Tamil News Today Updates: பரபரப்பான சூழலில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. கட்சியை அடுத்து யார் நடத்துவதென தலைவர்கள் வெளியிட்ட முரண்பட்ட கருத்தால், அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அறிவுறுத்தலையடுத்து புதுச்சேரியில் முற்றிலுமாக இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. தர்மபுரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 21 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிர்வாகிகளுக்கு ஆதரவாக இருப்பதை விட, கட்சிக்கு விஸ்வாசமாக இருங்கள் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக்காட்டி சீனா, பாகிஸ்தானுக்கு வெளியுறவுத்துறை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 5975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியது. மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை இந்தாண்டே நிறைவேற்றக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
'சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே' என்று உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. pic.twitter.com/4s0csUBP43
— Udhay (@Udhaystalin) August 24, 2020
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காய்ச்சல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி உள்ளது.. 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்த நிலையில், தற்போது 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. முகக் கவசம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் வக்குகக்கோரி சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மலைப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதியான வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
தாம்பரம் அருகே சாலையில் முகக் கவசம் அணியாமல் சென்ற தினேஷ் என்ற இளைஞரை தம்பரம் நகராட்சி ஊழியர் குமாரசாமி ஏன் முகக் கவசம் அணியவில்லை என்று கேட்டதற்கு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். காயம் அடைந்த நகராட்சி ஊழியர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய தினேஷ் என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.
அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு.” என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டாம் என்று மத்தி உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. இதனைத் தொடந்து, தமிழகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்துள்ளார். தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights