Advertisment

Tamil News : இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் : எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

Tamil Nadu News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Madras High Court has stayed the trial of Edappadi Palaniswami

Tamil News live Updates

பெட்ரோல்- டீசல் விலை

Advertisment

சென்னையில் 21வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை.

ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2808 மில்லியன் கனஅடியாக உள்ளது.  நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 182 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 218 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 427 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Apr 06, 2024 07:11 IST
    இந்தியா கூட்டணி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார் : எடப்பாடி பழனிச்சாமி

    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க காங்கிரஸ் இணைந்துள்ள இந்தியா கூட்டணி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளாா.



  • Apr 05, 2024 22:00 IST
    மு.க. ஸ்டாலினை புலிகேசியுடன் ஒப்பிட்ட எடப்பாடி

     

    வெள்ளைக்கொடி ஏந்திய 23ஆம் புலிகேசி போல "வெள்ளைக்குடை ஏந்திய பொம்மை வேந்தர்" மு.க. ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.



  • Apr 05, 2024 21:47 IST
    பா.ஜ.க.வோடு, அ.தி.மு.க.வையும் விரட்டியடிப்போம்; மு.க. ஸ்டாலின் ட்வீட்

    பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுகவை விரட்டியடிப்போம் என தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து டவிட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு!

    பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்!

    இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.



  • Apr 05, 2024 20:32 IST
    காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பா.ஜ.க-வுக்கு தடை போடும் அறிக்கை; மு.க. ஸ்டாலின்


    காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாட்டை பின்நோக்கி இழுத்துச் செல்லும் பாரதிய ஜனதா கட்சிக்கு தடை போடும் தேர்தல் அறிக்கை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 05, 2024 19:48 IST
    சோம்நாத் ஆலயத்தில் ஹர்திக் பாண்ட்யா வழிபாடு


    குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வழிபாடு நடத்தினார்.



  • Apr 05, 2024 19:46 IST
    தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி

     

    இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளார்.



  • Apr 05, 2024 19:08 IST
    இந்தியா கூட்டணி வெல்லும்; மு.க. ஸ்டாலின் ட்வீட்


    தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 05, 2024 18:32 IST
    ஆடு, மாடு மாதிரி விரட்டுறாங்க; அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் விலகல்

     

    அதிமுகவில் இருந்து விலகுவதாக நட்சத்திர பேச்சாளர் நடிகை ஜெயதேவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜெயலலிதா அம்மா இருக்கும்போது வெள்ளி டம்ளர்ல காபி கொடுத்தாங்க.. கார் கொடுத்து பிரசாரத்துக்கு அனுப்புனாங்க.. ஆனா இப்போ, எங்களைப் போன்ற பழைய ஆட்களை எல்லாம் ஆடு, மாடு மாதிரி விரட்டுறாங்க” எனத் தெரிவித்தார்.



  • Apr 05, 2024 18:04 IST
    சிறுத்தையை பிடிக்க முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு விரைந்த சிறப்புக் குழு

    மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.



  • Apr 05, 2024 18:02 IST
    நாமக்கல்; மரத்தின் மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    இந்த விபத்தில், சீராம்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின் மற்றும் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் ஸ்ரீதர் என்பவர் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • Apr 05, 2024 18:00 IST
    தேர்தல் பறக்கும் படையினர் புகார்: திருப்பூர் பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

     “வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்” என மிரட்டியதாக திருப்பூர் பா.ஜ.க வேட்பாளர் முருகானந்தம் மீது தேர்தல் பறக்கும் படையினர் புகார் அளித்தனர். தேர்தல் பறக்கும் படையினரின் புகாரின் பேரில் திருப்பூர் பா.ஜ.க வேட்பாளர் முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Apr 05, 2024 17:06 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் - திருமாவளவன்

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நெறு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.



  • Apr 05, 2024 17:04 IST
    பா.ஜ.க தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது -வி.சி.க எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ்

    வி.சி.க எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ்: “பா.ஜ.க தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது; கச்சிதமாக மோடியின் கதையை முடித்துவிட்டது காங்கிரஸ். நடைபயணத்தில் ராகுல் கண்டதும் கேட்டதும், நாட்டின் எண்ணமும் வண்ணமுமே காங்கிரசின் தேர்தல் அறிக்கை; தத்துவமே தலைவன். தேர்தல் அறிக்கையே நாயகன். தீ பரவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Apr 05, 2024 16:41 IST
    பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல்; திருப்பூர் பா.ஜ.க வேட்பாளர் மீது புகார் - ஈரோடு கலெக்டர் தகவல்

    கோபிசெட்டிபாளையத்தில் தனது காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக, திருப்பூர் மாவட்டம், குன்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுகரா எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Apr 05, 2024 16:37 IST
    பெங்களூரு குண்டு வெடிப்பு - பா.ஜ.க நிர்வாகியிடம் என்.ஐ.ஏ விசாரணை

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் முசஃபிர் ஹுசைனுடன் தொடர்பில் இருந்த பா.ஜ.க நிர்வாகி சாய் பிரசாத்திடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. சிமோகா மாவட்டம், தீர்த்தள்ளி பகுதியில் வசித்து வரும், சாய் பிரசாத்தை என்.ஐ.ஏ விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது.



  • Apr 05, 2024 16:29 IST
    சிதம்பரத்தில் வி.சி.க - பா.ஜ.க கூட்டணி மோதல்

    கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் வி.சி.க - பா.ம.க -வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரத்தில், தி.மு.க கூட்டணியினரும் பா.ஜ.க கூட்டணியினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க கவுன்சிலர் வீட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வாக்கு சேகரித்தபோது தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில், 3 பேர் கைது செய்யப்படுள்ளார்கள். பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக பா.ம.க-வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Apr 05, 2024 15:31 IST
    சிக்குமா சிறுத்தை? - வந்தது தெர்மல் ட்ரோன் கேமரா

    மயிலாடுதுறையில் வலம் வரும் சிறுத்தையை கண்காணிக்க, தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது. 

    தர்மபுரியில் இருந்து வரவழைக்கப்பட்ட தெர்மல் ட்ரோன் கேமரா இரவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

    தற்போது தெர்மல் ட்ரோன் கேமராவை வனத்துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், 3வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 



  • Apr 05, 2024 15:26 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - திருமாவளவன் வரவேற்பு!

    " ஒன்றிய அரசுப்பணியில் பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு புரட்சிகரமான திட்டம். இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உயர்த்தும் நல்ல திட்டம். நீட் தேர்வில் மாநில அரசின் முடிவிற்கே விடுவது நம்பிக்கையளிக்கிறது.

    பொதுப் பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்றுவது மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாக உள்ளது. சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்குவது நல்லது. இத்தேர்தல் அறிக்கை இந்தியாக் கூட்டணிக்கு வலுச்சேர்க்கும்." என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். 



  • Apr 05, 2024 14:18 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

    மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுத்தல். அண்டை நாடுகளால் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க புதிய வழிமுறை. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி. மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் 

    பண மதிப்பிழப்பு, ரஃபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விசாரணை. அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை உறுதி செய்யப்படும்



  • Apr 05, 2024 13:40 IST
    தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினருக்கு பா.ஜ.க வேட்பாளர் மிரட்டல் 

    "சவுண்டெல்லாம் விடாத.. வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வச்சுடுவேன்" என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனை நடத்த முயன்ற தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினரை பகிரங்கமாக திருப்பூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார். 



  • Apr 05, 2024 13:29 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    மத்திய அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்;

    பெண்கள், ஓ.பி.சி. , எஸ்.இ, எஸ்.டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்



  • Apr 05, 2024 12:40 IST
    காங். தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள்

    பி.எம். கேர்ஸ் நிதி ஊழல் குறித்து விசாரிக்கப்படும்;

    தேர்தல் பத்திரம் ஊழல் குறித்த விசாரணை நடத்தப்படும்;

    ஒரு நாடு ஒரே தேர்தல்திட்டத்தை காங்கிரஸ் கொண்டுவராது;

    கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும்



  • Apr 05, 2024 12:30 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    புதுச்சேரி, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்;

    மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்;

    100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்;

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்கப்படும்;

    அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்



  • Apr 05, 2024 12:29 IST
    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

    பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்

    அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்

    10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்

    பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்

    பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்



  • Apr 05, 2024 12:09 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

    2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்;

    மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும்

    மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு

    1-ம் வகுப்பு  முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி இலவசமாக்கப்படும்

    மாநில அரசுகள் விருப்பப்பட்டால் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்

    பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூதாயத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு

    ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச்சலுகை வழங்கப்படும்



  • Apr 05, 2024 12:02 IST
    டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

    நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்

    இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்

    ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்

    ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்

    நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்

    2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி



  • Apr 05, 2024 11:34 IST
    வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி

    மக்களவை தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்

    உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வுதளம், மின் இணைப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும்

    15X15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்

    குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும்

    அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம்



  • Apr 05, 2024 11:34 IST
    இந்திய பொருளாதாரமும், ரூபாயின் மதிப்பும் உறுதியாக உள்ளது

    இந்தியாவின் பண வீக்க விகிதம் குறைந்து வருகிறது;

    இந்திய பொருளாதாரமும், ரூபாயின் மதிப்பும் உறுதியாக உள்ளது;

    இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு உச்சத்தை தொட்டுள்ளது;

    பொதுமக்கள் மற்றும் பொதுப்பணங்களை‌ கையாளும் போது வங்கிகள், நிதி நிறுவனங்கள் கவனமாக செயல்பட வேண்டும்

    - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்



  • Apr 05, 2024 11:00 IST
    அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து

    ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்க அமலாக்க துறைக்கு உத்தரவு. 



  • Apr 05, 2024 10:59 IST
    அமைச்சர் ஐ பெரியசாமி மனு ஏப்.8ல் விசாரணை

    அமைச்சர் ஐ பெரியசாமியின் மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் விடுத்ததை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ பெரியசாமி மேல்முறையீடு. 



  • Apr 05, 2024 10:41 IST
    ரெப்போ ரேட்டில் மாற்றம் இல்லை

    ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை ரெப்போ விகிதம் 6.5%ஆகவே தொடரும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு



  • Apr 05, 2024 10:18 IST
    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ.6,510க்கும், சவரன் ரூ.52,080க்கும் விற்பனை. 



  • Apr 05, 2024 09:51 IST
    அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியின் சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்

    பழனி: ஆயக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியின் சிமென்ட் கூரை இடிந்து விழுந்ததில் சமையல் பணியாளர், மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்; காயமடைந்த 7 பேர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. 



  • Apr 05, 2024 09:12 IST
    அதிக திருடர்களைப் பிடித்து பாஜகவில் இணைத்துள்ளார் அண்ணாமலை

    பாஜக மாநில தலைவரான பிறகுதான் அதிக திருடர்களைப் பிடித்து பாஜகவில் இணைத்துள்ளார் அண்ணாமலை..” - ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி



  • Apr 05, 2024 09:11 IST
    தஞ்சை மக்களவை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி வாக்கு சேகரிப்பு

    தஞ்சை மக்களவை தொகுதி வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு



  • Apr 05, 2024 08:41 IST
    சிறுத்தையை பிடிக்க வனத்துறை ஆயத்தம்

    மயிலாடுதுறை, ஆரோக்கியநாதபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள சிறுத்தையை பிடிக்க ஆயத்தமாகும் வனத்துறை சிறுத்தையை பிடிக்க மதுரையில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல். 



  • Apr 05, 2024 08:03 IST
    பாஜகவின் போட்டி நாம் தமிழர் கட்சியுடன் இல்லை

    சீமானை யாரும் கண்டு கொள்வதில்லை" "பாஜகவின் போட்டி நாம் தமிழர் கட்சியுடன் இல்லை" "செல்லூர் ராஜூ நல்ல வார்த்தை பேசினால் மழை வரும்- அண்ணாமலை



  • Apr 05, 2024 08:00 IST
    முதல்வர் இன்று விழுப்புரத்தில் தேர்

    மக்களவைத் தேர்தலையொட்டி விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். விழுப்புரம் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment