Advertisment

Tamil news today: தீபாவளி பண்டிகை.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news

Tamil news updates

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாசுகள் வெடித்ததால் சென்னை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்றின் தரம் 198ஆக உயிர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

Petrol and Diesel Price

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பத்திரிக்கையாளர் உயிரிழப்பு: மாநகராட்சி உத்தரவு

இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சென்னை மாநகராட்சி வாய்மொழி உத்தரவிட்டுளது. சென்னையில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் பலியானதன் எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் காலமானார்

எழுத்தாளர் செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. இந்நிலையில் நேற்று அவர் காலமானார். இலக்கியத்துறையில் இருப்பவர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



  • 05:52 (IST) 25 Oct 2022
    சசிகலா நடராஜன் பற்றி பேட்டி; ஜெ.தீபா பேச்சுக்கு தீபக் எதிர்ப்பு

    ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரை தண்டிக்க வேண்டும் என்ற தீபாவின் பேச்சுக்கு அவரது சகோதரர் தீபக் எதிர்ப்பு தெரிவிதுள்ளார்.

    தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தீபக், “ஒருவைரப் பற்றி தவறாக சித்தரித்துக் கூறுவது எவ்வளவு பெரிய தப்பு. தீபா, சசிகலாவைப் பற்றி பேசியதுகூட எனக்கு கவலை இல்லை. நடராஜனைப் பற்றி பேசுவதற்கு எந்த விஷயத்திலும் அவருக்கு அருகதையே கிடையாது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்குள் அவர் வந்திருந்தால் நடராஜனைப் பற்றி பேசலாம். ஒருவரை பற்றி சும்மா பொய்யே பேசக்கூடாது. அது தவறு” என்று கூறியுள்ளார்.



  • 21:21 (IST) 24 Oct 2022
    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

    தீபாவளி பண்டியைக் கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வருவதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 ஆக இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் 192 அளவாக உயர்ந்துள்ளது.



  • 19:29 (IST) 24 Oct 2022
    சென்னையில் தீபாவளி கொண்டாடிய சேகர்பாபு

    சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமைச்சர் சேகர்பாபு தீபாவளி கொண்டாடினார்.



  • 19:29 (IST) 24 Oct 2022
    இங்கிலாந்தின் புதிய பிரதமராகிறார் இந்திய வம்சாவளி ரிஷி சுனக்

    ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் விரைவில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். இங்கிலாந்து நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக நியமனம் செய்தவுடன் அவர் பொறுப்பேற்பார். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



  • 18:41 (IST) 24 Oct 2022
    கேரள கவர்னர் துணை வேந்தர்களை வஞ்சிக்கிறார்; பினராய் விஜயன்

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் பல்கலைக்கழக துணை வேந்தர்களை வஞ்சிக்கிறார் என மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

    முன்னதாக 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கவர்னர் ஆரி்ப் முகம்மது கான் கேட்டுக்கொண்டார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் பினராய் விஜயன் இவ்வாறு கூறியுள்ளார்.



  • 18:09 (IST) 24 Oct 2022
    கும்பகோணம் டயர் கடையில் விபத்து

    கும்பகோணத்தில் உள்ள டயர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட டயர்கள் எரிந்து நாசமாகின.



  • 17:40 (IST) 24 Oct 2022
    கோவை கார் வெடி விபத்தில் முழுமையான விசாரணை தேவை.. ஜவாஹிருல்லா

    கோவை கார் வெடி விபத்தில் முழுமையான விசாரணை தேவை என ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 17:20 (IST) 24 Oct 2022
    தீபாவளி.. ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்

    தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தீபாவளி வாழ்த்து கூறினார்.



  • 17:18 (IST) 24 Oct 2022
    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை- சிபிஐ விசாரணை தேவை.. டிடிவி தினகரன்

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஏற்கனவே ஜெ. தீபாவும் வலியுறுத்தியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.



  • 16:28 (IST) 24 Oct 2022
    கார்கிலில் தீபாவளி கொண்டாட்டம்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.

    அப்போது தமிழ்நாட்டு வீரர்கள் சுராங்கனி பாடலை பாட நரேந்திர மோடி உற்சாகமானார்.

    இந்தக் காணொலி காட்சிகள் வைரலாகிவருகின்றன.



  • 15:52 (IST) 24 Oct 2022
    மிருதுவான புறக்கோள் கண்டுபிடிப்பு!

    பூமியிலிருந்து 580 ஒளி ஆண்டுகளுக்கு ஆப்பால் உள்ள “TOI-3757 b” என்ற மிக மிருதுவான புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம் வியாழனை விட பெரியதாக உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



  • 15:49 (IST) 24 Oct 2022
    ஏஆர் ரஹ்மான் தீபாவளி வாழ்த்து!

    "இதயம் இதயம் துடிக்கின்றதே

    எங்கும் உன்போல் பாசம் இல்லை

    ஆதலால் உன் மடி தேடினேன்.

    தாய் மண்ணே வணக்கம்" என்று தான் இசைத்த, தாய் மண்ணே பாடலை பிரதமர் முன்னிலையில் பாடிய ராணுவ வீரர்களின் வீடியோவை பதிவிட்டு ஏஆர் ரஹ்மான் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 15:47 (IST) 24 Oct 2022
    பெரம்பலூர்டயர் விற்பனை கடையில் தீ விபத்து!

    பெரம்பலூரில் கார் உதிரி பாகம் மற்றும் டயர் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.



  • 14:57 (IST) 24 Oct 2022
    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 14:56 (IST) 24 Oct 2022
    வங்கக்கடலில் புயல்!

    வங்கக்கடலில் நேற்று மாலை புயலாக மாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 14:13 (IST) 24 Oct 2022
    மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி!

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மொத்தம் 964கி.மீ. அளவுக்கு வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன." என்று தெரிவித்தார்.



  • 14:05 (IST) 24 Oct 2022
    நெதர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!

    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர்12 சுற்றில் நெதர்லாந்து அணியை வங்கதேசம் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.



  • 13:40 (IST) 24 Oct 2022
    'கவர்னர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார்' - முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்!

    பாலக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்த பினராய் விஜயன், "ஆளுநர் (ஆரிப் எம் கான்) தனக்கு உள்ள அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகிறார். இது ஜனநாயக விரோதம் துணைவேந்தர்களின் அதிகாரத்தின் மீதான அத்துமீறல். ஆளுநர் பதவி என்பது அரசுக்கு எதிராகச் செல்வதற்காக அல்ல, அவர் ஆர்எஸ்எஸ் கருவியாக செயல்படுகிறார்.

    துணை வேந்தர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் பதவியை தவறாக பயன்படுத்துதல் அல்லது தவறாக செயல்படுதல் போன்ற குற்றங்கள் காணபட வேண்டும். அப்படி ஒன்றும் இல்லாமல் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்ய முடியாது. இது நிர்வாக துறை, நீதி துறை தான் முடிவு எடுக்க வேண்டும். இது கூட தெரியாமல் கவர்னர் செயல்பட்டு வருகிறார்." என்று தெரிவித்துள்ளார்.



  • 13:26 (IST) 24 Oct 2022
    ஈரானில் தொடரும் போராட்டம்; ஹேக்கிங் செய்யப்பட்ட அணு ஆற்றல்!

    ஈரானில் இளம்பெண் அமினி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக அணு ஆற்றல் கழகத்தின் இ-மெயில் சர்வர் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது.



  • 13:24 (IST) 24 Oct 2022
    முயல்களை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது!

    திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு காப்பு காட்டில் மான், முயல்களை வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இறந்த நிலையில் 2 புள்ளிமான், 2 முயல்கள் மீட்க்கப்பட்டுளள்து.

    3 இருசக்கர வாகனங்கள், 1 நாட்டுத் துப்பாக்கி, வலை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



  • 12:59 (IST) 24 Oct 2022
    கேரளா துணை வேந்தர்கள் விவகாரம்: ஐகோர்ட் சிறப்பு விசாரணைக்கு அழைப்பு!

    கேரளாவில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் பதவி விலகக் கூறிய விவகாரத்தில் முதல்வர் ஆளுநர் இடையே வார்த்தை போர் நிகழ்ந்து வரும் நிலையில்,இன்று மாலை 4 மணிக்கு கேரள உயர் நீதி மன்றம் சிறப்பு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    9 துணை வேந்தர்களில் 6 பேர் நீதி மன்றத்தை நாடுகிறோம் என ராஜ்பவனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 12:57 (IST) 24 Oct 2022
    தேவர் தங்ககவசம் - செல்லூர் கே. ராஜூ பேச்சு!

    "பசும்பொன் தேவர் தங்ககவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. பொருளாளர் கையெழுத்து இட்டு எடுத்து செல்லலாம். தங்ககவசம் எந்த தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. தேவர் தங்க கசவசம் யார் பெறுவது என்பது குறித்த வழக்கு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.



  • 12:55 (IST) 24 Oct 2022
    கேரளா துணை வேந்தர்கள் விவகாரம்: சிறப்பு விசாரணைக்கு ஐகோர்ட் அழைப்பு!

    கேரளாவில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் பதவி விலகக் கூறிய விவகாரத்தில் முதல்வர் ஆளுநர் இடையே வார்த்தை போர் நிகழ்ந்து வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு கேரள உயர் நீதி மன்றம் சிறப்பு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    9 துணை வேந்தர்களில் 6 பேர் நீதி மன்றத்தை நாடுகிறோம் என ராஜ்பவனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!



  • 12:16 (IST) 24 Oct 2022
    தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை!

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியன்று ரூ. 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • 11:44 (IST) 24 Oct 2022
    முதலமைச்சரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார்

    மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.சரி செய்ய முதலமைச்சரே நேரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார்-கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைச்சர்



  • 11:42 (IST) 24 Oct 2022
    நெதர்லாந்து அணிக்கு145 ரன்கள் இலக்கு

    நெதர்லாந்து அணிக்கு145 ரன்கள் இலக்கு . முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது



  • 10:58 (IST) 24 Oct 2022
    என்னை பற்றிய தகவல் முற்றிலும் உண்மையல்ல

    ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் என்னை பற்றிய தகவல் முற்றிலும் உண்மையல்ல. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்நோக்கத்துடன் இருக்கிறது; சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கொள்வோம் நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்



  • 10:58 (IST) 24 Oct 2022
    பயங்கர தீ விபத்து

    சென்னை, அசோக் நகர் காவல் நிலையம் அருகே இயங்கி வரும் தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை



  • 08:13 (IST) 24 Oct 2022
    நாளையும் விடுமுறை

    தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் வரும் 25ம் தேதி விடுமுறை . தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு



  • 08:10 (IST) 24 Oct 2022
    குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து

    குடியரசு தலைவரும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 08:09 (IST) 24 Oct 2022
    பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

    நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment