Latest Tamil News : புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் (வயது 70) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவர் புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சங்கரின் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2-ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 52 பேருக்கு உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பின் பெரும்பாலோனோர் வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குமரிக்கடல் மற்றும் தென்னிலை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் தெற்கு மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.40-க்கும், டீசல் ரூ.80.19-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
News In Tamil : தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் வரும் நாட்களில் இந்தப் பணி முழுவீச்சில் நடைபெறும் என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 775 பேர் குணமடைந்து உள்ளனர். 610 பேருக்கு இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.78% குணமடைந்துள்ளனர்.
Web Title:Tamil news today live corona vaccine tamil nadu politics crime weather ops eps stalin farmers
பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் வாகனங்களால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் 2 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். மேலும், மறுநாள் காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக்கொள்ளலாம்.
திமுக அயலக அணியின் வளைகுடா உடன்பிறப்புகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் 22ஆம் தேதி இந்திய நேரம் சரியாக இரவு 9 மணிக்கு zoom மீட்டிங் வழியாக நடைபெறும் , இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் அமைப்புகள் dmknriwing@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என திமுக ஐடி விங் தெரிவித்தது.
தமிழகத்தில் இன்று 3,000 பேருக்கு கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஆதிதிராவிடர், தொழிலாளர் மற்றும் பல மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் 15 கோப்புகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்க கோரி 8வது நாளாக புதுச்சேரி மாநில சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி அவர்கள் நடத்திவரும் உள்ளிருப்பு அறவழி போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் கலந்துகொண்டார்.
அதிமுகவை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " தமிழகத்தில் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால் தான் கட்சி நடத்த முடியும்,ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் ஸ்டாலின் " என்றும் தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நாளை தொடங்கவிருக்கிறது.
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த திரைப்படம் வெளியிடப்படுவதுடன், வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய சாம்பியன்ஷிப் பாதுகாப்பு விரைவு சவால் என்ற பயணமும் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்படும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: கருத்துக்கேட்பு கூட்டமே நடத்தக்கூடாது! கார்ப்பரேட் அரசும் - பொம்மலாட்ட அரசும் அத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தின் சில பகுதிகளில் என்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் 19ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை விலகுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கோவிட்-19 க்கான இரண்டு தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பானது, தயக்கமின்றி இதனை போட்டுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் அண்ணன் மகள் டாக்டர் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர் மற்றும் கலாமின் நெருங்கிய நண்பர் டாக்டர் ஒய்.எஸ் ராஜன் எழுதிய ‘‘அப்துல் கலாம்-நினைவுகளுக்கு மரணமில்லை’’ என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக சில மாநிலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.
எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தையொட்டி, சென்னை அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ சிலைக்கு முதலவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஓசூர் அருகே லாரி மோதி காயமடைந்த யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் தேக்கத்திற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஆஸி.க்கு எதிராக கடைசி டெஸ்ட்போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும், ஷர்துல் தாகூர் 67 ரன்களும் எடுத்தனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்
சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், அவர் வருகை தொடர்பாக செயற்கையான மாயை ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 விழுக்காடு அளவிற்கு பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தவறான பரப்புரை செய்தாலும் அதிமுக எதிர்கட்சியாக கூட வராது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஜோ பைடன் போல பிரதமர் மோடியும் முதலில் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 274 பேரில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்"என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார்
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதங்களில் வாழ்ந்து வருகிறார் என் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
"தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன். தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்" என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
பொங்கல் பண்டிகைக்காகச் சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்புவதற்காக இன்று முதல் 3 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆயிரத்து 867 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் சென்னையைத் தவிர்த்து இதர இடங்களுக்கு 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.