குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். கோவை ஈஷா மையத்தின் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
41,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம். இதுவரை 41,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விளையாட்டில் இன்று
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. டெல்லி, அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடக்கம். 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப். 25 முதல் 27 வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் கைது செய்யப்பட்ட இருவரையும் விமானம் மூலம் தனிப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருகின்றனர். கடந்த 12-ம் தேதி திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம் இயந்திரங்களில் சுமார் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
மராட்டிய முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.
மேலும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா அதிகாரப்பூர்வ சின்னமான வில் அம்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை எடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருவர் அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்காளர்களின் கவனம் அதிமுக வசம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக திமுக வாக்காளர்களை திருமண மண்டபங்களில் தங்க வைத்து வருகிறது.
அப்போது பொழுதுபோக்கிற்காக கரகாட்டம், உதயநிதி படங்களை திரையிட்டு வருகின்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே இந்து சமய மாநாடு நடத்த அனுமதி மறுத்த இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், “வழிபாடு என்பது அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமை” எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்விந்தர் சிங் சந்து என்ற ரிண்டா, தற்போது பாகிஸ்தானில் வசிக்கிறார்
இவர், பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் ஆவார்.
இந்த நிலையில் இவரை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்காசி அருகே புளியரையில் லாரியும் கேரள அரசுப் பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமுற்றனர்.
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவிடம் செல்பி கோரி ரசிகர்கள் ஹோட்டலில் தகராறு செய்தனர்.
இதில், குற்றம் சாட்டப்பட்ட சமூக ஊடக பிரபலம் சப்னா கில்-லுக்கு பிப்ரவரி 20 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 316.94 புள்ளிகள் சரிந்து 61,002.57 ஆகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 91.65 புள்ளிகள் சரிந்து 17,944.20 ஆகவும் காணப்பட்டது.
பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்தப் பொறுப்பில் சிவசுந்தர் தாஸ் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் அட்டவணை இன்று வெளியானது.
இந்த அட்டவணையின்படி முதல் போட்டியில் குஜராத் அணி சென்னையை எதிர்கொள்கிறது.
பகாசூரன் படம் விழிப்புணர்வு படம். மக்கள் எங்தக் காட்சியையெல்லாம் அமைதியாக பார்ப்பார்களோ அந்தக் காட்சியை எல்லாம் அமைதியாக பார்த்தார். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
பகாசூரன் படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மேயர் தேர்தலில் இழுபறி நீடித்து வரும் நிலையில், நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமை கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 100 நாட்களில் 14,209 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்த அலுவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்ப்பு என பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
அதானி-ஹிண்டன்பர்க்கின் போது காணப்பட்ட சந்தை ஏற்ற இறக்கங்களால் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க, ஒழுங்குமுறை ஆட்சியில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் நிபுணர்கள் குழுவை அமைக்க மத்திய அரசின் பரிந்துரையை “சீல் செய்யப்பட்ட கவரில்” ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
இந்தோனேஷியாவின் தானிபார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 6.1- ஆக பதிவாகியுள்ளது
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் கதிரவன் ஐ.ஏ.எஸ், உயிரிழந்த நிலையில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நிலம் வரைமுறை, வீடு கட்டுவதற்கான உரிமம் பெறுவதற்காக அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி புகாரில் அமலாக்கத் துறை சம்மனை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.
கரூர் மாயனூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய வீதிகள் வழியாக பூத்தேரில் பவனி வந்த மாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் அம்மன் மீது மலர்தூவி வழிபாடு செய்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்.21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “அதிமுகவினர் சொல்லி தேர்தலை நிறுத்த முடியாது;முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எது வேண்டுமானாலும் சொல்லுவார், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பணம் கொடுத்தால் மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், அவர்கள் விரும்பினால் தான் வெற்றி பெற முடியும்” என்று கூறினார்.
டெல்லி டெஸ்டில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழல் மன்னன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்!
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். மேலும், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பல்வேறு நிகழ்வில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார்.
குடியரசு தலைவரை வரவேற்பதற்கான அணிவகுப்பு, பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர். மதுரை விமானநிலையத்தில் இருந்து மீனாட்சி கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும்- பசவராஜ் பொம்மை
CUET நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மதிப்பெண்கள் பதிய தேவையில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கட்டட முடிவு சான்று இல்லாமலே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம் என்று நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
2018 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பாஜக அரசு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை 2023-24 பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இதில் மாணவர்களுக்கான புதிய முதல்வர் வித்யா சக்தி திட்டம் மற்றும் மாநிலத்தின் முதோல் ஹவுண்ட் இன நாய்களை மேம்படுத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு உள்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்பான வழக்கில், பிற மாநில மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வரும் 25ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A மெயின் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் வெளியானது. http://tnpsc.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது.
இன்றைய காலை வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 174 புள்ளிகள் குறைந்து 61,145 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 47 புள்ளிகள் குறைந்து 17,988 ஆகவும் உள்ளது.
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா.
ஈரோடு இடைத்தேர்தல்- தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. வாக்காளர்களை நேரில் சந்தித்து தபால் வாக்குகளை சேகரிக்கும் தேர்தல் அலுவலக ஊழியர்கள் *போலீசார், வீடியோ எடுப்பவர் உள்பட 6 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகள் சேகரிப்பு
அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு . தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட அறிவுறுத்தல் . மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க உத்தரவு . அனைத்து கிளை மேலாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை
காராஷ்டிராவில் 2 பிரிவுகளாக இருக்கும் சிவசேனா கட்சி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு
கூவத்தை தொடர்ந்து அடையாறு ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை மூன்றாவது வழித் தடத்தில் பணி. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பசுமை வழிச்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி
பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக அனுப்ப கல்வித் துறை உத்தரவு . பள்ளிக்கு நீண்ட காலமாக வராத, நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பவும் உத்தரவு