Tamil News Today: சென்னையில் குறையும் கொரோனா; அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு – டாப் நியூஸ் ஹைலைட்ஸ்

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.64-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By: Jul 14, 2020, 10:29:53 PM

Tamil News Today Updates: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் 5 பேரையும் சிபிஐ காவலில் எஉட்த்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், 5 பேரும் சிபிஐ காவலில் செல்ல ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும், விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் உடன் இருக்க வேண்டும் என்று 5 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்த 9 லட்சத்து 6 ஆயிரத்து752 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 23,727 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,71,460 பேர் கொரோனாவிலிருந்து சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:25 (IST)14 Jul 2020
காவலர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன; சிறையில் இருவரின் காயங்களுக்கும் மருந்திடப்பட்டன என்று கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், காவலர் முத்துராஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

22:20 (IST)14 Jul 2020
காவிரி நீர்பிடிப்பு பகுதிளில் மழை: ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்துவிட வேண்டும்! - தமிழக அரசு வலியுறுத்தல்

காவிரி ஒழுங்காற்று குழுவின் 30-வது குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய நீரை உடனே வழங்குமாறு வலியுறுத்தினர். குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இக்குழு கூட்டத்தின் அறிக்கை காவிரி நதிநீர் மேலாண்மை பார்வைக்கு உடனே சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

22:18 (IST)14 Jul 2020
முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்

மன்னார்குடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ அம்பிகாபதி (83) உடல்நலக்குறைவால் காலமானார்

22:08 (IST)14 Jul 2020
எண்ணிக்கை 85 ஆக உயர்வு

அசாமில் கன மழை, வெள்ளம் காரணமாக இன்று மேலும் 9 பேர் உயிரிழந்ததையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு.

அங்கு 28 மாவட்டங்களில் சுமார் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

21:23 (IST)14 Jul 2020
சிறைக்கைதி ராஜா சிங் குற்றச்சாட்டு

எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தன்னையும் தாக்கியதாக கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் குற்றச்சாட்டு

* சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ராஜா சிங்கை தாக்கியதாக எஸ்.ஐ.க்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

21:19 (IST)14 Jul 2020
இருவரின் காயங்களுக்கு மருந்திடப்பட்டன

கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன; சிறையில் இருவரின் காயங்களுக்கும் மருந்திடப்பட்டன

- கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம்

21:19 (IST)14 Jul 2020
ரூ.15,000 நிதியுதவி

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழப்போரின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்காக ரூ.15,000 நிதியுதவி வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு.

இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

20:58 (IST)14 Jul 2020
மாநில வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு...!

மகாராஷ்டிரா-6,741
 தமிழகம்-4,526
 கர்நாடகா-2,496
 ஆந்திரா-1,916
 உ.பி-1,656
 டெல்லி-1,606
 பீகார் -1,432
 மேற்குவங்கம் -1,390
 குஜராத் -915
 ஹரியானா -699
 கேரளா -608
 பஞ்சாப் -340
 உத்தரகண்ட் -78
 புதுச்சேரி -62

20:21 (IST)14 Jul 2020
6741 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் இன்று 6741 பேருக்கு கொரோனா உறுதி!

கடந்த 24 மணி நேரத்தில் 213 பேர் உயிரிழப்பு; 4500 பேர் குணமடைந்தனர்.

இதுவரை மொத்தம் 2.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,695 பேர் உயிரிழப்பு

20:12 (IST)14 Jul 2020
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - பகுதி 2

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!

ராமநாதபுரம் -64
தி.மலை -62
நெல்லை-59
சேலம்-58
க.குறிச்சி-57
புதுக்கோட்டை-56
தேனி-53
நீலகிரி-38
திருப்பத்தூர்-32
தஞ்சை-29
அரியலூர்-29
ஈரோடு-28
திருவாரூர்-19
ராணிப்பேட்டை- 15
நாகை - 15
கடலூர் - 14
நாமக்கல் - 14
திருப்பூர் - 12
கிருஷ்ணகிரி - 10
தர்மபுரி - 7
கரூர் - 5
பெரம்பலூர் - 1

20:09 (IST)14 Jul 2020
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு

சென்னை - 1,078
மதுரை - 450
திருவள்ளூர் - 360
விருதுநகர் - 328
செங்கல்பட்டு - 264
வேலூர் - 194
கோவை - 188
திண்டுக்கல் - 157
குமரி -122
விழுப்புரம் -121
காஞ்சிபுரம் - 117
திருச்சி -117
சிவகங்கை -113
தூத்துக்குடி - 112
தென்காசி- 103

20:05 (IST)14 Jul 2020
ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல்

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தீவிரவாத செயல்களுக்காக தங்கம் கடத்தப்பட்டதாக என்ஐஏ தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுபோல, சந்தீப் நாயரின் வீட்டில் சிக்கிய, பை ஒன்றையும் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். இதையடுத்து, வரும் 21ஆம் தேதி வரை அவர்களை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

20:04 (IST)14 Jul 2020
450 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 450 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

திருவள்ளூரில் ஒரே நாளில் 360 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 328 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

- சுகாதாரத்துறை

19:37 (IST)14 Jul 2020
41,357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் இன்று மொத்தம் 41,357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 16.95 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன

- தமிழக சுகாதாரத்துறை

19:32 (IST)14 Jul 2020
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பாதிப்பைவிட இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சிகிச்சை பெற்றுவந்த 4,743 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினர்!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்தது.

19:28 (IST)14 Jul 2020
சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு

சென்னையில் மேலும் 1,078 பேருக்கு கொரோனா

இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 4,743 பேர் குணமடைந்தனர்

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,448 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று மட்டும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79,662 ஆக உயர்வு.

19:23 (IST)14 Jul 2020
4526 பேருக்கு இன்று தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.

4526 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1078 பேருக்கு உறுதியாகியுள்ளது.

அதேபோல் 4743பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

67பேர் உயிரிழந்துள்ளனர்.

18:42 (IST)14 Jul 2020
7.5% இட ஒதுக்கீடு

மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

* ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

18:36 (IST)14 Jul 2020
608 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒரே நாளில் 608 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் ஒருவர் உயிரிழப்பு

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,454ஆக உயர்வு!

18:36 (IST)14 Jul 2020
விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டம்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சி மற்றும் பிறவகுப்பு பாடங்களுக்கான ஒளிபரப்பினை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

18:27 (IST)14 Jul 2020
"பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை"

பாராசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும், மருந்தகங்களில் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ஜோயல் சுகுமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், மருந்தகங்களில் பாராசிட்டாமல் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இன்றி விற்கக்கூடாது என வாய்மொழியாக அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனை மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். முறையான மருத்துவ வசதி தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு, தேவையான படுக்கை உள்ளிட்ட வசதிகள் கிடைப்பதில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது என்பது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

18:21 (IST)14 Jul 2020
ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறை

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்பு நடத்தக் கூடாது

1 - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ஒவ்வொரு பாடமும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் வகுப்பு எடுக்க வேண்டும்

9- 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 முறை பாடம் நடத்தலாம்

18:08 (IST)14 Jul 2020
சீனாவின் ஹவாய் நிறுவன 5ஜி சாதனங்களை 2027-க்குள் நீக்க வேண்டும் - இங்கிலாந்து அரசு உத்தரவு

தேசிய பாதுகாப்பை கருதி மொபைல் ஆப்பரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் Huawei நிறுவன 5ஜி சாதனங்கள் அனைத்தையும் 2027ம் ஆண்டுக்குள் அகற்ற வேண்டும் என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ஹவாய் 5ஜி சாதனங்கள் கொள்முதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

17:36 (IST)14 Jul 2020
கூட்டுறவு வங்கிகளில் மறு உத்தரவு வரும் வரை எந்த கடன்களும் வழங்கக் கூடாது என உத்தரவு

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை கூட்டுறவு வங்கிகள் நிறுத்த உத்தரவவிடப்பட்டுள்ளது.

17:33 (IST)14 Jul 2020
திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

திருப்போரூர் அருகே கோயில் நிலத் தகராறில், திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் தந்தை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், குமார் தரப்பில் போலீஸார் மேலும் 4 பேர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமை காவலர் சந்திரசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

17:16 (IST)14 Jul 2020
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

16:50 (IST)14 Jul 2020
திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து

தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து, திருச்சி- செங்கல்பட்டு, மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி ரயில்கள் ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில் வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே, 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகள் ரத்து ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

16:42 (IST)14 Jul 2020
இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா தொற்று - மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்துதான் 80% கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 20 மாநிலங்களில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியான 63% விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

16:36 (IST)14 Jul 2020
கொரோனா தொற்றில் இருந்து கிராமங்களை காக்க வேண்டும் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து கிராமங்களை காக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளதா என அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

16:31 (IST)14 Jul 2020
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கொரோனா தொற்று

விருதுநகர் மாவட்டத்தில் இன்று புதிதாக 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,492 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 983 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,492 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

16:25 (IST)14 Jul 2020
ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கிய நிலையில், சொகுசு விடுதியில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பதவியை பறிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

16:25 (IST)14 Jul 2020
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 310 பேருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,240 ஆக அதிகரித்துள்ளது.

16:14 (IST)14 Jul 2020
அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி மாயம்: காவல் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி மாயமான விவகாரத்தில் பூக்கடை காவல்நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil nadu news today updates : சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Web Title:Tamil news today live covid 19 coronavirus congress bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X