இந்தியாவில் இதுவரை மொத்தம் 27,776 அமர்வுகளில், 15.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு, கடந்த ஜனவரி 3-ம் தேதி பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16-ம் தேதி முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்திருக்கிறது. இங்கிலாந்திலிருந்து பரவப்பட்ட இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலத்தின் அந்தந்த மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலை மிகவும் கவனமுடன் கையாளுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
News In Tamil Live : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது அதிமுகவில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் சசிகலாதான் தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சீன கடல்பகுதிக்குள் வரும் மற்ற நாடுகளின் கப்பல்களை சுடுவதற்கு கடலோர காவல்படைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டதிருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு கடல்பகுதியில் ஜப்பானுடனும், தெற்கு கடல்பகுதியில் பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும், சீனா பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டை ஒருபோதும் நரேந்திர மோடியாலும், பி.ஜே.பி யாலும் கட்டுப்படுத்த முடியாது!நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் தமிழக மக்களை எண்ணி நான் பெருமையடைகின்றேன்! என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பறிபோகும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு 1% இடஒதுக்கீட்டையும் இழக்கின்ற அபாயத்தில் பழங்குடியின மக்கள்; நிரந்தரத் தீர்வு காண அரசுகள் முன்வர வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.
"சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது. மேலும், சேலத்தில் இருந்து பல வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என நம்புகிறேன். கடின உழைப்பு என்றைக்குமே வீண் போகாது, நிச்சயம் உயர்த்தும். அதற்கு நானே சாட்சி. எனக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி" என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
"நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்கவே வந்துள்ளேன். நான் தமிழன் அல்ல ஆனால், தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்" என ஈரோட்டில் ராகுல்காந்தி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
"கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது. கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்" என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தினத்தன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. மேலும், பேரணி நடைபெறும் வழித்தடங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால் அதனை பரிசீலிக்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வார விடுமுறை, குடியரசு தின விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த காரணங்களால் கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனைத் தொடர்ந்து போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த சோதனையில், கணக்கில் வராத 200 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூரில், செயல்பட்டு வரும் கவ்வி நிறுவனமான கருண்யா கல்லூரியின் முதல்வராக பால் தினகரன் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து இயேசு அழைக்கிறார் என்ற அலுவலகம் மற்றும் அதன் வலைத்தளத்திலும் பிற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் போதனைகள் மூலம் அதிகமாக சம்பாதித்துள்ளார்.
ஆனால் தான் சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கணக்கு காண்பிக்காமல் அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights