பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூரில் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் . எர்ணாகுளம் – பாட்னா செல்லும் ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் சென்றனர். ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு .
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
உ.பி. வாரியர்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி. 212 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி.
WPL கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 202 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி, இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தகவல், ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய, 2வது முறையாக கடந்த அக்.19ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது / மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் காரணத்தை வெளியிடுங்கள்; காரணத்தை வெளியிட்ட பின் மக்களே முடிவு செய்யட்டும். யாரையோ சமாதானம் படுத்துவதற்காக தவறான சட்டத்தை கொண்டு வந்து ஆளுநரிடம் கையெழுத்திட நிர்பந்திக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதில், அவினாஷ் குமார், அபிஷேக் தீக்ஷித், ஹர்ஷ் சிங், ஆதர்ஷ் பச்சேரா, சண்முகப் பிரியா ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

இஸ்லாமியர்களைப் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில், பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்தது எழும்பூர் நீதிமன்றம். கடந்த 2021 அக்டோபரில் கல்யாணராமனை போலீஸ் கைது செய்தது. தொடர்ந்து, அவதூறு பரப்பியதால் குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றம் பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில், சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், உள்ளிட்டோரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 1’ படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் “காகிச்சட்ட போடுற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நேரம் வரும் அதுக்காக நாம காத்திருக்கனும்” என்ற வசனம் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுனர் அர்.என். ரவி திருப்பி அனுப்பினார்.
இந்த மசோதா ஆளுனர் ஆர்.என். ரவியிடம் 4 மாதம் நிலுவையில் இருந்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக , தெலங்கானா மாநில முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ்வின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அமலாக்கத் துறை அதிகாரிகளால் கவிதா விசாரிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் அருண்பிள்ளை என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கவிதாவின் பினாமி என்று கூறப்படுகிறது.
இன்றைய மகளிர் பிரீமியர் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி பேட்டிங்-கை தொடங்கி உள்ளது.
இன்று மகளிர் தினம் என்பதால் இந்தப் போட்டியை காண மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாக நிர்மல் குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அண்ணாமலையை திருத்த முடியாது என்பதால் கட்சியில் இருந்து வெளியேறினேன் என்றார்.
சிறார் திரைப்பட விழாவில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்க்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் யாரையோ நம்பி உங்களை அனுப்பி வைக்கப்போவதில்லை நானே உங்களுடன் வருகிறேன் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
ஹன்சிகா நடிக்கும் அவரது 51வது படத்திற்கு மேன் (MAN) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது; இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு! இகோர் இயக்கும் இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
சென்னை, கொளத்தூரில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி. 119 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் நலத்திட்டங்களை வழங்கினார்
நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டது நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதுதான் சரியான அங்கீகாரமாக இருக்கும்; நிச்சயம் பாராட்டு விழா நடத்தப்படும், முறையாக நடத்துவோம் -நடிகர் விஷால்
சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேசிய விவகாரத்தில், பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்தது போல், டாஸ்மார்க் ஊழியர்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 20 ஆண்டுகாலம் பணி செய்து வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், கால முறை ஊதியம் வழங்கல் உள்ளிட்ட 8 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன!
சென்னை மாநகராட்சிக்குட்ப்பட்ட ராயபுரம் திருவிக நகர் பகுதிகளில் ரூ.430 கோடி மதிப்பில் கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில் இரண்டு வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹோலி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி இசை நடனத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
95வது ஆஸ்கர் விருதுக்கான வாக்கை நடிகர் சூர்யா செலுத்தியுள்ளார். இறுதிப்பட்டியலுக்கான வாக்கை செலுத்தியதாக நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்
தனது விடா முயற்சி, கடின உழைப்பால் 3 மகள்களையும் காவல் பணியில் சேர்த்த அரக்கோணம் கீழ் ஆவதனம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு தொலைபேசியில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்
இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை – பாகம் 1' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகிறது.
கட்டுமானப் பணிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை, மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கை விரிவான விசாரணைக்காக மார்ச் 13ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 1,000 வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது
பல்வேறு தொழில் முனைவுகளுக்காக கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் 2வது இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி நேர்மறையானதே- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிபிசிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். கச்சா எண்ணெய் மாதிரியை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்- நாகையில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
தென் தமிழகம், டெல்டாவில் இன்று முதல் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல்
மும்பையில் கடற்படை அருகே நோந்து பணியின்போது கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கடற்படை தகவல். அதிலிருந்த 3 பேர் பத்திரமாக மீட்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
அதிமுக சார்பில் நடைபெறும் மகளிர் தின நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2வது முறையாக திரிபுரா மாநிலத்தின் முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்பு
ஆளுநர் சத்திய தேவ் நாராயண் ஆர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் காவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தையொட்டி மகளிர் காவலர்களை சந்தித்து முதல்வர் வாழ்த்து கூறினார்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த கமலம் சின்னசாமிக்கு அவ்வையார் விருது – முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 5,165 ரூபாய்க்கு விற்பனை
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நாளை ஆஜராக உத்தரவு .
பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #iwd2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல் பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!
பாலின சமத்துவமின்றி மானுட சமத்துவம் இல்லை – சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
சென்னை, போரூர் ஏரியில் இளைஞர் நிஷாந்தின் சடலம் கண்டெடுப்பு . காதலியை ஏமாற்றிய விவகாரத்தில் ஏரியில் குதித்து நிஷாந்த் தற்கொலை 3 நாட்களுக்கு பிறகு நிஷாந்தின் சடலத்தை மீட்டது தீயணைப்புத்துறை.
மகளிர் தினத்தையொட்டி, இன்று மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் காணலாம். மும்பையில் நடைபெறும் குஜராத், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் கிடையாது என அறிவிப்பு
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை துவங்குகிறது . ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து, போட்டியை நேரில் காண பிரதமர் மோடி திட்டம்
திரிபுராவில் பாஜக அரசு இன்று பதவியேற்பு – முதல்வராக மாணிக் சஹா மீண்டும் பொறுப்பேற்கிறார் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்