Tamil News Today Updates :உள்நாட்டு விமான சேவை இயக்கத்தின்போது விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள், நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பாழனிச்சாமி முன்னிலையில் 5137 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 16 நிறுவனங்கள் மூலம் 6555 பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலியாக இருக்கும் சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை. தமிழகத்தில் திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இல்லை என அறிவிப்பு.
தமிழகத்தில் ஒரே நாளில் 60,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உட்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதோடு ஒரே நாளில் 5210 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் 88 பேரை கொரோனாவுக்கு இழந்தது தமிழகம். பேராவூரணி அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தராஜு, தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் என, மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு நேற்று காலை 9 மணிக்கு பரிசோதிக்க தொடங்கியது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 10 தன்னார்வலர்களில் 2 பேருக்கு 0.5 எம்.எல் என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது
உள்நாட்டு விமான சேவை இயக்கத்தின்போது விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள், நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவையை அனுமதிக்கும் போது, பயணிகளின் விமான கட்டணம் அதிகமாகி விடாமல் இருக்க கட்டண நிர்ணயம் மற்றும் விமானங்களில் 45 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிக்கை படம் மற்றும் வாசகங்கள் கட்டாயம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் தயாரித்து விற்பனையாகும் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை வாசகம் மற்றும் படங்கள் இடம்பெற உத்தரவிட்டுள்ளது.
‘டெல்லியில் மேலும் 1,025 பேருக்கு கொரோனா’
டெல்லியில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,28,389 ஆக உயர்வு
– சுகாதாரத்துறை
*மேலும் 32 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; மொத்த இறப்பு எண்ணிக்கை 3,777ஆக உயர்வு
‘மகாராஷ்டிராவில் மேலும் 9,615 பேருக்கு கொரோனா’
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் புதிதாக 9,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,57,117 ஆக உயர்வு
– சுகாதாரத்துறை
* மேலும் 278 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; மொத்த இறப்பு எண்ணிக்கை 13,132 ஆக உயர்வு
‘கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்கும் கட்டணங்கள் உயர்வு’
கோண மானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட ரூ.300
புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு ரூ.1,000
புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்ட நன்செய் நிலத்திற்கு ரூ.2,000
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ரூ.1 கோடி பணம், ஒரு கிலோ நகைகளை பறிமுதல் செய்தது என்.ஐ.ஏ
ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கர்களில் இருந்து பணம், நகைகளை பறிமுதல் செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள்
கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தரப்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தகவல்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் 28 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தளர்வுகளின்றி முழு முடக்கம்
– துணை ஆட்சியர்
* பால் விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி
“கேரளாவில் இன்று 885 பேருக்கு கொரோனா தொற்று, 968 பேர் குணமடைந்தனர்”
இதுவரை கேரளாவில் 16,995 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இன்று 8,147 பேர் கொரோனாவால் பாதிப்பு!
மாநிலத்தில் இதுவரை 80,858 பேர் பாதிப்பு; 933 பேர் உயிரிழப்பு..
39,935 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கர்நாடகாவில் இன்று புதிதாக 5,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
கடந்த 24 மணிநேரத்தில் 110 பேர் உயிரிழப்பு.
இதுவரை மொத்தம் 85,870 பேர் பாதிப்பு; 1,724 பேர் உயிரிழப்பு.
விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் கையெழுத்து இயக்க போராட்டத்திற்கு ஆதரவு
மின்சார சட்டத்திருத்தம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு
ஜூலை 27 இல் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கும் திமுக ஆதரவு – மு.க.ஸ்டாலின்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு
ஜூலை 25 முதல் ஆக.5 வரை என்பதற்கு பதிலாக ஆக.1 முதல் ஆக.10 வரை அவகாசம்
– அமைச்சர் கே.பி அன்பழகன்
tngasa.in -இல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்
மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு அரபு நாடுகளில் ஒன்றான ராஸ் அல் கைமாவில் இருந்து பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்திய போது, நாகப்பட்டினத்தை சேர்ந்த சலே மறைக்காயர் என்பவர் தன் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. களிமண் போன்ற உருவத்தில் தங்கத்தை மாற்றி அவர் கடத்தி வந்ததை அறிந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 7 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் – புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாராயணசாமி பேச்சு
‘ஆக.3இல் மாணவர்சேர்க்கை என்பது தவறான தகவல்’
ஆக.3 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என்பது தவறான தகவல்
மாணவர்சேர்க்கை நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை
ஆக.3 இல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை
-பள்ளிக்கல்வித்துறை
சென்னை -22
மதுரை -10
விருதுநகர் – 6
திருவள்ளூர் -5
குமரி -5
கோவை – 4
நெல்லை – 4
காஞ்சிபுரம் – 4
செங்கல்பட்டு -4
திண்டுக்கல் -3
ராணிப்பேட்டை -3
தென்காசி -2
தி.மலை – 2
தேனி -2
வேலூர்- 1
திருச்சி -1
கிருஷ்ணகிரி-1
நாமக்கல்-1
நாகை -1
சேலம் -1
தூத்துக்குடி -1
திருப்பத்தூர் -1
சிவகங்கை -1
புதுக்கோட்டை -1
திருப்பூர்-1
அரியலூர் -1
இன்று மட்டும் – 88 | இதுவரை மொத்தம் – 3320
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு
விழுப்புரம் -164
தி.மலை – 134
சேலம்-122
திருவாரூர்-96
புதுக்கோட்டை-95
கடலூர்-91
தென்காசி-93
சிவகங்கை-82
கிருஷ்ணகிரி-82
திண்டுக்கல்-80
ராமநாதபுரம்-72
திருப்பத்தூர்-56
நாகை-46
அரியலூர்-37
தர்மபுரி – 36
நீலகிரி -34
ஈரோடு -25
நாமக்கல் -28
திருப்பூர்-18
பெரம்பலூர் – 16
கரூர்-5
சென்னை – 1299
விருதுநகர் – 424
செங்கல்பட்டு – 419
திருவள்ளூர் – 378
காஞ்சிபுரம் – 349
மதுரை – 326
தூத்துக்குடி – 313
குமரி -266
தேனி -234
ராணிப்பேட்டை – 222
திருச்சி – 217
கோவை – 189
தஞ்சை-186
க.குறிச்சி-179
வேலூர் -174
நெல்லை-171
கோவையில் நாளை மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6 மணி வரைமுழு ஊரடங்கு
– கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
தமிழகத்தில் இன்று மட்டும் 65,150 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 22,23,019 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,486 பேருக்கு கொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,320 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்வு
தமிழக சுகாதார துறை தகவல்
சென்னையில் மேலும் 1,299 பேருக்கு கொரோனா
நடிகர் ரஜினிகாந்த், ஜூன் 26ம் தேதி காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக, காவல்துறையினர் ரூ.100 அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்திய விமானப்படையின் மேற்கு மண்டல தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப். 7 க்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவாக்சின், முதன்முதலாக மனிதர்களிடம் செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிக்காக பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் உணவக வாகனத்தையும் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் இன்று புதிதாக 440 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி வில்லியனூரில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது வருத்தத்தை தருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,010ஆக உயர்ந்துள்ளது.
கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என அறிவிப்பு.
செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இதனை ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார், அத்வானி. காணொலி காட்சி வாயிலாக வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகிறார் அத்வானி. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவு. தகுதிநீக்க நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இப்படியான அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு.
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.256 உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை சுதந்திர தின விழாவுக்கு அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியானது. வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது பால்துரைக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,38,635-லிருந்து 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,607-லிருந்து 8,17,209 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,861-லிருந்து 30,601 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.