பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
துருக்கி நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு
துருக்கி மற்றும் சிரியாவை உருக்குலைய வைத்த நிலநடுக்கம் – தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல்.
மகளிர் டி20 இன்று
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க ரூ. 35 கோடி செலவு செய்துள்ளாதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலையம் உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமுனி, காவலர் ஆனந்தராஜ் ஆகியோர்
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
எடப்பாடி பழனிசாமி, “வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'” என்று பேசியதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்து பேசிய அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'” என கடுமையாகப் பேசினார்.
இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கனிமொழி, “டேபிள்-க்கு அடியில் மண்புழு மாதிரி ஊர்ந்து சென்றதுதான் ஆண்மையா? வேஷ்டிக்கும் மீசைக்கும் ஆண்மைக்கு என்ன சம்பந்தம்? ஜெயலலிதா காலிலும் சசிகலா காலிலும் விழுந்தீங்களே, அவர்களுக்கெல்லாம் மீசை இருந்ததா? கொஞ்சம் அப்டேட் ஆகுங்க. ரூ.50,00 பணம் கொடுத்தால் அறுவை சிகிச்சையில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் ஆகலாம். இதெல்லாம் ஒரு பெரிய வீரமா?” என்று கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார்.
ஆடியோ புகார் குறித்து கே.பி.முனுசாமி விளக்கம்: “கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி காவல்நிலையத்திற்கு,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான உள்துறை விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த காவல்நிலையத்திற்கான விருது திருச்சி முசிறி காவல்நிலையத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல்நிலையத்திற்கான உள்துறை விருது வழங்கப்பட்டுள்ளது
கே.பி.முனுசாமி பேரம் பேசிய ஆடியோ வெளியானது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த இபிஎஸ் ஆதரவாளர் அக்னீஸ்வரன் “தேர்தல் நேரத்தில் கேபி.முனுசாமி மீதான குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், இதன் உண்மைத்தன்மை குறித்து அதிமுக தலைமைக் கழகம் பேசி முடிவு சொல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலம் வடக்கு மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சகாரா ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா சென்றிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க முயன்றனர். இதற்கு ப்ரித்வி ஷா மறுத்ததால் கோபமான ரசிகர்கள், அவரது காரை தாக்கினர். இது தொடர்பாக ஓஷிவாரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு
“கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான்“ “ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர்“ “ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை“
கொளத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் பெற்றுத்தர கே.பி.முனுசாமி ரூ 1 கோடி பணம் கேட்டதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். ஓரிரு நாட்களில் பதில் வரவில்லை என்றால் வீடியா ஆதாரத்தையும் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் பொறுப்பில் குருத்திகா அனுப்பி வைப்பு. பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்த கோரி காதல் கணவன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் ஊரல் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிணறு, குளம் மாசுபடும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக – திமுகவினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்புடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை தான் கேட்பார்கள் என்பது இல்லை. வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம் என அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தபோது இ.பி.எஸ் கூறியுள்ளார்
வேலம்பட்டியில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் உறவினர்கள். இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு இணைத்து சில கட்சிகள் வதந்திகளைப் பரப்புகின்றன. அவ்வாறு சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை என எஸ்.பி சரோஜ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உத்திரபிரதேசத்தில் பரபரப்பு நிலவி வருகிறது
மகாராஷ்டிர அரசியல் குழப்பநிலை விவகாரம் தொடர்புடைய மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க கிடங்குகளை அமைத்து தர உத்தரவிடக் கோரி வழக்கில், நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காக்க பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது
திட்டங்களை காகிதமாக பார்க்காமல் செயல்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளின் திறமையான பணி மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியை பார்க்க முடியும் என கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மண்டலத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
இன்னும் சில தினங்களில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு விசாரணை முடிவுக்கு வரும். கொள்ளையர்கள் கேஜிஎஃப்பில் இருந்து பெங்களூரு வழியாக விமானத்தில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. கேஜிஎஃப், குஜராத், அரியானா ஆகிய 3 மாநிலங்களில் 10 நபர்களிடம் தனிப்படை தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை 20ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படும். தேர்தல் பணிக்கு 409 சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கரூர், மாயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில், மாணவிகளின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு எண்களுடன் கூடிய ஹால்டிக்கெட்டை, நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வு துறை அறிவுறுத்தி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகாலை 2 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 31.23% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் இடத்தில், ரூ.44 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் பிப்.24 முதல் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபாகரன் உயிரிழந்தார். இந்த வழக்கில் கவுன்சிலர் சின்னசாமி, புலிப்பாண்டி, காளியப்பன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில்,கர்நாடகா, கோலார் தங்க வயல் பகுதியில் தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆரீப் தங்கியிருந்த தனியார் விடுதியின் உரிமையாளர், மேலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகா சிவராத்திரி முன்னிட்டு வரும் பிப். 18 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிப்.25 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது நிச்சயம் சொல்கிறேன்; எந்த விவகாரமாக இருந்தாலும் அறிக்கை மூலமாக தெரிவிப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி பெறாமலும், விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாகவும் கூறி 10 திமுக மற்றும் 4 அதிமுக பணி மனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்காசி : ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு *புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்ட வெடி வைத்து கற்களை உடைக்க முயன்ற போது விபத்து. படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 பணிமனைகளுக்கு சீல் . துணை ராணுவம் உதவியுடன் தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள். தேர்தல் விதிகளை மீறி அதிக அளவில் ஆட்களை வைத்து கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை
ஒரு ராணுவ வீரரை கொல்வது தீவிரவாத செயலுக்கு சமம். திமுக கவுன்சிலர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 33 வயது ராணுவ வீரர் ஸ்ரீ.பிரபு வாழ தகுதியானவர். அவர் நம்முடைய எல்லை கடவுள்.- காயத்ரி ரகுராம் ட்வீட்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் . விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
கரூர், மாயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரம் – மாணவிகளை ஆற்றுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது . தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
சென்னை மாநகராட்சி 122 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ஷீபாவாசி உடல் நலக்குறைவால் காலமானார்
4 கட்டுமான நிறுவனங்களில் 3வது நாளாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்