பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
ஈரோடு: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 8,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் அன்பரசன் கைது. கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
மகளிர் டி20 உலகக்கோப்பை
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இரவு 10.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள் பலபரீட்சை
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை தினந்தோறும் விசாரித்து, 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக பிரமுகரான ஆடிட்டர் ரமேஷ், கடந்த 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்; இந்த வழக்கில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் நடைபெற்ற சட்டம்-ஒழுந்து தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “சாதிக் கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும்; மாணவர்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்” என்று கூறினார்.
சேலம் சரக அளவிலான சட்டம் ஒழுங்கு தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள்,இளைஞர்கள் எதிர்காலத்தை சீரழிக்கிற போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மதுரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 950 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஓட்டுநர் உட்பட இருவர் கைது செய்யப்படனர்.
கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மாணவிகளின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞானசேகர் என்பவர் சரணடைந்தார்.
டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்திய நிலையில், கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் அலுவலங்களில் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள், பள்ளி வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் மாணவிகளின் உடல்கள் பெற்றோர் வருவதற்கு முன்பே உடற்கூராய்வு செய்யப்பட்டது என்ற புகார் எழுந்துள்ளது.
மேலும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். உலகத்தின் வல்லரசாய் பாரதம் வளர்ந்திட வேண்டும் என்பதே ஒரே சிந்தனையாக இருத்தல் வேண்டும் என சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
என்னுடைய 30 ஆண்டுகால அனுபவத்தில் அதிகளவில் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேர்மையாக இருந்திருந்தாலும் கூடுதலாக சாதித்திருக்க முடியும். ஐ.ஏ.ஸ்.ஐபிஎஸ் அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் இந்த நாட்டில் மகத்தான மாற்றங்களை உருவாக்க முடியும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாகாயம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்பெற்ற ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ முன்பு செல்பி எடுத்துக்கொண்டார் 1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில் முழு படத்தையும் தயாரிக்கக் கூடிய வகையில் அனைத்து வசதிகளும் இருந்தன
மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த 2 கிளிகளை பறிமுதல் செய்த கிண்டி வனத்துறையினர் அந்த கிளிகளை கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைத்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் போதைப்பொருளுக்கு எதிராக 'ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் கையெழுத்திட்டார்
அதிமுகவினர் தோல்வியின் விரத்தியில் பேசுகிறார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல..” -ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
குளித்தலை அருகே ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால், புதுக்கோட்டை பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறியதில் நம்பகத்தன்மை இல்லை. இது பிரபாகரன் மீதான பெருமதிப்பை சீர்குலைக்கிறது. மோடிக்கு ஆதரவாக திசை திருப்பும் சூழ்ச்சி இருக்கிறது என பெ.மணியரசன் கூறியுள்ளார்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதனை பின்பற்றி தேர்வுத்துறை அறிவித்துள்ளது
கென்யா நாட்டிலிருந்து, எத்தியோப்பியா வழியாக, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, ரூ.3 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூட்கேஸ் ரகசிய அறைக்குள் வைத்து கடத்தி வந்த, கென்ய நாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளார்
கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்தாருக்கு, தமிழக முதல்வர் மூலம் உரிய நிவாரணம் வழங்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்
ஐசிசி-யின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டி20 தரவரிசையிலும் இந்திய அணியே முதலிடத்தில் நீடிக்கிறது!
கோவை கார் வெடிப்பு, மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவடைந்தது. சோதனையில் ரூ. 4 லட்சம் பணம், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்
மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. 5 அணிகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடர் வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி முதல் மார்ச் மாதம் 26ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தனிப்படை போலீஸ் சைபர் க்ரைம் உதவியை நாடி உள்ளது. டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் கொள்ளையர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கோலார் தங்க வயல் பகுதியில் கிடைத்த சிக்னலின் அடிப்படையில் 6 பேரிடம் விசாரணை
நியூசிலாந்தின், வெலிங்டனில் உள்ள லோயர் ஹட் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
“ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்; கூட்டத்தை கூட்டக் கூடாது என்பதற்காக காவல்துறை கடுமையாக நடந்து கொள்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை; நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவோம்” – அதிமுக எம்.பி., சி.வி. சண்முகம்
சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ஈரடுக்கு பேருந்து நிலையம், விக்டோரியா கலையரங்கம் உள்ளிட்டவற்றையும் முதல்வர் ஆய்வு செய்தார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜினாமா
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்ய சேலம் சென்றார் முதல்வர்
ஓமலூரில் நடைபெற்று வரும் திட்டங்களின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்
அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல்
மங்களூருவில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்த வழக்கு
திருப்பூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இல்லத்தில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள்
சோதனை முடித்துக் கொண்டு முகமது ரிஸ்வானை பெங்களூரு அழைத்து சென்ற அதிகாரிகள்
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேர் என்ஐஏ அதிகாரிகளால் கைது
தி.மலை நல்லவன்பாளையம் பகுதியில் நேற்று இரவு கைது செய்து விசாரணை
நாடு முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது
7,240 மையங்களில் 39 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
பெரம்பலூர் : திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் . கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் அடித்து உடைப்பு – போலீசார் விசாரணை
சென்னையில் 2வது நாளாக தொடரும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை. 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை
சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் வரும் 20ம் தேதி ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க ஓபிஎஸ் அழைப்பு.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ கடந்தது.
வரும் பிப்.20ம் தேதி மாவட்ட செயலாளர்கள், ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாள். ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை எனத் தகவல்
கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்பட 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்