Advertisment

News Highlights: சமூகநீதி அரசியலுக்கு பேரிழப்பு- பஸ்வான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

74 வயதான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
ram vilas paswan death

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு

Tamil News Today Updates: மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று உயிரிழந்துள்ளார். 74 வயதான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவரது மகன் சிராஜ் பஸ்வான் தெரிவித்தார்.

Advertisment

2021 சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 10 நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டதை தொண்டர்கள் கொண்டாடினர். அறிவிப்பைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கே சென்று நன்றி தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அதிமுக-வில் அமைக்கப்பட்டு, அவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக-வில் நடப்பது ஆட்சியல்ல, வீழ்ச்சி தான் என, முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வுடனும் பாஜக கூட்டணி வைக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சசிகலா, இளவரசி, சுதாகரனின் 2000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கேரளாவில் அதிவேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. ஒரே நாளில் 10000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    23:35 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு: சமூகநீதியின் உறுதிமிக்க தூண் சாய்ந்தது - ஸ்டாலின் இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதிப் போராளி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவெய்திய செய்தி கேட்டு பெருந்துயரத்திற்கு உளானேன். கலைஞரின் உற்ற நண்பர், என்னிடமும் மிகுந்த நெருக்கம் காட்டி நேசம் பாராட்டியவர். சமூகநீதியின் உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

    23:28 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத்துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம்விலாஸ் பாஸ்வானின் அகால மறைவு பற்றி அறிந்து நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைகிறேன். ராம் விலாஸ் பாஸ்வான் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.

    23:16 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அஞ்சலி

    மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு, இந்திய குடியரசு கட்சி தலைவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    ராம்தாஸ் அத்வாலே தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் நாடு முழுவதும் பிரபலமாக இருந்த தலித்துகளின் தொலைநோக்குத் தலைவர்; நாடாளுமன்ற அரசியலில் தலித்துகளின் பிரபலமான முகத்தை இழந்துவிட்டனர். இந்திய அரசியல் மற்றும் சமூகத் துறையில் சரிசெய்ய முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது. மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதயபூர்வமான அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

    23:09 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு; பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளர்.

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அமைச்சரும் பீகாரின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.

    23:04 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவால் நாடு ஒரு தொலைநோக்கு பார்வைகொண்ட தலைவரை இழந்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக நீண்ட காலம் பணியாற்றிய உறுப்பினராக இருந்தார். அவர் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்தார். மேலும், விளிம்புநிலை மக்களின் வெற்றியாளராக இருந்தார். இளைஞராக இருந்தபோது அவர் ஒரு தீப்பொறி போன்ற செயற்பாட்டாளர். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின்போது ஜெயபிரகாஷ் நாராயண் போன்றவர்களால் வழிநடத்தபட்ட ராம்விலாஸ் பாஸ்வான் பொறாமைப்படக்கூடிய அளவில் வெகுமக்களுடன் உறவைக் கொண்டிருந்தார். மேலும், அவர் அவர்களின் நலனுக்காக தீவிரமாக பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.”

    22:54 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு: சமூகநீதி அரசியலுக்குப் பேரிழப்பு - திருமாவளவன் இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு சமூகநீதி அரசியலுக்குப் பேரிழப்பு என்று விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    22:43 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராம்விலாஸ் பாஸ்வானின் அகால மரணம் குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. ஏழைகள்-நலிந்தவர்கள் இன்று ஒரு வலுவான அரசியல் குரலை இழந்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.

    22:11 (IST)08 Oct 2020

    ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு; நண்பரை இழந்துவிட்டேன் - பிரதமர் மோடி இரங்கல்

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி, நான் ஒரு நண்பரை இழந்துவிட்டேன் என்று கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் வார்த்தைகளைத் தாண்டி வருத்தப்படுகிறேன். நம் தேசத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அது ஒருபோதும் நிரப்பப்படாது. ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவு தனிப்பட்ட இழப்பு. நான் ஒரு நண்பரை இழந்துவிட்டேன், மதிப்புமிக்க சக அமைச்சர் மற்றும் ஒவ்வொரு ஏழை மக்களும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    21:34 (IST)08 Oct 2020

    வெல்வெட் இண்டர்நேஷ்னல் நிறுவனர் சி.கே.ராஜ்குமார் மரணம்

    வெல்வெட் இண்டர்நேஷ்னல் நிறுவனர் சி.கே.ராஜ்குமார் உடல் நலக்குறைவு உயிரிழந்தார். அவருக்கு வயது 68. சி.கே.ராஜ்குமார், ஷாம்பூ, இருமல் மருந்து ஆகியவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதைக் கொண்டுவந்ததில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

    20:52 (IST)08 Oct 2020

    மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்

    மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் காலமானதாக அவருடைய மகன் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 74.

    19:51 (IST)08 Oct 2020

    தொல்லியல் பட்டயப்படிப்பு தகுதியில் தமிழ் மொழியை சேர்க்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    மத்திய அரசின் தொல்லியல் முதுகலைப் பட்டயப் படிப்பு சேர்க்கை தகுதியில் தமிழ் மொழியை சேர்க்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    17:47 (IST)08 Oct 2020

    சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தம் - தமிழக அரசு

    சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் தேர்வு நடைமுறை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    16:55 (IST)08 Oct 2020

    2020ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபர் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் குளுக்குக்கு அறிவிப்பு

    2020ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபர் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் கவிஞர் லூயிஸ் குளுக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் லூயிஸ் குளுக் 12 கவிதைத் தொகுப்புகளையும் கவிதை குறித்த கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவருக்கு 2020ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    16:16 (IST)08 Oct 2020

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம்

    15:59 (IST)08 Oct 2020

    அகில இந்திய மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் 27 சதவீத இடஒதுக்கீடு- முதல்வர் விளக்கம்

    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு அஇஅதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    15:54 (IST)08 Oct 2020

    பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம

    தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று  தொடங்கியது.

    இம்மாதம் 28-ஆம் தேதிவரை இது நடைபெற உள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகளுக்கு நான்கு கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    அதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஒதுக்கப்பட்ட ஆறாயிரத்து 755 இடங்களில் கணிசமான இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

    தொழிற் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி இம்மாதம் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    15:49 (IST)08 Oct 2020

    அக்.10 முதல் மலை ரயில் இயக்கப்படுகிறது

    உதகை-குன்னூர் இடையே அக்.10 முதல் மலை ரயில் இயக்கப்படுகிறது.    

    14:50 (IST)08 Oct 2020

    பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்

    பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் கனடாவில் நடைபெறும் கருத்தரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார்.

    இந்தக் கருத்தரங்கில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உற்பத்தித் துறை நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    14:30 (IST)08 Oct 2020

    கொரானாவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் - டி ஆர் பி ராஜா வரவேற்பு

    பிரதமர் இன்று தொடங்கி வைத்த கொரானாவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி ஆர் பி ராஜா வரவேற்றார்.  

    14:26 (IST)08 Oct 2020

    எஸ்.பி வேலுமணி ட்வீட்

    14:23 (IST)08 Oct 2020

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்களை மீண்டும் அதே காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டும்

    பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் மூவர்மீது அரசு நடவடிக்கை எடுத்த செயல் கண்டிக்கத்தக்கது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்களை மீண்டும் அதே காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்றிட ஆணையிட வேண்டும். இது பெரியார் வழிவந்த எம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரில் இயங்கும் ஆட்சி என உறுதிப்படுத்த வேண்டும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்

    13:22 (IST)08 Oct 2020

    கர்நாடக முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

    கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழ் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை

    12:43 (IST)08 Oct 2020

    மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீடு குறித்த வழக்கு

    கல்லூரி பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி வழக்கு. உயர்கல்வித்துறை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    11:59 (IST)08 Oct 2020

    எம்.எல்.ஏ பிரபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவி சவுந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

    11:22 (IST)08 Oct 2020

    தமிழை சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும்

    மத்திய தொல்லியல்துறை பட்டய படிப்புக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிப்பு என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு. பழைய அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழை சேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மனுதாரர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    10:40 (IST)08 Oct 2020

    திமுக முப்பெரும் விழா அறிவிப்பு

    10:19 (IST)08 Oct 2020

    கனிமொழி எம்.பி கேள்வி

    கட்டுமான பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்படாது என்ற ஆணையை நீக்கியது ஏன்? மின்இணைப்பு தொடர்பான ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டியதன் அவசியம் என்ன? விதியை நீக்கினால் அனுமதியை மீறி கட்டடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 

    09:46 (IST)08 Oct 2020

    மேட்டூர் அணை நீர் வரத்து

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,977 கன அடியில் இருந்து 8,105 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.05 அடியாகவும், நீர் இருப்பு 62.34 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது

    09:25 (IST)08 Oct 2020

    பி.இ ஆன்லைன் கலந்தாய்வு

    தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்த 1.10 லட்சம் மாணவர்கள் 4 குழுவாக பிரிக்கப்பட்டு தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. முதல் குழுவை சேர்ந்த 12,263 மாணவர்களுக்கு ஆன்லைனில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. கட்டணம் செலுத்த 4 நாள், விருப்ப கல்லூரியை இறுதிப்படுத்த 2 நாள் அவகாசம் தந்து அக்.28 வரை கலந்தாய்வு நடக்கிறது. 

    09:23 (IST)08 Oct 2020

    புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

    புதுச்சேரி காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றிய சரவணன் கொரோனாவுக்கு பலி. தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் எஸ்.ஐ. சரவணன்

    09:17 (IST)08 Oct 2020

    ட்ரம்ப் ட்வீட்

    எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக் கொடுத்துள்ளது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். 

    சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சிறுதாவூர் பங்களாவில் வருமானவரித்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. வருமானவரித்துறை சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை முடக்கியுளது. வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
    Dmk Coronavirus Corona Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment