இந்தியாவில் இதுவரை மொத்தம் 27,776 அமர்வுகளில், 15.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு, கடந்த ஜனவரி 3-ம் தேதி பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16-ம் தேதி முதல் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்திருக்கிறது. இங்கிலாந்திலிருந்து பரவப்பட்ட இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலத்தின் அந்தந்த மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலை மிகவும் கவனமுடன் கையாளுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Today's Tamil News Live : கிறிஸ்துவ மதபோதகரான பால் தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் (ஜனவரி 20-ந் தேதி முதல்) கடந்த 3 தினங்களாக வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல், சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் அமைந்துள்ள அவரது நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளையும் வரி மோசடிகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த சோதனையில், கணக்கில் வராத 200 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூரில், செயல்பட்டு வரும் கவ்வி நிறுவனமான கருண்யா கல்லூரியின் முதல்வராக பால் தினகரன் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து இயேசு அழைக்கிறார் என்ற அலுவலகம் மற்றும் அதன் வலைத்தளத்திலும் பிற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் போதனைகள் மூலம் அதிகமாக சம்பாதித்துள்ளார்.
ஆனால் தான் சம்பாதித்த பணத்திற்கு வருமான வரி கணக்கு காண்பிக்காமல் அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Web Title:Tamil news today live corona vaccine tamil nadu politics election campaign eps stalin farmers
சசிகலாவினால் ஆதாயம் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது அதிமுகவில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் சசிகலாதான் தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு சொல்வதை கேட்கும் அரசாக தமிழக அரசு உள்ளது என்று தாராபுரத்தில் 'கொங்கு வணக்கம்' பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"என்று விவசாயிகள் மோடியின் தாய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தென்காசியில், பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லைகொடுத் 4 சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேயத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்ராகுல் காந்தி, தனது பிரச்சாரத்தில், என் மனதில் இருப்பதை பேச வரவில்லை; உங்கள் மனதில் இருப்பதை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை கட்டுப்படுத்தும் மத்திய அரசு மக்களையும் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்க தயார் என்றும் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க ஸ்டாலின் தயாரா? கச்சத்தீவு பிரச்சினை குறித்து விவாதிக்க தயாரா? என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த முறை இரண்டு தொகுதிகள் கேட்போம்" என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் வேல் எடுத்தது சூரசம்ஹாரத்திற்குதான் இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டுகள் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 க்கான இரண்டு தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பானது என்றும் இது குறித்த வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சமூகத்தின் வளர்ச்சிக்கு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத சக்தியாக பெண்குழந்தைகள் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
தன் கையில் வேல் ஏந்தும் நிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தள்ளப்பட்டு உள்ளார் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.
சீன கடல்பகுதிக்குள் வரும் மற்ற நாடுகளின் கப்பல்களை சுடுவதற்கு கடலோர காவல்படைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டதிருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு கடல்பகுதியில் ஜப்பானுடனும், தெற்கு கடல்பகுதியில் பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும், சீனா பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.
புதுச்சேரியிலும், தமிழகத்திலும் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது; பாஜக மதவாத கட்சி, பிரிவினையை உருவாக்கும் கட்சி என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி தமிழகத்திலும் பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது; பாஜக மதவாத கட்சி, பிரிவினையை உருவாக்கும் கட்சி!
தமிழ்நாட்டை ஒருபோதும் நரேந்திர மோடியாலும், பி.ஜே.பி யாலும் கட்டுப்படுத்த முடியாது!நாட்டிற்கே முன்மாதிரியாக திகழும் தமிழக மக்களை எண்ணி நான் பெருமையடைகின்றேன்! என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் 2 சீட்டுகள் கேட்க உள்ளோம்; இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
காங்கிரஸ் தனித்து பிரச்சாரம் செய்வது பாராட்டுக்குரிய விஷயம் என திமுக தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.
சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பறிபோகும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு 1% இடஒதுக்கீட்டையும் இழக்கின்ற அபாயத்தில் பழங்குடியின மக்கள்; நிரந்தரத் தீர்வு காண அரசுகள் முன்வர வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.
மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க நதிகள், ஓடைகளின் குறுக்கே ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாக முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை மே.5ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
நாளை நடைபெறுவதாக இருந்த பா.ம.க நிர்வாகக் குழு கூட்டம் வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பா.ம.க தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
"சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளது. மேலும், சேலத்தில் இருந்து பல வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பார்கள் என நம்புகிறேன். கடின உழைப்பு என்றைக்குமே வீண் போகாது, நிச்சயம் உயர்த்தும். அதற்கு நானே சாட்சி. எனக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கு நன்றி" என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு எடுப்பதாக அறிவித்திருந்தது பாமக. ஆனால், கூட்டணியை இறுதி செய்வதாகக் கூறி, நிர்வாக குழு கூட்டம் வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என்று கூறியதோடு தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதத்தில் பாஜக மாநாடு நடைபெறும் என எல்.முருகன் கூறினார்.
"நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்கவே வந்துள்ளேன். நான் தமிழன் அல்ல ஆனால், தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்" என ஈரோட்டில் ராகுல்காந்தி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அடுத்தவர்களுக்கு நன்மை செய்பவர்களாக இருப்பார்கள் என்று கோவை காளப்பட்டி பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி உடைய வாய்ப்பு இருக்கிறது. ஓட்டுக்காக ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு எடுப்பதைக் கைவிடவேண்டும் என்று பிரச்சாரத்தின்போது எல்.முருகன் கூறியுள்ளார்.
சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் பற்றியும் வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
"கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது. கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்" என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தினத்தன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. மேலும், பேரணி நடைபெறும் வழித்தடங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால் அதனை பரிசீலிக்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வார விடுமுறை, குடியரசு தின விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த காரணங்களால் கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனைத் தொடர்ந்து போதிய பேருந்துகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.