Tamil News Today: மறைந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. ஈடு செய்ய முடியாத இழப்பில் திரையுலகம்!

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 17 காசு குறைந்து ரூ.76.55க்கு விற்பனையாகிறது.

By: Updated: September 26, 2020, 07:26:03 AM

Tamil News Today Updates: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் நடிகர் கமல் ஹாசன். அவர் குணமடைய வேண்டி, திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட, விஜயகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக, பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னையில் 21 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 1000-ல் கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக தமிழக அரசை பாராட்டும் நிர்பந்தம் பிரதமருக்கு ஏற்பட்டதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil news today live coronavirus drug case ncb ipl 2020 csk vs dc

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X