Advertisment

அதிமுக மூத்த நிர்வாகிகள் குழு திடீர் ஆலோசனை: கட்சி அமைப்புகளில் மாற்றம்

கட்சிக்குள் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Today Live

Tamil News Today Live

Tamil News Today Live Updates :  அதிமுக மூத்த நிர்வாகிகள் குழு திடீர் ஆலோசனை செய்து, கட்சி அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணி முதல் தொடர்ந்து 4 மணி நேரமாக, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சிக்குள் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு முடக்கம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஆகையால் இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4-ம் நாளாக நேற்றும் கொரோனா எண்ணிக்கை 4000-ஐ கடந்தது. தமிழகத்தின் மொத்த உயிரிழப்பு 1500-ஐ கடந்துள்ளது. தகுதியற்றவர்களின் தகுதி விரைவில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சுக்கு, திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

உலகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. தற்போது நாடு முழுவதும் 6,87,760 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,15,55,414ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,34,456 ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,36,720ஆகவும் அதிகரித்துள்ளது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கன மழை வெளுத்து வாங்குவதால், பல்வேறு சாலைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:28 (IST)06 Jul 2020

    மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை

    மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஜூலை 31-ம் தேதிக்குள் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு வாய்ப்புள்ளது, என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான சட்டபூர்வமான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது, தமிழகத்திற்கு கிடைத்த நல்ல செய்தி. மத்திய அரசு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான ஒவ்வொரு சட்ட நடவடிக்கைகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    21:33 (IST)06 Jul 2020

    5,368 பேருக்கு கொரோனா

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து மொத்த பாதிப்பு  2,11,987 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 204 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 9,026 ஆக அதிகரித்துள்ளது.

    20:58 (IST)06 Jul 2020

    டெல்லியில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

    டெல்லியில் ஒரே நாளில் 1,379 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 1,00,823 ஆக உயர்ந்துள்ளது.. ஒரேநாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளநிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது.

    20:31 (IST)06 Jul 2020

    தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி

    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    20:10 (IST)06 Jul 2020

    முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வளர்மதி, விரைவில் உடல்நலம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் பழனிசாமி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    19:25 (IST)06 Jul 2020

    மாணவி எரித்துக்கொலை

    திருச்சி அருகே சோமரசன்பேட்டை பகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    18:59 (IST)06 Jul 2020

    100 ஆக உயர்வு

    திருவள்ளூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை (1,082), செங்கல்பட்டு (128) மாவட்டங்களை தொடர்ந்து அதிக பலி எண்ணிக்கை கொண்ட மாவட்டமாக திருவள்ளூர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    18:30 (IST)06 Jul 2020

    மாவட்ட ரீதியாக கொரோனா உயிரிழப்புகள்

    சென்னை- 30

    செங்கல்பட்டு- 8

    மதுரை- 7

    திருவள்ளூர்- 5

    காஞ்சிபுரம் - 3

    திருவண்ணாமலை - 3

    தூத்துக்குடி - 1

    விருதுநகர் - 1

    திருச்சி - 1

    ராமநாதபுரம் - 1

    விழுப்புரம் - 1

    இன்று உயிரிழப்பு - 61 

    மொத்த உயிரிழப்புகள் -  1,571

    18:04 (IST)06 Jul 2020

    3,827 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,747 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்துள்ளது.

    17:41 (IST)06 Jul 2020

    கொரோனா : திருச்சியில் ஒரேநாளில் 8 பேர் உயிரிழப்பு

    திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:29 (IST)06 Jul 2020

    தமிழக அரசின் மனு தள்ளுபடி

    தமிழக அரசு ஊழியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    16:53 (IST)06 Jul 2020

    அமைச்சர் தங்கமணி கண்டனம்

    திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் தங்கமணி கண்டனம்

    * மின் கட்டணம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிடுவதா?

    கொரோனா காலத்தில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட மின் அளவை கணக்கிடுவதில் சிரமம்- அமைச்சர்

    * முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை கணக்கிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வசூல்- அமைச்சர்

    கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பதாக அரசு மீது அவப்பழியை சுமத்துவதா?- அமைச்சர் தங்கமணி

    16:49 (IST)06 Jul 2020

    ஊரடங்கு விதிமீறல் - மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேரை கைது செய்துள்ள போலீசார், 6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் இதுவரை 17 கோடியே 21 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    16:22 (IST)06 Jul 2020

    தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

    10 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை தொடங்கியது

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

    சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை

    16:21 (IST)06 Jul 2020

    எண்ணிக்கை 12ஆக உயர்வு

    நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு.

    சென்னை தனியார் மருத்துவமனையில் இளநிலை பொறியாளர் ஜோதிராமலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    16:05 (IST)06 Jul 2020

    4 காவலர்களுக்கு கொரோனா

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி காவல்நிலையத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது.

    15:58 (IST)06 Jul 2020

    11, 12ம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து

    11, 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்புகளில் பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    15:52 (IST)06 Jul 2020

    அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம்

    பான்-ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு

    * கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மேலும் அவகாசம் வழங்கியது மத்திய அரசு

    15:36 (IST)06 Jul 2020

    சீன பிரதிநிதிகளுடன் ஆலோசனை

    கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலி

    * தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் ஆலோசனை

    எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

    * எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் இரு தரப்பும் உறுதி

    15:15 (IST)06 Jul 2020

    2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்

    பண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 மாதத்தில் மட்டும் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் முட்டையின் விலை குறைந்து இருப்பதும், முட்டை உற்பத்தி செலவு அதிகரித்தும் உள்ளதால் தாங்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    15:14 (IST)06 Jul 2020

    சிபிசிஐடி விசாரணை

    சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை'

    தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை

    தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

    14:45 (IST)06 Jul 2020

    புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்வதை வரவேற்கிறேன்

    புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குளறுபடியான இந்த புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, நான், ஏற்கனவே கோரியிருந்ததாக தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக கூறியுள்ள ஸ்டாலின், முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது என விமர்சித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    14:45 (IST)06 Jul 2020

    காவலர்களிடம் விசாரணை

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களிடம் விசாரணை

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் பியூலா, காவலர் தாமஸ் ஆகியோரிடம் விசாரணை

    மேலும் சில காவலர்களிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி திட்டம்

    14:20 (IST)06 Jul 2020

    சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்

    நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கிவைப்பு

    * சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது

    * தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்

    - அமைச்சர் விஜயபாஸ்கர் 

    14:20 (IST)06 Jul 2020

    2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

    * 1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது, ராஜீவ் காந்தி மருத்துவமனை

    * ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை

    14:20 (IST)06 Jul 2020

    சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

    மதுரையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

    கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது

    மதுரையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

    பாதிப்பு பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

    14:19 (IST)06 Jul 2020

    நாள்தோறும் அதிக பாதிப்பு

    மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிக பாதிப்பு பதிவாகிறது

    * இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை

    14:19 (IST)06 Jul 2020

    தலைமை செயலாளர் ஆலோசனை

    15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை

    * கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

    * சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை

    13:53 (IST)06 Jul 2020

    விலையின்றி அரிசி

    ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி அரிசி வழங்கப்படும்

    * அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    * ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும்

    ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் வரை வழங்கப்படும்

    13:52 (IST)06 Jul 2020

    கட்டணம் நிர்ணயிக்க முடியாது

    ஊரடங்கு காலத்திற்கு முந்தைய மாத கட்டணத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும்

    * முந்தைய மாதம் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது

    *சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

    13:29 (IST)06 Jul 2020

    இந்தியாவில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

    13:16 (IST)06 Jul 2020

    சாத்தான்குளம் வழக்கு: ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்தவரிடம் விசாரணை

    தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கொரோனா தன்னார்வலர் என்ற பெயரில் செயல்பட்ட கணபதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

    12:56 (IST)06 Jul 2020

    ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

    ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் ஜூலை 15-ல் வெளியிடப்படும் என மத்திய அரசு தகவல். ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் ஜூலை 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

    12:20 (IST)06 Jul 2020

    சாத்தான்குளம் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா?...தானாக அழிந்ததா?... பதிவுகளை மீட்கும் பணி தீவிரம்

    சிசிடிவி காட்சிகளின் அமைப்புகளை தங்களால் மாற்ற இயலாது என காவலர் வாக்குமூலம். சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல் நிலைய கணினி பொறுப்பில் இருந்த காவலர், மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் என தகவல். சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகள் ஒரே நாளில் DELETE ஆகும் வகையில் செட் செய்யப்பட்டிருப்பதாக சொன்னதில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

    12:11 (IST)06 Jul 2020

    தேனியில் மேலும் 110 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மருத்துவர்கள் உள்பட 110 பேருக்கு இன்று புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் மொத்த பாதிப்பு 1,167ஆக உயர்வு. 810 பேர் தற்போது சிகிச்சை பெறுகின்றனர். 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

    12:08 (IST)06 Jul 2020

    11, 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் மாற்றம்

    11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறை திட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டு, பழையபடி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை இந்த பாட திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அறிவித்துள்ளது. 

    11:46 (IST)06 Jul 2020

    பா.வளர்மதிக்கு கொரோனா

    முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    11:27 (IST)06 Jul 2020

    என்.எல்.சி பாய்லர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

    நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு. விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 

    10:47 (IST)06 Jul 2020

    சென்னையில் சிகிச்சை பெறுவோர் விபரம்

    சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு. சென்னையில் மொத்தம் தற்போது 24,890 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2837 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் - 2416, அண்ணா நகர் -2349, தேனாம்பேட்டை - 2317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை-2275, அடையாறு-1913, திரு.வி.க. நகர்-1858, திருவொற்றியூர்-1214 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

    10:43 (IST)06 Jul 2020

    என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

    கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர ஊழியர் வைத்தியநாதன் உயிரிழந்தார்

    10:22 (IST)06 Jul 2020

    சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு

    சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,082ஆக உயர்வு

    10:12 (IST)06 Jul 2020

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவிற்கு 27 பேர் உயிரிழப்பு

    சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவிற்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆயுதப்படை காவலர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் பலி. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    09:53 (IST)06 Jul 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 24,248 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6.97 லட்சமாக அதிகரித்துள்ளது. 4.24 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    09:41 (IST)06 Jul 2020

    புராதான சின்னங்கள் பார்வைக்கு அனுமதி இல்லை - தொல்லியல் துறை

    நாடு முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய நினைவு சின்னங்களை, பொது மக்கள் பார்வையிட ஏதுவாக  திங்கள்கிழமை முதல் திறக்க மத்திய கலாச்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால், மாமல்லபுரம் புராதான சின்னங்கள் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்படவில்லை என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. புராதன சின்னங்கள் திறப்பது குறித்து தமிழக அரசு தொல்லியல் மற்றும் சுற்றுலாத் துறையுடன் கலந்து ஆலோசித்து. பின்னர் திறக்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    09:25 (IST)06 Jul 2020

    மதுரையில் உயரும் கொரோனா

    மதுரை மாவட்டத்தில் புதிதாக 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4380 ஆக உயர்வு..

    09:04 (IST)06 Jul 2020

    சென்னையில் புதிய தளர்வுகள்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாலை 6 மணிவரை மளிகைக் கடைகள் செயல்படவும், இரவு 9 மணி வரை ஓட்டல்கள் செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

    Tamil nadu news today:சீனாவுக்கு முன்பே பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபிளோரியானா நகரில் கழிவு நீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்த போது இது தெரிய வந்துள்ளது. இதனை பெடரல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரேசிலில் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில்தான் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment