/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-05T143439.551.jpg)
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
Tamil News Today Updates: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் நடிகர் கமல் ஹாசன். அவர் குணமடைய வேண்டி, திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட, விஜயகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக, பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னையில் 21 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 1000-ல் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக தமிழக அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமருக்கு ஏற்பட்டதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.