Advertisment

News Highlights: கறுப்பர் கூட்டம்... மேலும் இருவர் கைது !

கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பாக விசாரணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: கறுப்பர் கூட்டம்... மேலும் இருவர் கைது !

Tamil News Today Updates: கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்தர் என்பவர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisment

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகிய மேலும் இரண்டு பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பான விசாரணை போலீசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 3725 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. சென்னையில் பொது மக்களிடம் உறுவாகியிருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு திறன் குறித்து பொது மக்களிடம் ஆய்வு நடத்தப்படுகிறது. இதற்காக 12000 மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,46,40,349 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87,34,789 ஆக அதிகரிப்பு. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,08,856 ஆக உயர்ந்துள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:55 (IST)20 Jul 2020

    ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திக்கப்படுகிறது என்று ஐசிசி அறிவித்துள்ளது.

    21:01 (IST)20 Jul 2020

    இந்தியாவில் 2023-இல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஐசிசி அறிவிப்பு

    இந்தியாவில் 2023 அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. வழக்கமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் உலகக்கோப்பை போட்டி நடக்கும் நிலையில் அக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    20:53 (IST)20 Jul 2020

    கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படிருந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    19:34 (IST)20 Jul 2020

    கேரளாவில் இன்று புதிதாக 794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கேரளாவில் இன்று புதிதாக 794 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இடஹ்ன் மூலம், கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7611ஆக உயர்ந்தது.

    19:25 (IST)20 Jul 2020

    உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு

    நீலகிரி மாவட்டம், உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என்று மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    18:17 (IST)20 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 2,500ஐ தாண்டியது

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 70 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,551ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:09 (IST)20 Jul 2020

    பத்திரிகையாளர்களை அதிமுக அரசு காக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

    அமைச்சர் ஜெயக்குமார், “ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை துறையினரின் பாதுகாப்பை அதிமுக அரௌ உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

    18:09 (IST)20 Jul 2020

    பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி - சென்னை பல்கலை. அறிவிப்பு

    ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழகம், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

    17:51 (IST)20 Jul 2020

    ஜாமீன் மனு தள்ளுபடி

    'திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி'

    திருப்போரூர் துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி

    * திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    17:50 (IST)20 Jul 2020

    விண்ணப்பப்பதிவு தொடக்கம்

    ‘கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு தொடக்கம்’

    தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது

    இளநிலை பட்டப்படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை அவகாசம்.

    tngasa.in, tndceonline.org - இல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம்

    இணைய வசதி இல்லாத மாணவர்கள் 38 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்

    17:50 (IST)20 Jul 2020

    எத்தனை கட்டடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன?

    கரூரில் மோசமான நிலையில் உள்ள எத்தனை கட்டடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன?

    - உயர்நீதிமன்ற கிளை

    * மோசமான கட்டடங்கள் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

    17:10 (IST)20 Jul 2020

    மதுரை சிறப்பு மருத்துவமனையில் கொரோனா

    சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களுக்கும் மதுரை சிறப்பு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

    * 3 காவலர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

    16:44 (IST)20 Jul 2020

    சிபிஐ விசாரணை

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை

    * இருவரும் உயிரிழந்த கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    * மருத்துவர்கள் வெங்கடேசன், பாலசுப்ரமணியனிடம் அதிகாரிகள் விசாரணை

    16:29 (IST)20 Jul 2020

    1,000 பேருடன் செயல்பட்ட அலுவலகத்தில் 50 பேர் - பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பரிதாப நிலை

    நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உயரமான கட்டிடம் என்கிற பெருமையுடன் ஆயிரம் பேர் பணியாற்றிய நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இருந்தது. நகரப் பகுதியில் மட்டும் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட தரை வழி இணைப்புகள் இருந்தன. மாவட்ட அளவில், சுமார் ஒன்றரை லட்சம் தரை வழி இணைப்புகளும், 2 லட்சத்திற்கு அதிகமான செல்போன் இணைப்புகளும் சேவையில் இருந்தன. இந்த நிலையில், நிறுவனத்தின் பல்வேறு சிக்கல் காரணமாக பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலோனர் வேலையிலிருந்து விலகினர். இந்த நிலையில், தற்போது 50 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தொலைபேசி இணைப்புகளும் குறைந்து விட்டன. 7 மாடி கட்டிடத்தில் 50 பேர் மட்டுமே பணியாற்றுவதால், பராமரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என ஊழியர்கள் தெரிவித்தனர்.

    15:57 (IST)20 Jul 2020

    ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம் - கொரோனா தொற்று அதிகரித்ததால் நடவடிக்கை

    ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தம் என்றும், மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:56 (IST)20 Jul 2020

    இலவச கல்லூரி கல்வி

    ஏழை, எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்லூரி கல்வி

    * சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

    * வரும் 27-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

    15:44 (IST)20 Jul 2020

    பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

    கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 ஆம் தேதி வரை குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    15:40 (IST)20 Jul 2020

    ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாரை காவலில் எடுக்க கோரிய சிபிஐ மனு

    சிபிஐ காவலுக்கு, 3 காவலர்களும் நீதிபதியிடம் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை

    காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில்முத்து ஆகியோரிடம் உடலில் காயங்கள் எதுவும் உள்ளதா என நீதிபதி கேள்வி

    உடலில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என நீதிபதியிடம் காவலர்கள் பதில்

    15:17 (IST)20 Jul 2020

    360 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா

    மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,008-ஆக உயர்வு

    மொத்த உயிரிழப்பு-194, சிகிச்சை பெறுவோர்-2349, குணமடைந்தோர்-7114

    15:16 (IST)20 Jul 2020

    5 ஆயிரத்தை கடந்த கொரோனா

    காஞ்சிபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு

    இன்று ஒரே நாளில் 315 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு

    மொத்த எண்ணிக்கை - 5,029, சிகிச்சை பெறுவோர் - 2,511

    குணமடைந்தோர் - 2,543, உயிரிழந்தோர் - 66

    காஞ்சிபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் பழனி தகவல்

    15:12 (IST)20 Jul 2020

    மத உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது

    கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது மத உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது

    மத்திய அரசின் விதிகளை பின்பற்றி, மத உணர்வுகள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்

    - உயர்நீதிமன்றம்

    * உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்த குடும்பத்தினருக்கு அவகாசம் வழங்க வேண்டும்

    15:12 (IST)20 Jul 2020

    41 பேருக்கு கொரோனா

    கிருஷ்ணகிரியில் மேலும் 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 445 ஆக அதிகரிப்பு

    14:43 (IST)20 Jul 2020

    ஜாமீன் கோரி மனு!

    கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்துக்காக பாஜக என் மீது புகார் அளித்துள்ளது; இரு பிரிவுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் நான் பதிவிடவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

    14:30 (IST)20 Jul 2020

    கறுப்பர் கூட்டம் சேனல்!

    கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளனர்.  கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    13:24 (IST)20 Jul 2020

    கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி

    புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். கருணாநிதி பெயரில் தொடங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு. "காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் நவம்பர் 15 முதல் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார். 

    13:08 (IST)20 Jul 2020

    முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

    புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

    12:39 (IST)20 Jul 2020

    கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

    கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவங்குகிறது. 31 ஆம் தேதிவரை tngasa.in மற்றும் tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92,000 இளநிலை இடங்கள் இதில் நிரப்பப்படும். 

    12:22 (IST)20 Jul 2020

    ‘திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி’

    ‘திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி’ செய்கிறார்கள். ”இந்து விரோதிகள் எனக் கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    11:47 (IST)20 Jul 2020

    முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

    தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் தொழில்கள் தொடங்க முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதல்வர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தொல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கையெழுத்து. கையெழுத்தான 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் தமிழகத்தில் 13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு. கடந்த 4 மாதங்களில் 25 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததால் ரூ.25,527 கோடி முதலீடு ஈர்ப்பு

    11:33 (IST)20 Jul 2020

    சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கு

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாரை காவலில் எடுக்க சிபிஐ மனு அளித்துள்ளது. காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை, செல்லதுரை ஆகியோரை காவலில் எடுக்க மனு. 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    11:29 (IST)20 Jul 2020

    காத்திருந்து திரும்பிய ராஜஸ்தான் போலீஸ்

    ஹரியானாவின் மானேசரில் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு நேற்று மாலை ராஜஸ்தான் போலீசார் சென்றுள்ளனர். சுமார் 20 நிமிடம் அங்கு காத்திருந்த நிலையிலும், அந்த சொகுசு விடுதியின் வாயில் கதவுகள் திறக்கப்படாததால், போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக ராஜஸ்தான் போலீஸார் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறப்படும் சொகுசு விடுதிக்கு சென்று திரும்பியுள்ளனர். 

    10:46 (IST)20 Jul 2020

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை

    10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார். பள்ளிகல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய ஆலோசனை. காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறை அளிக்கலாமா என இதில் ஆலோசிக்கப்படுகிறது. 

    10:45 (IST)20 Jul 2020

    சென்னையில் அதிகரிக்கும் பலி

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இன்று மட்டும் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.  

    தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பது, தமிழகத்தில் இயங்கும் சில சுயநிதி கல்லூரிக்கு எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை தொடங்க அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது .

    இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதினால், இந்த மருத்துவமனையில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment