Advertisment

Tamil News Updates: திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா- பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை

Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi

Tamil News Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை                                                           

தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, திருச்சியில் ரூ.19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திருச்சி விமான நிலையத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி இன்று திருச்சி வருவதையொட்டி, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Advertisment
Advertisement

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

  • Jan 01, 2024 22:21 IST

    ஜப்பானில் நிலநடுக்கம்: முக்கிய தகவல் தொடர்பு சேவைகள் பாதிப்பு

    ஜப்பானில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் சேவை இடையூறுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகமான என்.எச்.கே தெரிவித்துள்ளது. ஃபிக்ஸட்-லைன் கேரியர் என்.டி.டி வெஸ்ட், அதன் இணையம் மற்றும் ஐபி தொலைபேசி சேவைகள் இஷிகாவா ப்ரிஃபெக்சரின் சில பகுதிகளில் கிடைக்கவில்லை. அதன் தொலைத்தொடர்பு வசதிகள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டதாகக் கூறியது. மேலும், அப்பகுதிகளில் அவசர தொலைபேசி சேவைகளும் செயலிழந்துவிட்டதாக கவலை தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2024 21:24 IST

    ஜப்பானில் நிலநடுக்கம்: இஷிகாவாவில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இஷிகாவா மாகாணத்தில் உள்ள ஷிகா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக ஜப்பான் ஒளிபரப்பு நிறுவனமான என்.டி.வி தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2024 20:46 IST

    ஜப்பானில் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த கட்டடங்கள்; ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

    மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில கடலோரப் பகுதிகளை வெளியேற்ற குடியிருப்பாளர்களைத் தூண்டியது. கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டது, மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசாங்க செய்தித் தொடர்பாளர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் கூறினார், அதிகாரிகள் இன்னும் சேதத்தை மதிப்பிட்டு வருகின்றனர். காயங்கள் மற்றும் இறப்புகளின் அளவு தெளிவாக இல்லை. இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு பேர் பதிலளிக்கவில்லை என்று அரசு ஊடகமான என்.எச்.கே தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2024 20:12 IST

    ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி - பாதுகாப்பு அமைச்சர் எஸ்.டி.எஃப்-க்கு உத்தரவு

    ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கிஹாரா மினோரு தற்காப்புப் படை வீரர்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டார். உள்ளூர் ஊடக ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு பணிக்கான முறையான கோரிக்கையை இதுவரை அமைச்சகம் பெறவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.



  • Jan 01, 2024 19:43 IST

    சுனாமி அலை இன்னும் பதிவாகி வருகிறது; ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜப்பானில் இன்னும் சுனாமிகள் அலைகள் பதிவாகி வருகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அதிகாரி வலியுறுத்தியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2024 18:52 IST

    ஜப்பானில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக 30 புகார்கள் - வாஜிமா நகர தீயணைப்புத் துறை 

    ஜப்பானைத் தாக்கிய தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இஷிகாவா மாகாணத்தின் வஜிமா நகரில் உள்ள தீயணைப்புத் துறை கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக குறைந்தபட்சம் 30 அறிக்கைகளைப் பெற்றதாக உள்ளூர் ஊடக ஒளிபரப்பு என்.எச்.கே தெரிவித்துள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட 'பெரிய சுனாமி எச்சரிக்கை'யை 'சுனாமி எச்சரிக்கை'யாக குறைத்து தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2024 18:36 IST

    ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுத்த வடகொரியா, ரஷ்யா

    ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, வடகொரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜப்பானைத் திங்கள்கிழமைத் தாக்கிய பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தென் கொரியாவின் கிழக்குக் கடற்கரையை ஒரு மீட்டருக்கும் (3.3 அடி) கீழ் அளவிடும் சுனாமி அலை வந்தது. தென் கொரியாவின் வானிலை நிறுவனம் கூறியது, அடுத்த மணி நேரத்தில் மேலும் மேலும் பெரிய அலைகள் இருக்கலாம் என்று கூறியது. தனித்தனியாக, வட கொரியா தனது கடற்கரையில் 2 மீட்டருக்கும் அதிகமான அலைகள் இருக்கலாம் என்று சுனாமி எச்சரிக்கைகளை விடுத்துள்ளது என்று தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் வட கொரியா வானொலியை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.



  • Jan 01, 2024 17:35 IST

    நடிகர் பிரேம்ஜிக்கு கல்யாணம்?

    இந்த வருஷம் நான் கல்யாணம் பண்ணிக்கபோறேன் என நடிகர் பிரேம்ஜி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.



  • Jan 01, 2024 17:00 IST

    தஜிகிஸ்தானில் நிலடுக்கம்


    ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது 150 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 01, 2024 16:35 IST

    ஜப்பான்; 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம்! 


     ஜப்பானில் கடந்த மூன்று மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 1 முதல் 5 அடி வரை சுனாமி அலைகள் எழும்பின.
     இந்த நிலநடுக்கங்கள் 4.5 லிட்டர் அளவுகோலுக்கு ஏற்பட்டுள்ளன.



  • Jan 01, 2024 16:13 IST

    ஜப்பானில் சுனாமி தாக்குதல்; உதவி எண்கள் அறிவிப்பு

    ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்காக தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



  • Jan 01, 2024 15:46 IST

    ஜப்பானில் சுனாமி அலை; மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவு! 

    ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட தொடர்ந்து சுனாமி அலைகள் ஒன்று முதல் ஐந்து அடி வரை எழும்பின. இதை எடுத்து கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்கம் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆடியது சிசிடிவி கண்காணிப்பில் பதிவாகியுள்ளது.



  • Jan 01, 2024 15:45 IST

    ஜப்பானில் சுனாமி அலை; மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவு! 

    ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட தொடர்ந்து சுனாமி அலைகள் ஒன்று முதல் ஐந்து அடி வரை எழும்பின. இதை எடுத்து கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்கம் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆடியது சிசிடிவி கண்காணிப்பில் பதிவாகியுள்ளது.



  • Jan 01, 2024 15:06 IST

    மு.க ஸ்டாலின் பாதுகாப்புக்கு புதிதாக ஆறு கார்கள்! 


     தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பில் புதிதாக ஆறு கார்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருப்பு நிற இன்னோவா கார்கள் வழங்கப்பட்டுள்ளன.



  • Jan 01, 2024 14:41 IST

    மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு

    'அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் சிறிய கவுரவம்" என அர்ஜென்டினா கால்பந்து வாரியத் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.



  • Jan 01, 2024 13:59 IST

    ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை: ஊருக்குள் வர தொடங்கிய கடல் நீர் 


    ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை: க டல் நீர் அலை அலையாக ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. 

     



  • Jan 01, 2024 13:44 IST

    ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

    ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -  ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவு

    நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை - பீதியில் உறைந்துள்ள ஜப்பானியர்கள்.. 

    ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை



  • Jan 01, 2024 13:43 IST

    இன்று நெல்லை, குமரியில் கனமழை பெய்யும்

    நெல்லை மாவட்ட மலைப்பகுதி, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    இன்று முதல் வருகிற 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்,

    நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில் உறை பனிக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் 



  • Jan 01, 2024 13:43 IST

    வித்தியாச கட்டணம்- திரும்ப வழங்க உத்தரவு

    அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவு

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆணை

    பயணம் தொடங்கும் போது நடத்துனர் மூலம் வித்தியாச கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு என விளக்கம்   

    கோயம்பேட்டிற்கு பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்



  • Jan 01, 2024 13:43 IST

    எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார்? - அன்புமணி

    அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார்? அமோனியா வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலையை மூட வேண்டும். கோரமண்டல் உர ஆலையில் வல்லுநர் குழு நடத்திய ஆய்வை அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்- பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி 



  • Jan 01, 2024 11:57 IST

    ஒருநாள் கிரிக்கெட்: டேவிட் வார்னர் ஓய்வு அறிவிப்பு

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு

    37 வயதாகும் டேவிட் வார்னர், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் அடித்துள்ளார்



  • Jan 01, 2024 11:13 IST

     திருச்சியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 4 பேர் பலி

    திருச்சி அரியமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவர் வீட்டின் சிமெண்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 பேர் பலி.  மனைவி விஜயலட்சுமி(45),  மகள்கள் ஷரீனி (12),  பிரதீபா(10) மாரிமுத்துவின் தாயார் சாந்தி(65) ஆகியோர் பலி. குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் கூரை பெயர்ந்து விழுந்தது. 



  • Jan 01, 2024 10:37 IST

    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை! ஒரு சவரன் ரூ. 47,280க்கும், ஒரு கிராம் ரூ.5,910க்கும் விற்பனையாகிறது.



  • Jan 01, 2024 10:12 IST

    ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.

    ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.. ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் வாழைமரம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் இல்லம்.



  • Jan 01, 2024 09:25 IST

    விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்

    இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்



  • Jan 01, 2024 09:07 IST

    மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 2 சிறுமிகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

    திருச்சி அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு



  • Jan 01, 2024 08:13 IST

    வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைப்பு

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை டிச.22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.4.50 குறைப்பு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment