரியில் நீர்இருப்பு 2964 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 777 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 16 கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் 28வது நாளாக நீர்இருப்பு முழு கொள்ளவில் நீடிக்கிறது. நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Dec 31, 2023 21:56 IST
    புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்

    புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை சாலையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை சாலைக்குள் நுழையும் அனைவரையும் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர். நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரை சாலையில் சுற்றுலா துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது



  • Dec 31, 2023 21:25 IST
    மெரினா கடற்கரையில் குவியும் பொதுமக்கள்

    புத்தாண்டை கொண்டாட சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றன. மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Dec 31, 2023 20:57 IST
    மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல தடை விதிப்பு!

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்



  • Dec 31, 2023 20:40 IST
    அமைதி நிலவட்டும்; ப.சிதம்பரம் புத்தாண்டு வாழ்த்து

    எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புதிய ஆண்டில் போர்கள் ஓயட்டும்; அமைதி நிலவட்டும்; சகோதரத்துவம் பரவட்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Dec 31, 2023 19:56 IST
    ஆங்கில புத்தாண்டு; ஆளுநர் ரவி வாழ்த்து

    2024 புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஆரோக்கியம் வெற்றியை அளிக்கட்டும். 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்ற மீண்டும் உறுதியேற்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Dec 31, 2023 19:50 IST
    ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க சீமான் கோரிக்கை

     

    கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Dec 31, 2023 19:43 IST
    தென் மாவட்டங்களில் ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்; சீமான்

    கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்



  • Dec 31, 2023 19:41 IST
    புத்தாண்டு பிள்ளையார்பட்டியில் சிறப்பு தரிசனம்


    2024 புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் கோயிலில் அதிகாலை 4.30 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 31, 2023 19:19 IST
    ஆஸ்திரேலியாவில் பிறந்தது புத்தாண்டு


    நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2024 புத்தாண்டு பிறந்தது.
    இதையடுத்து, சிட்னி நகரில் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் கொண்டாடினர்.



  • Dec 31, 2023 18:14 IST
    கால்பந்து ஆடிய சஞ்சு சாம்சன்

     

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த உள்ளூர் தொடரில், கால்பந்து விளையாடினார் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.



  • Dec 31, 2023 17:49 IST
    சாதிப் பெயரைக் குறிப்பிட்டு 2 விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய இ.டி.க்கு வலுக்கும் கண்டனம்

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதரர்களான கணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளுக்கு சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் வலுத்து வருகிறது. காரணத்தைக் குறிப்பிடாமல், ஜூலை 5-ம் தேதி இருவரும் வங்கிக் கணக்கில் வெறும் ரூ.500 மட்டுமே வைத்திருந்த விவசாயிகளிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறைக்கு கண்டனம் வலுக்கிறது. காரணத்தையே குறிப்பிடாமல், ஜூலை 5-ம் தேதி இருவரும் சென்னைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்னை சென்றுள்ளனர் அந்த விவசாயிகள். பா.ஜ.க நிர்வாகி உதவியுடன் தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வங்கியில் ரூ.5,00 மட்டுமே வைத்திருந்தவர்களிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து விவசாயிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளனர்.



  • Dec 31, 2023 17:48 IST
    தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் இன்று!

     வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, லைலா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.



  • Dec 31, 2023 17:43 IST
    ஜனவரி 2 தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!

    பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி இரண்டாம் தேதி தமிழ்நாடு வருகிறார். திருச்சி புதிய விமான நிலையம் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை திட்டங்களையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த திட்டங்களில் மதிப்பு 19,850 கோடி ஆகும்.



  • Dec 31, 2023 17:05 IST
    நியூசிலாந்தில் முதலில் பிறந்தது புத்தாண்டு 2024 

    நியூசிலாந்தில் ஆங்கில புத்தாண்டு 2024 பிறந்தது; நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். ஆக்லாந்து நகரில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்று ஆட்டம், பாட்டம் என புத்தாண்டை கொண்டாடும் நியூசிலாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.



  • Dec 31, 2023 17:02 IST
    நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு பிறந்தது

     

    உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, அந்நாட்டில் உள்ள ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில் கண்களைக் கவரும் வகையில் பட்டாசுகளை வெடித்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.



  • Dec 31, 2023 16:02 IST
    பொங்கலுக்குப் பின் தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை?

    மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பொங்கலுக்குப் பின் தி.மு.க, தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.ஐ (மார்க்சிஸ்ட்) வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Dec 31, 2023 15:55 IST
    விஜயகாந்த்-திற்கு மதுரையில் முழு உருவச் சிலை வைக்க கோரிக்கை -  மேயர் பதில்

    நடிகர் விஜயகாந்த்-திற்கு சிலை வைக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, மறைந்த நடிகர் விஜயகாந்த்-திற்கு மதுரையில் முழு உருவசிலை வைக்க வேண்டும் எனும் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து தமிழக அரசிடம் தெரிவிக்கப்படும் என மதுரை மேயர் தகவல் தெரிவித்துள்ளார். 



  • Dec 31, 2023 14:23 IST
    செம்மரக் கடத்தல்: 2023-ல் தமிழகத்தை சேர்ந்த 361 பேர் கைது

    செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில்  2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 361 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆந்திரா போலீசார் தெரிவித்துள்ளனர். செம்மரக் கடத்தல் குற்றச்சாட்டில்  2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 361 பேர் உள்பட மொத்தம் 776 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக என்று ஆந்திரா போலீசார் தெரிவித்துள்ளனர். 



  • Dec 31, 2023 13:47 IST
    நாளை மறுநாள் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

    தமிழ்நாட்டில் ரூ.19,850 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை மறுநாள் (ஜன.2) தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. 



  • Dec 31, 2023 13:41 IST
    பொங்கலுக்குப் பின் தி.மு.க கூட்டணியில் பேச்சுவார்த்தை?

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தோழமை கட்சிகளுடன் பொங்கலுக்குப் பின் தி.மு.க பேச்சுவார்த்தை எனத் தகவல் 

    காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க  பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் 



  • Dec 31, 2023 13:26 IST
    அவருடைய கொள்கையை பேசி இருக்கிறார்- சேகர்பாபு

    உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள் நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதைப் பேசி இருக்கிறார். 

    - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி 



  • Dec 31, 2023 13:26 IST
    நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதிலடி

    குறை எதுவும் இல்லை என்று தெரிந்தும் சிலர் குற்றம் சொல்வார்கள் அவர்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி



  • Dec 31, 2023 13:05 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

    இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கி இந்த 2023-ஐ வழிஅனுப்பி புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளை தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்



  • Dec 31, 2023 13:05 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

    இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கி இந்த 2023-ஐ வழிஅனுப்பி புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளை தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்



  • Dec 31, 2023 13:03 IST
    விழுப்புரம், கும்பகோணம் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்லும்

    பெங்களூர் நெடுஞ்சாலை, ஈ.சி.ஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேட்டில் இருந்து புறப்படும். 

    விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்



  • Dec 31, 2023 13:02 IST
    விழுப்புரம், கும்பகோணம் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்லும்

    பெங்களூர் நெடுஞ்சாலை, ஈ.சி.ஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேட்டில் இருந்து புறப்படும். 

    விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்



  • Dec 31, 2023 13:02 IST
    விழுப்புரம், கும்பகோணம் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்லும்

    பெங்களூர் நெடுஞ்சாலை, ஈ.சி.ஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேட்டில் இருந்து புறப்படும். 

    விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்



  • Dec 31, 2023 13:01 IST
    தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கவனத்திற்கு.

    கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு.

     சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்.

    இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம். 



  • Dec 31, 2023 12:23 IST
    கோயம்பேடு- கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் திருப்பி தரப்படும்

    கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு

    அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தல்

    கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிப்பு



  • Dec 31, 2023 12:21 IST
    ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, லைலா, பிரசாந்த் உள்ளிட்டோர்  நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு



  • Dec 31, 2023 12:18 IST
    பெசன்ட் நகர் கடற்கரையில் 6-வது அவென்யூ சாலை மூடல்

    புத்தாண்டையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலை மூடல்

    வாகனங்களை வேறு பாதையில் திருப்பி அனுப்பும் போலீசார். மாலை 6 மணிக்கு மேல் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடுப்பு வேலிகள் அமைப்பு

    வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைப்பு

    கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்தால் உடனடியாக புகார் அளிக்க ஆங்காங்கே முகாம்கள் அமைப்பு



  • Dec 31, 2023 12:17 IST
    எய்ம்ஸ் கட்டுமான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி - ஆர்.டி.ஐ தகவல்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு முன்பு செய்ய வேண்டிய ஆவணப் பணிகள் நிறைவு.  

    கட்டுமானத்திற்கு மொத்தம் ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு. எய்ம்ஸ் கட்டுமான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ தகவல்



  • Dec 31, 2023 11:46 IST
    புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினாவில் சாலைகள் மூடல்

    புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகள் மூடல். 

    இன்று இரவு 7மணி முதல் கடற்கரை உட்புற சாலை முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.



  • Dec 31, 2023 10:53 IST
    கனகசபை விவகாரம் - வழக்கு தொடர உள்ளோம்;அமைச்சர் சேகர்பாபு

    கனகசபை விவகாரம் - வழக்கு தொடர உள்ளோம்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது கனகசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்த விவகாரம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் - அமைச்சர் சேகர்பாபு



  • Dec 31, 2023 10:28 IST
    4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Dec 31, 2023 10:21 IST
    சென்னையில் இருந்து புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திர கோளாறால் ரத்து

    சென்னையில் இருந்து பிரான்ஸ் செல்ல இருந்த விமானம், ஆக்சிஜன் குறைவால் தீடீர் ரத்து. 276 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Dec 31, 2023 10:05 IST
    மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம்

    திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே ரயில்வே பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ரயில்வே மின்சார கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வடமாநில தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம்.



  • Dec 31, 2023 10:04 IST
    புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு

    புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு. புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. .1000 வழங்கப்படும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு .



  • Dec 31, 2023 09:43 IST
    லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

    நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து; இதில் 2 பெண்கள் ஒரு வயது குழந்தை என 3 பேர் உயிரிழப்பு படுகாயமடைந்த 15 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி



  • Dec 31, 2023 08:57 IST
    கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்

    சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்த்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (20) உயிரிழந்தார். மேலும் பாலவாக்கம் கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சக்தி (24) அலையில் சிக்கி உயிரிழப்பு.



  • Dec 31, 2023 08:54 IST
    ஏழு கடல் ஏழு மலை: படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வரும் ஜனவரி 2ம் வெளியாகும்

    ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வரும் ஜனவரி 2ம் தேதி மாலை 5.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு



  • Dec 31, 2023 08:50 IST
    தமிழ்நாட்டில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்  



  • Dec 31, 2023 08:00 IST
    இனி இந்த பேருந்து நிலையம்தான் : முக்கிய அறிவிப்பு

    தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தல். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment