Advertisment

Tamil News Today : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - பாரதிய ஜனதா தலைவர், தந்தை, சகோதரர் உள்ளிட்டோர் பலி

சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தவேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil News Today Live Updates :  தமிழகத்தில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அதிலிருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதோடு புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1203 ஆகக் குறைந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தது போல மாறியது சென்னையின் தினசரி பாதிப்பு. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 2413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 334 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது.

Advertisment

அதி நவீன வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை சென்னை கிண்டியில் திறந்து வைத்தார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னொரு பொது முடக்கத்துக்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக வழக்கு போடப்பட்டிருக்கிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:36 (IST)08 Jul 2020

    தீவிரவாதிகள் தாக்குதல் – பாரதிய ஜனதா தலைவர் பலி

    காஷ்மீர் மாநிலம் பந்திபூராவில், இரவு 9மணியளவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அம்மாவட்ட் முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஷேக் வாசிம் பாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் வாசிமின் சகோதரர் மற்றும் அவரது தந்தை பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

    ஓமர் அப்துல்லா இரங்கல் : இந்த நிகழ்விற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். வாசிம் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களை அவர் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

    21:58 (IST)08 Jul 2020

    ரேவதியிடம் மீண்டும் விசாரணை

    சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் தொடர்பாக, தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியிருந்த நிலையில், மீண்டும் அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    21:36 (IST)08 Jul 2020

    அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா

    சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவர் கருப்பணன் மகன். கொரோனா உறுதியானதை தொடர்ந்து கருப்பணன் மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    21:09 (IST)08 Jul 2020

    ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ரத்து

    ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

    20:34 (IST)08 Jul 2020

    பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

    இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கிரிமீலேயரில் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கிடக் கூடாது. தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கிரிமீலேயரில் திருத்தம் கொண்டு வந்தால் தகுதியானவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    20:32 (IST)08 Jul 2020

    125 அடி உயர அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

    ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் 125 அடி உயர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    20:24 (IST)08 Jul 2020

    இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

    இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கிரிமீலேயரில் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கிடக் கூடாது. கிரிமீலேயரில் திருத்தம் கொண்டு வந்தால் தகுதியானவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” வலியுறுத்தியுள்ளார்.

    20:24 (IST)08 Jul 2020

    மதுரையின் பலபகுதிகளில் மழை

    மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரைமணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக, பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டதால் மக்கள் பாதிப்படைந்தனர். 

    20:12 (IST)08 Jul 2020

    சாத்தான்குளம் சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது

    சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலிசார் இன்று காலை முதல் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் தாமஸ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    20:08 (IST)08 Jul 2020

    14 மாநிங்களுக்கு ரூ.6,195.08 கோடியை மத்திய அரசு கடந்த 8ம் தேதி வழங்கியது - மத்திய நிதியமைச்சர்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, வருவாய் பற்றாக்குறை மானிய பங்கீட்டுக்கு பிந்தைய, 4 வது சரிநிகர் மாத தவணை தொகையாக 14 மாநிங்களுக்கு ரூ.6,195.08 கோடியை மத்திய அரசு கடந்த 8ம் தேதி வழங்கியது. இது நெருக்கடி காலத்தில், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரத்தை அளிக்கும்.” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    19:47 (IST)08 Jul 2020

    ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்; ஜூலை 10-ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

    மத்தியப் பிரதேசம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகா வாட் அல்ட்ரா-மெகா சோலார் மின் நிலையத்தை
    பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 10ம் தேதியன்று காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இது ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி நிலையங்களில் ஒன்று ஆகும்.

    19:36 (IST)08 Jul 2020

    மார்ச் 24ம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை

    12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத விடுபட்ட மாணவர்கள் வரும் ஜூலை 27ம் தேதி தேர்வு எழுதிக் கொள்ளலாம். இதற்கான நுழைவுச் சீட்டினை அவரவர் பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தனித் தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    18:50 (IST)08 Jul 2020

    5 ஆயிரத்தை கடந்தது

    மதுரையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,057 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,811 பேருக்கு தொற்று உள்ளது. 1160 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். 84 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18:42 (IST)08 Jul 2020

    மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு

    சென்னை -1261

    மதுரை - 379

    திருவள்ளூர் - 300

    வேலூர் - 160

    செங்கல்பட்டு - 273

    தூத்துக்குடி - 141

    காஞ்சிபுரம் -133

    கன்னியாகுமரி - 115

    விழுப்புரம் -106

    தேனி - 75

    கடலூர் -71

    விருதுநகர் -70

    சேலம் - 68

    ராமநாதபுரம் - 65

    திருவண்ணாமலை - 55

    தென்காசி - 27

    18:17 (IST)08 Jul 2020

    சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது சிபிஐ

    சாத்தான்குளம் தந்தை - மகண் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

    18:15 (IST)08 Jul 2020

    இன்று மட்டும் 64 பேர் உயிரிழப்பு

    இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.

    18:14 (IST)08 Jul 2020

    74,167 பேர் குணம்

    இன்றுமட்டும் 3,051 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக அதிகரித்துள்ளது

    18:13 (IST)08 Jul 2020

    3,756 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று புதிதாக 3756 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,261 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது. 

    17:34 (IST)08 Jul 2020

    NEET, JEE தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

    மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் NEET, JEE Main மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தேர்வு நடக்கும் போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயமாக செய்யப்பட வேண்டும். தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கும் உடல் நிலை சான்றிதழ் அவசியம் அளிக்கப்பட வேண்டும். தேர்வு மைய சுவர்கள், கதவுகள், வாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். புதிய முக கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    16:51 (IST)08 Jul 2020

    உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எல்.பி.ஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    16:09 (IST)08 Jul 2020

    ஜூன் 15-ம் தேதி என்ன நடந்தது அறிய ஆவலாக உள்ளனர் - ப.சிதம்பரம்

    முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லையில் சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வர வேற்கிறேன். சீன துருப்புகளும் இந்திய துருப்புகளும் எந்த பகுதியில் இருந்து பின் வாங்கின. தற்போது படைகள் எங்கே உள்ளன? ஜூன் 15-ம் தேதி என்ன நடந்தது என்பதை அறிய நாட்டு மக்கள் அறிய ஆவலாக காத்திருக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    15:57 (IST)08 Jul 2020

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 2,688ஆக உயர்வு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,688ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை 1,304 பேர் குணமடைந்துள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    15:55 (IST)08 Jul 2020

    கொரோனா: அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது; ஐகோர்ட் கேள்வி

    கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான வழக்கில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உடைகள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது? பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, ஜூலை 27ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    15:28 (IST)08 Jul 2020

    சாத்தான்குளம் சம்பவம்: விஜய்குமார் சுக்லா தலைமையில் விசாரணை குழு அமைத்த‌து சிபிஐ

    சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் சம்பவத்தை விசாரிக்க, சிறப்பு குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையில் சிபிஐ விசாரணை குழு அமைத்த‌து.

    15:26 (IST)08 Jul 2020

    தன்னார்வலரிடம் ஆபாச பேச்சு; சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

    சென்னையில் கொரோனா தடுப்புப்பணி தன்னார்வலரிடம், தொலைபேசியில் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    14:38 (IST)08 Jul 2020

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

    14:35 (IST)08 Jul 2020

    கொரோனா அதிகரிப்பு எதிரொலி; விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்

    விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் ஜூலை 19ஆம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

    14:32 (IST)08 Jul 2020

    11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு; சட்டப்பேரவை செயலர், ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளர், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    14:29 (IST)08 Jul 2020

    நவம்பர் மாதம் வரை கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள்

    நவம்பர் மாதம் வரை கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது.

    14:27 (IST)08 Jul 2020

    நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஓபிசி கிரிமிலேயர் கணக்கீட்டிற்கு சம்பளத்தை அளவீடாக நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

    14:04 (IST)08 Jul 2020

    தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செயல்பாட்டுக்கு தடை- தமிழக அரசு

    டிஜிபி பரிந்துரையை அடுத்து, தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    13:55 (IST)08 Jul 2020

    மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

    தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 21ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    13:37 (IST)08 Jul 2020

    விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது; மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்

    முதல்வர் பழனிசாமி மத்திய எரிசக்தித் துறை அமைச்சரிடம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது தமிழகத்தின் நிலையான கொள்கை. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் திட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    12:47 (IST)08 Jul 2020

    அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி

    மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தங்கமணி கலந்து கொள்ளவில்லை. நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டது. 

    12:19 (IST)08 Jul 2020

    சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம்

    டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இருக்கைகள் அமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடக்கம். வழக்கமான கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன!

    12:06 (IST)08 Jul 2020

    டெல்லியில் அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.  மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பு

    11:46 (IST)08 Jul 2020

    புதுச்சேரியில் கொரோனா

    புதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

    11:27 (IST)08 Jul 2020

    மதுரையில் கொரோனா

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,821 ஆக உயர்ந்துள்ள நிலையில், 1,111 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  இதுவரை அங்கு உயிரிழப்பு -77

    10:57 (IST)08 Jul 2020

    செங்கோட்டையன் தகவல்

    12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 32,000 மாணவர்கள் குறித்த விவகாரம். இன்று மாலைக்குள் அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

    10:46 (IST)08 Jul 2020

    அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள்

    அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடக்கம். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    10:20 (IST)08 Jul 2020

    சென்னையில் கொரோனா இறப்பு

    சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் மரணம். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழப்பு. அரசு ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா 6 பேர் மரணமடைந்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம்

    10:11 (IST)08 Jul 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,19,665லிருந்து 7,42,417ஆக உயர்வு. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,948-லிருந்து 4,56,831 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,160-லிருந்து 20,642 ஆக அதிகரித்துள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    09:50 (IST)08 Jul 2020

    சாத்தான்குளம் வணிகர்கள் கொலை வழக்கு

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்களை மீண்டும் அழைத்து விசாரணை. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது

    09:49 (IST)08 Jul 2020

    ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு

    ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

    09:39 (IST)08 Jul 2020

    டிஜிபி-க்கு கொரோனா

    ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    09:31 (IST)08 Jul 2020

    உலகளவில் கொரோனா

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,48,244 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 68,49,076 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,46,547ஆகவும் அதிகரிப்பு

    Tamil nadu news today updates :தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அரசிடம் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறைளயில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment