/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-26T122931.731.jpg)
Tamil News Today Updates: ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.அரபி கடலின் மேற்கு பகுதியில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், இன்று வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எதிர்கட்சிகள் மீது பாய்ந்த அரசு, குட்கா விற்பனையை கட்டுப்படுத்துவதில் பதுங்கிவிட்டது என தமிழக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு.
முதல்வரின் நாளைய ஆய்வுக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வரையிலான சுமார் 303 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆற்றில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேப்காஸ் நிறுவனம் சார்பில் தற்போது 3 பேர் கொண்ட குழு மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கையைதமிழக அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் இந்த ஆண்டு 19,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கோவா பொது நுழைவுத் தேர்வு கூட வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதே முறையில் JEE & NEET-ஐயும் நடத்த முடியும்
- கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#POSTPONEJEE_NEET எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.
அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன்.
நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 26, 2020
திருச்சியை புதிய தொல்பொருள் வட்டமாக அறிவித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) உத்தரவு!
திருச்சி, ராஜ்கோட் (குஜராத்), ஜபல்பூர் (ம.பி), ஜான்ஸி, மீருட் (உ.பி), ராய்கன்ச் (மேற்கு வங்கம்), ஆகிய 6 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ASI அறிவிப்பு.
அரியலூர் -44
செங்கல்பட்டு -294
சென்னை - 1,290
கோவை -484
கடலூர் -286
தர்மபுரி - 36
திண்டுக்கல் -37
ஈரோடு -102
க.குறிச்சி -78
காஞ்சிபுரம் -329
குமரி -159
கரூர் -32
கிருஷ்ணகிரி -33
மதுரை -31
நாகை -84
நாமக்கல் -70
நீலகிரி-4
பெரம்பலூர்-18
புதுக்கோட்டை-143
ராமநாதபுரம்-39
ராணிப்பேட்டை-121
சேலம்-451
சிவகங்கை-18
தென்காசி-98
தஞ்சை-123
தேனி- 184
திருப்பத்தூர்-56
திருவள்ளூர்-280
தி.மலை-58
திருவாரூர்- 105
தூத்துக்குடி-105
நெல்லை-156
திருப்பூர்-97
திருச்சி-83
வேலூர்-158
விழுப்புரம்-189
விருதுநகர்-79
தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா பாதிப்பு.
மொத்த பாதிப்பு 3,97,261 ஆக உயர்வு.
தமிழகத்தில் மேலும் 118 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.
அதிகபட்சமாக சென்னையில் 20, கோவையில் 10, காஞ்சிபுரம் & சேலத்தில் தலா 8 பேர் உயிரிழப்பு.
மாநிலம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்தது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டத்தின்கீழ் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன?
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது ?
அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், திரைப்படத்தில் சம்பாதித்ததை, திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே என்று கூறியுள்ளார்.
அதில் நடிகர் சூர்யா குறிப்பிடத் தகுந்தவர் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஓடிடி எதிரான பிரச்சனை சூர்யாவிற்கு எதிராக திருப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள் என்று கூறியுள்ளார்.சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள், மனம் வலிக்கிறது என்று கூறியுள்ள பாரதிராஜா, தனிநபர் இடைவெளியுடன் காண, ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில், சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று கூறியுள்ள பாராதிராஜா, தயாரிப்பாளர்கள், தியேட்டர்உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே, வாருங்கள், பேசித்தீர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாரூர்: அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை
புதுக்கோட்டை: அறந்தாங்கி, திருமயம், திருவரங்குளம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை
தேனி: பெரியகுளம், கும்பக்கரை, சோத்துப்பாறை அணை, முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை
Statement about #SooraraiPottru OTT issue..@Suriya_offl @2D_ENTPVTLTD pic.twitter.com/2UAW1TG2YH
— Bharathiraja (@offBharathiraja) August 26, 2020
சூரரைப் போற்று ஓடிடி ரிலீஸ் தொடர்பாக இயக்குனர் பாரதி ராஜா செய்திக் குறிப்பை வெளியிட்டார்.
"குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்றுவதில் முதலமைச்சர் பழனிசாமியும் - பாஜக அரசும் அமைத்துள்ள ரகசிய கூட்டணி என்ன?
அவர்களை சிபிஐ நெருங்க விடாமல் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது?"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
link:https://t.co/QtytlUGc0k pic.twitter.com/1pqHRzjR4e
— DMK (@arivalayam) August 26, 2020
மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம்! என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை – 26.08.2020 pic.twitter.com/5hV4AML57v
— DIPR TN (@TNGOVDIPR) August 26, 2020
அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு/ இறுதிப் பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் (ஆகஸ்ட் - 18 ) தெரிவித்தது.
டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 450 பேரும் டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றப்பட்டனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம். டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடத்தினர்.
11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு - உச்சநீதிமன்ற அறிவுரைபடி நாளை விசாரணைக்கு வருகிறது. நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார். தகுதி நீக்க கோருவது தொடர்பாக, 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்த நிலையில் நாளை விசாரணை..
இந்த ஆண்டு #நீட் தேர்வை எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 13% குறைந்துவிட்டது. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கலைந்து போகும் கொடுமைக்கு சாட்சி இது! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மத்திய அரசே? #NEET
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) August 26, 2020
ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது சரி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 63,173 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்; மேலும் 1,059 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31,67,323-ல் இருந்து 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights