Advertisment

Tamil News Updates: வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட் செயற்கைக்கோள்

Tamil News Updates: அனைத்து முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

Advertisment

சென்னையில் தொடர்ந்து 641 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

ஏரிகளின் நீர் நிலவரம்:

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2384 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 755 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 476 மில்லியன் கன அடியாக உள்ளது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 23, 2024 05:38 IST
    அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள் யாத்திரை-40 எம்.பி.க்களை பெற்று தரும்' - எல். முருகன்

    மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “என் மண், என் மக்கள் யாத்திரை-40 எம்.பி.க்களை பெற்று தரும். 2024 மக்களவைத் தேர்தலில் திராவிட மாடலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 22, 2024 21:25 IST
    பிற கட்சிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் இடத்தில் பா.ஜ.க இல்லை - கே.பி. ராமலிங்கம்

    பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம்: “பிற கட்சிகளை அவர்களின் சின்னங்களில் போட்டியிட வைத்து அங்கீகாரம் பெறுத்தரும் இடத்தில் பா.ஜ.க இல்லை. அடுத்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர பா.ஜ.க உழைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.



  • Feb 22, 2024 20:53 IST
    செய்யாறு விவசாயிகளை விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்


    “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்காக, 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 7 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயிகளைக் கொச்சையாகப் பேசி அவமானப்படுத்திய அமைச்சரைக் கண்டிக்கத் திராணி இல்லாமல், தங்கள் நிலங்களைக் காக்கப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடுவதும், அவர்களைச் சந்திக்க மறுத்துக் கைது செய்வதுமான, விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    உடனடியாக, கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், அவர்கள் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும்” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.



  • Feb 22, 2024 20:48 IST
    பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி: கே.பி. ராமலிங்கம்

    “இனி மாநிலக் கட்சிகளின் தலைமையில் ஒருபோதும் கூட்டணி இல்லை; தேசியக் கட்சி தலைமையில்தான் கூட்டணி. வேண்டும் என்றால் வாங்க, இல்லாவிட்டால் போங்க” என பாரதிய ஜனதா கட்சியின் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.



  • Feb 22, 2024 20:38 IST
    அ.தி.மு.க. தொண்டர்கள்தான் வாரிசு; எடப்பாடி பழனிசாமி

    "எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் இல்லை, அதிமுக தொண்டர்களாகிய நாம் தான் அவர்களின் வாரிசுகள்" என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • Feb 22, 2024 20:37 IST
    மு.க. ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை; டி.டி.வி தினகரன்

    “எடப்பாடி பழனிசாமி மீதுள்ள கோபத்தில், திமுகவை வெற்றிபெறச் செய்தீர்கள்; ஆனால் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என சிவகங்கையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.



  • Feb 22, 2024 19:31 IST
    செய்யாறு விவசாயிகள் விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி கோரிக்கை

     

    'உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது; இதை உணர்ந்து மேல்மா உழவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேச வேண்டும்.
    அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Feb 22, 2024 19:12 IST
    மேகதாது அணை விவகாரம்: மாபெரும் போராட்டம் அறிவித்த அதிமுக

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் பிப்.29ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.



  • Feb 22, 2024 18:34 IST
    திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளதாக தகவல்

    மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தொகுதிப்பங்கீடு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Feb 22, 2024 17:38 IST
    மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு

    நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அவர்களுக்கு புரியும்படி கேப்பிட்டல் லெட்டர்-ல் (CAPITAL LETTER)  மருத்துவர்கள் எழுத வேண்டும் என அரசு, தனியார் மருத்துவர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Feb 22, 2024 17:37 IST
    கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் : கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் அறிவிப்பு

    சென்னை பல்கலை.யின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பான நாளை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சென்னை பல்கலை. ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ள நிலையில், இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.



  • Feb 22, 2024 17:30 IST
    ஆந்திராவின் காங். தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கைது

     "படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்" என்ற கோஷத்துடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட ஆந்திராவின் காங். தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கைது



  • Feb 22, 2024 16:19 IST
    வீடு கட்டும்போது கிடைத்த வினோத புதையல்

    வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது சோப்புத் தூளின் கவர் கிடைத்துள்ளது. 31 ஆண்டுகளாக மக்காமல் இருக்கும் போட்டோவை பிளாஸ்டிக்கின் பயங்கரத்தை சமூக ஆர்வலர் பகிர்ந்துள்ளனர். 



  • Feb 22, 2024 16:18 IST
    பேருந்தில் பெண்ணிடம் தங்க நகை கொள்ளை

    திருப்பத்தூர், வாணியம்பாடி பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 சவரன் தங்க நகை கொள்ளை நடந்துள்ளது.  கொள்ளையில் ஈடுபட்ட 2 பெண்கள் தப்பியோட்டம் என தெரிவித்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Feb 22, 2024 15:45 IST
    பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம்: வழக்குப்பதிவு

    தருமபுரி, அரூர் பகுதியில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரத்தில் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது. 

    நவலை கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை (59) என்ற பெண் வாழ்வாதாரத்திற்காக பேருந்து நிறுத்தம் அருகே மாலை நேரத்தில் மாட்டிறைச்சி பொறித்து விற்பனை செய்கிறார். நேற்று அரூரில் இருந்து நவலை செல்லும் போது நடத்துநர் பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டதால், 3 கி.மீ தூரம் நடந்தே ஊருக்கு வந்துள்ளார். 

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்தில் இருந்து பெண் இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக, தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாத்திரத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த பெண்ணை, பேருந்தில் இருந்து பாதியிலேயே இறக்கி விட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவரையும் சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்தது. 



  • Feb 22, 2024 15:01 IST
    ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம்

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்



  • Feb 22, 2024 14:43 IST
    அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மகன் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்

    அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் மகன் சதீஷ் குமார் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எந்தவித ஆதாரமுமில்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தனது மனைவி சுருதி மீது புகார் அளித்துள்ளார்



  • Feb 22, 2024 14:32 IST
    சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

    தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்



  • Feb 22, 2024 14:09 IST
    மாட்டிறைச்சியுடன் அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி மறுப்பு; ஓட்டுநர் - நடத்துநர் மீது வழக்குப்பதிவு

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்தில் இருந்து பெண் இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • Feb 22, 2024 13:42 IST
    பா.ஜ.க.,வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும், மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்; துரைமுருகன்

    மேகதாது விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது. நீர் பங்கீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை காவிரி ஆணையத்தில் தலைவர் இல்லாததால் பிரச்சினை வரவில்லை. கடந்த 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில், மேகதாது குறித்து பேசப்படாது என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த 1ஆம் தேதி நடந்த கூட்டத்தில், வழக்கம்போல், கர்நாடகா மேகதாது பிரச்சினையை எழுப்பினார்கள். மேகதாது விவகாரத்தில், வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு. பா.ஜ.க.,வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும், மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.



  • Feb 22, 2024 13:31 IST
    மேகதாது அணை விவகாரம்; சட்டப்பேரவையில் இ.பி.எஸ் ஆவேசம்

    காவிரி நீர் பிரச்சினையில், காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதா? காவிரி ஆணைய கூட்டத்தில் தந்திரமாக மேகதாது விவகாரம் பேசப்பட்டுள்ளது. மேகதாது குறித்து பேசப்பட்ட காவிரி ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன்? மேகதாது விவகாரத்தில், சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு அலட்சியமாக இருப்பதால், கர்நாடகா அரசு தான் நினைப்பது போல் மேகதாதுவில் அணை கட்டி விடும். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற வேண்டும், என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்



  • Feb 22, 2024 13:11 IST
    தி.மு.க ஆட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.26,613 கோடி மூலதன செலவுகளுக்காக ஒதுக்கீடு; தங்கம் தென்னரசு

    2011-12 முதல் 2020-21 வரை 10 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.16,732 கோடி மட்டும்தான் அ.தி.மு.க ஆட்சியில் மூலதன செலவுகளுக்காக செலவிடப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.26,613 கோடி மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டது என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்



  • Feb 22, 2024 12:56 IST
    அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜுவுக்கு த்ரிஷா நோட்டீஸ்

    24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறாக பேசிய  அதிமுக முன்னாள் நிர்வாகி  ஏ.வி ராஜுவுக்கு த்ரிஷா நோட்டீஸ்



  • Feb 22, 2024 12:42 IST
    சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வர் விளக்கம்

    பாமகவின் கோரிக்கைக்கு சாதகமாக தான், நாங்களும் குரல் கொடுத்து வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின்



  • Feb 22, 2024 12:41 IST
    தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியே விவாதம்- துரைமுருகன்

    “காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலம் தலைவரே நியமிக்கப்படாமல் இருந்தது. அதனால் அதிமுக ஆட்சியில் பிரச்சனை வரவில்லை. கடந்த 11ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பை மீறியே விவாதிக்கப்பட்டது”

    -காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்!



  • Feb 22, 2024 12:38 IST
    பா.ம.க வெளிநடப்பு

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவலியுறுத்தி  சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு



  • Feb 22, 2024 12:37 IST
    சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல: ஸ்டாலின் 

     "சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.." - முதல்வர் ஸ்டாலின் 

     



  • Feb 22, 2024 12:28 IST
    மேகதாது விவகாரம்: அ.தி.மு.க வெளிநடப்பு

    மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு



  • Feb 22, 2024 12:26 IST
    தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது: துரை முருகன்

    மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது - சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் திட்டவட்டம்

    முன்னதாக இவ்விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்



  • Feb 22, 2024 11:52 IST
    டெல்லியில் காங்-ஆம் ஆத்மி தொகுதிப் பங்கீடு உறுதி

    மக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு உறுதியானது.

    டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்!



  • Feb 22, 2024 11:46 IST
    100 மாவட்டங்களாப் பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய் கட்சி முடிவு

    உறுப்பினர்கள் சேர்க்கை முதல் பொறுப்பாளர்கள் நியமனம் வரை... முழு வீச்சில் இறங்கிய விஜய்யின் த.வெ.க

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு. புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும்.  பொறுப்பாளர்கள் நியமனத்திற்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகமாக உள்ளது. 



  • Feb 22, 2024 11:15 IST
    கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக இ.டி சம்மன்

    டெல்லி மதுபான முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக இ.டி சம்மன். 
    பிப்.26-ல் ஆஜராக சம்மன். சம்மனுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. 



  • Feb 22, 2024 10:54 IST
    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ₹4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார் ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது



  • Feb 22, 2024 10:35 IST
    அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவகங்கள் பிப்.26ம் தேதி திறப்பு

    முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவகங்கள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும் பிப்.26ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது; இதில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்-  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு



  • Feb 22, 2024 10:30 IST
    6 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது குறித்து ஒப்பந்தம்

    பள்ளிக்கல்வித் துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். அமூக்சியம் செய்தி 6 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது குறித்து ஒப்பந்தம் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • Feb 22, 2024 10:29 IST
    நாளை தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்

    தமிழகத்தில் நாடாளுமன்றதேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், அதிகாரிகள் குழு தமிழகத்தில் 2 நாள் முகாம் டிஜிபி, தலைமைச் செயலாளருடன் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் சென்னையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை



  • Feb 22, 2024 10:26 IST
    கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும்

    சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் வரும் 26ம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • Feb 22, 2024 10:10 IST
    அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ., 2 லட்சம் நிதியுதவி

    விழுப்புரம், மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ., 2 லட்சம் நிதியுதவி படுகாயம் அடைந்த வீனேஷ் என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • Feb 22, 2024 09:56 IST
    இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

    இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு.  விண்ணப்பிக்க : aai.aero மேலும் விவரங்களுக்கு : rb.gy/na17rh



  • Feb 22, 2024 09:56 IST
    இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு

    இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு.  விண்ணப்பிக்க : aai.aero மேலும் விவரங்களுக்கு : rb.gy/na17rh



  • Feb 22, 2024 09:32 IST
    தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் : 28ம் தேதி அடிக்கல்

    இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள நிலையில், இதற்கான அடிக்கல்லை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி நாட்ட உள்ளதாக தகவல்



  • Feb 22, 2024 08:42 IST
    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்

    முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை(பிப்.23) காலை நடைபெறுகிறது



  • Feb 22, 2024 08:31 IST
    புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட்

    புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்கிறார்



  • Feb 22, 2024 08:30 IST
    TTF வாசனின் நண்பர் அஜீஸ் மீது வழக்கு பதிவு

    இந்தியா கேட் மற்றும் தாஜ் ஹோட்டல் அருகே அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்டதாக யூடியூபர் TTF வாசனின் நண்பர் அஜீஸ் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு கடந்த மாதம் 31ம் தேதி மும்பை, கொலாபா போலீசாரால் கைது செய்யப்பட்ட அஜீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தகவல். 



  • Feb 22, 2024 08:11 IST
    டிராக்டர் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

    திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி கோர விபத்து அதிகாலை 3 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் பலி



  • Feb 22, 2024 08:10 IST
    கரும்பு கொள்முதல் விலை உயர்வு

    கரும்பு கொள்முதல் விலை உயர்வு. கரும்பு கொள்முதல் விலை ரூ.315 லிருந்து ரூ.340 ஆக உயர்வு விண்வெளித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment