Tamil News Today Updates :2021 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி விழிப்புணர்வு வினாடி வினாப் போட்டிகளை தமிழகத்தில் இணைய வழியாக தேர்தல் ஆணையம் நடத்துகிறது. 25-ம் தேதி நடைபெறும் இந்த வினாடி வினாவில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல் படுத்தப்படும் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800-லிருந்து விலகினார் நடிகர் விஜய் சேதுபதி. முரளிதரனின் அறிக்கையைப் பதிவிட்டு, ’நன்றி வணக்கம்’ என ட்விட்டரில் பதிவிட்டு இதனை உறுதிப்படுத்தினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். பா.ஜ.க தலைவர் எல்.முருகன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் அவரின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னையில் 25 நாட்களுக்குப் பிறகு 1000-க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு. கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு உள்ளதென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News Today: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், ஒரு கட்டத்தில் தினசரி 2,000 தொற்றுகள் பதிவாகிவந்தது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் மெல்ல சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து 1,000க்கும் குறைவாக தொற்று பதிவானது. ஆனால், கடந்த சில வாரங்களாக சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் 1,000க்கு மேல் பதிவானது. இதனால், சென்னை மக்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் நேற்று 885 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மீண்டும் 1,000க்குள் பதிவாகியுள்ளது.
Web Title:Tamil news today live coronavirus covid 19 csk ms dhoni
ஆந்திர பிரதேசம் மாநில முதல்வர் ஒய். எஸ். ஜெகன்மோகன்ரெட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாயாரின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் வீர காவலர்களுக்கான நினைவு கல்வெட்டுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 1962 ஆம் ஆண்டு முதல் காவல்துறைப் பணியில் வீரமரணம் அடைந்த 151 காவலர்களுக்கு நினைவு கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகள், 69,768 குளங்கள் மற்றும் ஊருணிகளில் கடந்த 2011-15 வரை ஐந்து ஆண்டுகளில் 50,767 பணிகளின் மூலம் சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டன. 2016-17ஆம் ஆண்டில் 6,497 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2017-18ஆம் ஆண்டில் 13,299 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டன என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.
"தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.
இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?
கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்"
என்று கமல் ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
கர்நாடகா மற்றும் பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியினை நெருங்குவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண்டிகை காலத்தில் நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தற்போது உரையாற்றி வருகிறார்

प्रिय PM,

6 बजे के अपने संदेश में कृपया राष्ट्र को वो तारीख़ बतायें जब आप चीन को भारत भूमि से बाहर निकाल फेंकेंगे।

धन्यवाद।
— Rahul Gandhi (@RahulGandhi) October 20, 2020

அன்புள்ள பிரதமர்,
உங்கள் 6 மணி நேர உரையில், சீன துருப்புகள் இந்தியாவிலிருந்து எப்போது வெளியேற்றப்பதிவார்கள் என்பதை நாட்டு மக்களிடம் சொல்லுங்கள். நன்றி! என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் இணையவழி வினாடி-வினா போட்டி வரும் 25 ஆம் தேதி நடக்கிறது.
டிடிவி தினகரன் செய்திக் குறிப்பு: பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த சில நாட்களாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெல் கொள்முதல் தொடர்பாக விடுத்து வரும் கோரிக்கைகளை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், உண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதில் மட்டுமே உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது. இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மெத்தனத்தால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
விளை நிலங்களில் அவற்றின் உரிமையாளரின் அனுமதியின்றி மின்கம்பங்களை நடுவதற்கு அதிகாரம் அளிக்கும், 135 ஆண்டுகள் பழமையான சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து இந்த மனுவும் அடுத்த மாதம் 27-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 208 குறைந்து ரூ. 37,464க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஓராண்டிற்கு பிறகு அருங்காட்சிய கட்டிட பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. 6 கட்ட ஆய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்று பலரும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறாது. ஆனால் நிச்சயமாக நல்ல மழையை வட தமிழகத்தில் பெறும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்கவில்லை. துவங்கி இருந்தால் தமிழகம் முழுவதும் நல்ல மழை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தற்போது, அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அரசு பணியாளர்களுடன், மாவட்ட மேம்பாடு குறித்து ஆலோசனை செய்து வருகிறார் ராகுல் காந்தி.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியும். முதல்வரின் ஆலோசனைப்படி 7.5% இட ஒதுக்கீடு தர ஒப்புதல் தருமாறு கோரிக்கை வைத்து ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர்கள் பேட்டி.
இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம். தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்தது. வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநருடன் சந்திப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு. கொரோனா சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதை தடுக்காததால் குமரன் சில்க்ஸ் கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு
வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை. பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நாளை முதல் விற்பனையாகிறது. சென்னையில் நாளை முதல் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை. பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் நாளை முதல் விற்பனையாகிறது. சென்னையில் நாளை முதல் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம் விதிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. அபராதம் விதிக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரி ராமாபுரத்தை சேர்ந்த 77 வயதான முத்துக்குமாரன் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 9.61 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது.