/tamil-ie/media/media_files/uploads/2022/10/kovai-blast.jpg)
Petrol and Diesel Price
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரிட்டன் பிரதமருக்கு ஸ்டாலின் வாழ்த்து
பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா - பிரிட்டன் உறவு மேலும் வலுப்பெறும் எனவும் முதல்வர் நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டம்
ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12, மெல்போர்னில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 14:41 (IST) 27 Oct 2022கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: கைதான 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - கோர்ட் அனுமதி
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கடந்த 24ம் தேதி இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- 20:34 (IST) 26 Oct 2022காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிப்பு
சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்பட 47 பேர் இக்குழுவில் உள்ளனர்.
- 20:01 (IST) 26 Oct 2022கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கில் கைதான சதீஷுக்கு சிபிசிஐடி காவல்
கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கில் கைதான சதீஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- 19:24 (IST) 26 Oct 2022நயன்தாரா - விக்னேஷ் சிவன் 2016-ம் ஆண்டில் பதிவுத் திருமணம் செய்தது உறுதி - சுகாதாரத்துறை
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி 2016ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துள்ளனர் என்பதும் உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறையின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19:02 (IST) 26 Oct 2022காங்கிரஸ் தேர்தல் ஆணைய கூட்டம்.. கார்கே, சோனியா பங்கேற்பு
கார்கே, சோனியா பங்கேற்ற முதல் மத்திய தேர்தல் ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
- 18:54 (IST) 26 Oct 202220 வங்கதேச மீனவர்களை காப்பாற்றிய இந்திய கடலோர காவல் படை
சித்ரகாங் புயலில் சிக்கிய 20 வங்க தேச மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டது.
- 18:53 (IST) 26 Oct 20222024 அயோத்தியில் பக்தர்களுக்கு அனுமதி
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
- 18:38 (IST) 26 Oct 2022காந்தாரா இந்திய சினிமாவின் தரமான படைப்பு- ரஜினிகாந்த்
காந்தாரா படம் இந்திய சினிமாவின் தரமான படைப்பு என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
- 18:34 (IST) 26 Oct 2022ராமநாதபுரத்தில் அக்.28-30 முதல் டாஸ்மாக் விடுமுறை
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அக்.28முதல் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
- 17:57 (IST) 26 Oct 2022கேரள நிதியமைச்சரை நீக்க ஆளுநர் கோரிக்கை
கேரள நிதியமைச்சர் பாலகோபாலை நீக்க வேண்டும் என ஆளுநர் ஆரிப் முகம்மது கான் முதலமைச்சர் பினராய் விஜயனை வலியுறுத்தியுள்ளார்.
- 17:57 (IST) 26 Oct 2022காந்தாரா ரூ.200 கோடி வசூல்
கன்னடத்தில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட காந்தாரா படம் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 17:56 (IST) 26 Oct 2022காந்தாரா ரூ.200 கோடி வசூல்
கன்னடத்தில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட காந்தாரா படம் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 17:50 (IST) 26 Oct 2022நயன்தாரா விக்கி மீது நடவடிக்கை இல்லை
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரத்தில் நயன்தாரா விக்கி மீது தவறு இல்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- 17:12 (IST) 26 Oct 2022தேவர் தங்க கவசம்- எடப்பாடி பழனிசாமிக்கு மறுப்பு
முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, நினைவிட அறங்காவலர்கள் இணைந்து தங்க கவசத்தை பெற்றுக் கொள்ள மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
- 16:40 (IST) 26 Oct 2022டி20 உலகக்கோப்பை : நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து
டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டி இடைவிடாது பெய்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
- 16:39 (IST) 26 Oct 2022ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதி
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 16:02 (IST) 26 Oct 2022டி20 உலக கோப்பை : டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து
ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 16:00 (IST) 26 Oct 2022ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சாக்கடை நீர் : நீதிபதிகள் கேள்வி
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா?அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி கேட்டுள்ளனர். மேலும் இது குறித்துமாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம், கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- 15:59 (IST) 26 Oct 2022கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் ஆய்வு செய்து வருகிறார். மேலும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 15:58 (IST) 26 Oct 2022'காந்தாரா' திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு 'காந்தாரா' தெரிந்ததை விட தெரியாதது அதிகம்: இதை சினிமாவில் வேறு யாராலும் சொல்லியிருக்க முடியாது. காந்தாரா திரைப்படம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. படக்குழுவுக்கு எனது பாராட்டுக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
- 15:57 (IST) 26 Oct 2022பீகாரில் 53 பெட்டிகளுடன் தடம்புரண்டு சரக்கு ரயில் விபத்து
பீகாரில் உள்ள குர்பா ரயில் நிலையத்தில், 53 பெட்டிகளுடன் தடம்புரண்டு சரக்கு ரயில் விபத்துக்குள்ளான நிலையில், சில பெட்டிகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை
- 15:55 (IST) 26 Oct 202210, 12ம் வகுப்பு துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெற்றுக்கொள்ள அனுமதி
10, 12ம் வகுப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 31ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
- 15:24 (IST) 26 Oct 2022முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் தொடர்பான வழக்கில் மாலை 4 மணிக்கு தீர்ப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவச வழக்கின் தீர்ப்பினை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- 14:47 (IST) 26 Oct 2022முத்துராமலிங்கத் தேவரின் 115 -வது ஜெயந்தி
முத்துராமலிங்கத் தேவரின் 115 -வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு 10,000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தென்னமண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.
- 13:54 (IST) 26 Oct 2022நாளை உள்ளூர் விடுமுறை..
மருதுபாண்டியர் 221வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 13:47 (IST) 26 Oct 2022அயர்லாந்து அனி வெற்றி
ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில், இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அனி வெற்றி பெற்றது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என அறிவிக்கப்பட்டது.
- 13:25 (IST) 26 Oct 2022தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 13:24 (IST) 26 Oct 2022காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில், காவல்துறை அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- 12:55 (IST) 26 Oct 2022கோவை சம்பவம்: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை. சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக ஆலோசனை
டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோருடன் ஆலோசனை
- 12:05 (IST) 26 Oct 2022பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை
முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை: பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை
சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது
- 12:04 (IST) 26 Oct 2022காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே பதவியேற்கிறார்
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே பதவியேற்கிறார்
பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதவியேற்பு விழா
24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவி ஏற்பு
- 10:33 (IST) 26 Oct 2022புகைப்படம் வைரல்
விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
- 09:34 (IST) 26 Oct 2022பிரிட்டன் பிரதமருக்கு பன்னீர் செல்வம் வாழ்த்து
பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து இந்தியா - பிரிட்டன் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் - ஓபிஎஸ்
- 09:28 (IST) 26 Oct 2022தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- 09:19 (IST) 26 Oct 2022உணவு சரியில்லை : பிசிசிஐ தரப்பு தகவல்
ஆஸ்திரேலியா, சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ தரப்பு தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.