/indian-express-tamil/media/media_files/4QsvDfKnvNYeQ99bJ8JU.png)
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருக்கும் நிலையில், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்தால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என காத்திருக்கிறார்கள்.
-
Jul 19, 2025 10:11 IST
வேலூர்: காட்பாடியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடியில், 2 வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர் பகுதியில் வசிக்கும் சிவக்குமார், அவரது சகோதரர் சுதாகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
-
Jul 19, 2025 09:50 IST
அதிமுக மாஜி பெண் எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நிறைவு
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 17 மணிநேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நள்ளிரவில் நிறைவு பெற்றது. 2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சோதனை நடத்தினர். 17 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவித்தனர்.
-
Jul 19, 2025 09:49 IST
வரதட்சணை கொடுமை: தலைமை காவலர் பூபாலன் கைது
மனைவியை வரதட்சணை கொடுமை செய்த வழக்கில் தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அப்பன்திருப்பதி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பூபாலன் (வயது 38). இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக அப்பெண் புகார் தெரிவித்து உள்ளார்.
-
Jul 19, 2025 09:17 IST
நெல்லை சந்திப்பில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம்
நெல்லை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் வேனில் பயணித்த 2 பெண்கள், சிறுவன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்
-
Jul 19, 2025 09:16 IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வார இறுதி நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருக்கும் நிலையில், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்தால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என காத்திருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.