/tamil-ie/media/media_files/uploads/2020/07/Rajnath-Singh-Tamil-News-Today-Live.jpg)
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Tamil News Updates: லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தியது சீனா தான் எனவும், இந்திய நிலைகளை நோக்கி முன்னேறியதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிசான் திட்டத்தில் 110 கோடி முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் இதுவரை 46,000 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 117% அதிகம் என தெரிய வந்துள்ளது.
திமுக-வின் பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது. அ.ராசா மற்றும் பொன்முடிக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய கல்விக் கொள்கையில், பள்ளி கல்வி குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டு அதற்காக தனி குழுவை நியமித்திருக்கிறது தமிழக அரசு. 9 முதல் 12 வகுப்பு வரையான மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அரியர் தேர்வுகளை நடத்தத் தயார் என தமிழக அரசு பதில் அளித்திருப்பதாக இன்று செய்திகள் வெளிப்படுகின்றன. எனவே இதில் உள்ள அனைத்து குழப்பங்களும் களையப்படவேண்டும் என்று மு.க ஸ்டாலின் செய்தி வெளியிட்டார்.
மீன்வளத் துறையின் நீடித்த வளர்ச்சிக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்கிறார். சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது. மீன் உற்பத்தியில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 70 லட்சம் டன் கூடுதலாக உற்பத்தியை பெருக்கும் நோக்கில் இந்த திட்டம் அமைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
JEE தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கூறியுள்ளார். JEE தேர்வுகளை வெற்றிகரமாக நடத்த உதவிகரமாக இருந்த மாநில அரசுகளுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளில் இணையவழிக் கல்வி நடைபெறாது என்றும் அந்நாட்களில் விடுமுறை விடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களும் காலாண்டு விடுமுறை நாட்களாக கருதப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
விளையாட்டு மைதாங்கள் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு. மைதானத்திற்குள் 100 பேர் வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மைதானத்துக்குள் நுழையும் வீரர்களை கைகளை கழுவிய பின்னரே அனுமதிக்க வேண்டும். வீரர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். மைதானத்துக்குள் எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, “விழுப்புரம் மாவட்டம் வானூரில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையும் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே, பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மக்களவைக்கு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், மக்களவைக்கு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க நார்வே அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். ஆனால், சாதாரணமாகப் பெற முடியாது. வெற்றி பெற மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.” என்று கூறினார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “பசுமை வழிச்சாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம், சாலைக்கு நிலம் எடுப்பது மட்டுமே மாநில அரசின் பங்கு. திமுக ஆட்சியின் போதும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் சாலை அமைக்க மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பசுமை வழிச்சாலை - உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்து சாலை திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளும்.” என்று கூறினார்.
திமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட துரைமுருகன், “எம்.ஜி.ஆர். என் மீது பாசம் காட்டினார். என் சட்டையை பிடித்து இழுத்து அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். நான் இருக்கும் இடத்தில் நீ இருக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். நான் எனது தலைவர் கலைஞர், என் கட்சி திமுக என்று கூறினேன்” என்று கூறினார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம். பிரதமர் கிசான் திட்டத்தில், 13 மாவட்டங்களில்தான் முறைகேடு நடைபெற்றது. கிசான் திட்டம் முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான். இந்த முறைகேட்டுக்கு மத்திய அரசு இணையதளத்தில் விவசாயிகளே பதிவு செய்யலாம் என்று கொண்டுவந்ததுதான் காரணம். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில், ஈடுபடுத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 81 பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம். பிரதமர் கிசான் திட்டத்தில், 13 மாவட்டங்களில்தான் முறைகேடு நடைபெற்றது. கிசான் திட்டம் முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில், ஈடுபடுத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 81 பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 1.19 கோடி ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி அமைத்தல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல், கூட்டுறவு வங்கி கட்டிடம் மற்றும் கறவை மாடு கடன்கள் வழங்கும் பணிகளை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம். செப்டம்பர் 12 முதல் 5 நாட்களுக்கு மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூடியது. திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகனும், 8-வது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஸ்டாலின் அறிவித்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா ?
1/2 pic.twitter.com/s2dPM49Hsz
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 9, 2020
இங்கிலாந்து: மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலை., கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை திடீர் நிறுத்தம். 3ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், மாவட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்பாடுகளை சேவூர் ராமசந்திரன் மேற்கொண்டு வந்தார். முதலமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights