Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 646-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2331 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 751 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 472 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 26, 2024 22:13 IST13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குமரப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (22), குமரேசன் (22) ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள பன்னீர் செல்வம் (19) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்
-
Feb 26, 2024 22:12 ISTஇயக்குநர் அமீர் அறிக்கை!
"நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன்" - “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை!
-
Feb 26, 2024 20:59 ISTராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் வரலட்சுமி சரத்குமார் குறித்த கதாபாத்திரத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
-
Feb 26, 2024 20:56 ISTவள்ளலார் வாழ்ந்த மண்ணை சிதைக்கலாமா? தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க கேள்வி
“வள்ளலார் வாழ்ந்த மண்ணை தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் சிதைக்கக் கூடாது; வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பாமக கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
ஆனால் வடலூரில் ரூ.100 கோடி செலவில் அமையவிற்கும் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு பாமக கடும் எதிர்ப்பை பதிவு செய்யும்.
சென்னையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தால் வள்ளலாரின் புகழ் உலக அளவிற்கு பரவும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். -
Feb 26, 2024 20:42 ISTகாங்கிரஸ் தலைவர் திடீர் டெல்லி விசிட்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலுடன் நேரில் சந்திப்பு நடத்தினார். -
Feb 26, 2024 20:38 ISTசெக் மோசடி: தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது
திரைப்படம் தயாரிக்க ரூ.1 கோடியே 70 லட்சம் தனியாரிடம் கடன் பெற்று செக் மோசடியில் ஈடுபட்டதாக பிரபல சினிமா தயாரிப்பாளர் சிவ சக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
-
Feb 26, 2024 20:30 ISTபாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை: அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு
“தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்” என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்.சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது. 222 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் செல்லும் பாலாற்று நீரை, வெறும் 33 கிலோமீட்டர்களுக்கு பாலாறு நீர்வழியைக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலம் ஏற்கனவே 22 தடுப்பணைகள் கொண்டு தடுத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டுவது அனுமதிக்க இயலாத செயலாகும்.
இதனை உரிமையோடு நின்று குரல் கொடுத்து தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்த விடியா திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு பெரும் பங்கு வகிக்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் செயலை உரிய சட்ட நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழர் உரிமை மீட்போம் !
தமிழ்நாடு காப்போம் !” எனத் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 26, 2024
சர்வதேச நதிநீர்… pic.twitter.com/7tpBtFhQJY -
Feb 26, 2024 19:43 ISTஞானபீட விருது.. தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு: கவிஞர் வைரமுத்து
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் சார்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய மகா கவிதை நூலுக்கு 'பெருந்தமிழ்' விருது வரும் மார்ச் 8 ம் தேதி மலேசியாவில் வழங்க உள்ள நிலையில் அதற்கான அறிமுக கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து, “ஞானபீட விருதுகளில் தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” என குற்றஞ்சாட்டினார். -
Feb 26, 2024 19:29 ISTசென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் திறப்பு
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமைச்சர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.
-
Feb 26, 2024 19:27 ISTகீழடி அகழாய்வு அறிக்கை: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கைகளை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Feb 26, 2024 18:53 ISTபா.ம.க கூட்டணி ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்படும் - அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறினார்.
-
Feb 26, 2024 18:49 ISTதிண்டுக்கல்லில் தி.மு.க கவுன்சிலரின் தந்தை வெட்டிக் கொலை
திண்டுக்கல்லில் 25-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன் மக்கான் பள்ளி வாசல் அருகே பைக்கில் சென்றபோது, அவர் மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Feb 26, 2024 18:03 ISTஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா மனைவி வயநாட்டில் போட்டி
மக்களவைத் தேர்தலையொட்டி, கேரளாவில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா மனைவி ஆன்னி ராஜா போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
-
Feb 26, 2024 17:47 ISTரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தலில் கைதானவர்கள் யார்?
ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதி செயல்பட்டது தெரியவந்துள்ளது.
-
Feb 26, 2024 17:42 ISTவிளவங்கோடு தொகுதி காலி; தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலர் கடிதம்
விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, ராஜினாமா செய்தார். இதையடுத்து, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர் கடிதம் அளித்துள்ளார். அதே போல, திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்க வேண்டுமா என்பது சபாநாயகர் பரிசீலனையில் உள்ளது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.
-
Feb 26, 2024 16:32 ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ரூ.215 கோடி நிதி
“பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் 22-வது தடுப்பணை அமைப்பதற்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி அளித்து ரூ.215 கோடி நிதியும் அறிவித்து உள்ளார்; கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஏற்புடையது அல்ல; ஒரு நதி உருவாகும் இடமும் அது முடிவடைகிற இடமும் சம மதிப்புடையது ஆகும்” என்று முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
-
Feb 26, 2024 16:01 IST"10 ஆண்டுகளாக அதிகாரிகள் தூக்கத்தில் இருந்தனரா?" - ஐகோர்ட் கேள்வி
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், "விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? என்றும், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டடங்கள் கட்ட மதுரை மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம் கொடுத்த அனுமதி எத்தனை? என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Feb 26, 2024 16:00 ISTகீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஐகோர்ட் உத்தரவு
கீழடியில் நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்கமுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த பிரபாகர் மனு தாக்கல் செய்த நிலையில், மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Feb 26, 2024 15:48 ISTProud of you” - கணவரின் செயல்பாடுகள் குறித்து சௌமியா அன்புமணி பெருமிதம்!
“சென்னையில் நேற்று பிரதமர் திறந்து வைத்த தேசிய முதியோர் நல மையத்திர்கான முன் முயற்சியை சென்னை மற்றும் டெல்லி எய்ம்ஸ் -ல் அமைக்க 2007ல் இந்தியாவின் அமைச்சராக நீங்கள் இருந்தபோதே எடுத்தற்காக உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்" என்று என்று அன்புமணி ராமதாஸ் குறித்து சௌமியா அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Feb 26, 2024 14:56 ISTநாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி
மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில், அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்? சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.
-
Feb 26, 2024 14:43 ISTஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸில் பொறுப்பு
பொருளாதார வல்லுனரான ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
-
Feb 26, 2024 14:22 ISTஓ.பி.எஸ் - டிடிவி தினகரன் எந்தக் கூட்டணி?
கூட்டணிக்கு ஒரு காந்தம் இருக்க வேண்டும், கூட்டணி பந்தத்தை இறுக்க கோந்தாக யாராவது செயல்பட வேண்டும் என ஓ.பி.எஸ், தினகரனுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்
-
Feb 26, 2024 14:17 ISTடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அசத்தியுள்ளது
-
Feb 26, 2024 13:52 ISTரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல்
ரூ.41,000 கோடியில் 2,000 ரயில்வே கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
-
Feb 26, 2024 13:33 ISTஇ.பி.எஸ் வழக்கை நிராகரிக்க வேண்டும் - உதயநிதி
கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக அமைச்சர் உதயநிதி மீது இ.பி.எஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்தநிலையில், இ.பி.எஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
-
Feb 26, 2024 13:20 ISTதி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை
நிலத்தரகர் கொலை வழக்கில், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிலத்தகராறு விவகாரத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில், ரங்கநாதன் உள்பட 12 பேரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
-
Feb 26, 2024 13:06 ISTதா.மா.கவின் இளைஞரணித் தலைவர் யுவராஜா இ.பி.எஸ்-ஐ சந்திக்க உள்ளார்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா, சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கச் சென்றுள்ளார்.
-
Feb 26, 2024 13:04 ISTபா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற ஜி.கே வாசனின் முடிவை உண்மையான தமாகா தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்
பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற ஜி.கே வாசனின் முடிவை உண்மையான தமாகா தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்" - மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை
-
Feb 26, 2024 12:46 ISTநீர்நிலைகளும் அழிக்கும் நோக்கில் அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்
“பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது; விளைநிலங்களையும், நீர்நிலைகளும் அழிக்கும் நோக்கில் அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்” - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் X தளத்தில் பதிவு
-
Feb 26, 2024 12:12 ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்குக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன்
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்குக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன்; தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு
-
Feb 26, 2024 12:02 ISTஅடுத்த 100 நாட்களில் ஜி.கே.வாசனின் அறிவுறுத்தலில் வளமான கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவோம்
“எல்லோருடனும் இணைந்து வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம்; தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வலிமையான கூட்டணி அமையும்; பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் ஜி.கே.வாசன்; ஜி.கே.வாசனிடம் நான் எப்போது அரசியல் ஆலோசனைகள் பெறுவது உண்டு; அடுத்த 100 நாட்களில் ஜி.கே.வாசனின் அறிவுறுத்தலில் வளமான கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்குவோம்- அண்ணாமலை
-
Feb 26, 2024 12:00 ISTமூப்பனாரின் கனவுகளை நிறைவேற்ற பாலம் அமைத்துள்ளார் ஜி.கே.வாசன் : அண்ணாமலை
கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனைப் புகழ்ந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. மூப்பனாரின் கனவுகளை நிறைவேற்ற பாலம் அமைத்துள்ளார் ஜி.கே.வாசன் எனப் புகழாரம்.
-
Feb 26, 2024 12:00 ISTபாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சேரவுள்ளதாக தகவல்
பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சேரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
Feb 26, 2024 11:36 ISTஜி.கே.வாசனுடன் அண்ணாமலை சந்திப்பு
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது, த.மா.கா பாஜக - த.மா.கா இடையே கூட்டணி உறுதியான நிலையில் சந்திப்பு
-
Feb 26, 2024 11:33 ISTதமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது-செல்வப்பெருந்தகை
“தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது; மீனவர்கள் மீது மத்திய பாஜக அரசிற்கு அக்கறை இல்லை; மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது இதுபோன்ற பிரச்னைகள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தோல்வியை காட்டுகிறது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாடு மீனவ சமூக மக்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது-தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ
-
Feb 26, 2024 11:23 ISTஞானவாபி மசூதி கமிட்டியின் மனு தள்ளுபடி
ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி அளித்த வாராணசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு மசூதி கமிட்டியின் மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்
-
Feb 26, 2024 10:56 ISTஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. தினமும் விசாரணை நடத்தி, வரும் ஜூலைக்குள் வழக்கை முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு.
மார்ச் 28-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த வேண்டும். ஆஜராகாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
-
Feb 26, 2024 10:38 ISTயாருடன் கூட்டணி? - சரத்குமார் விளக்கம்
அதிமுக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. பாஜக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது- சமக தலைவர் சரத்குமார்
-
Feb 26, 2024 10:37 ISTதி.மு.க- சி.பி.ஐ 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற 2-ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு.
-
Feb 26, 2024 10:37 ISTதி.மு.க- சி.பி.ஐ 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற 2-ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு.
-
Feb 26, 2024 10:31 ISTபா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டி: ஜி.கே.வாசன்
பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பா.ஜ.கக கூட்டணியில் இடம்பெறுகிறோம்- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு
-
Feb 26, 2024 09:55 ISTஅரக்கோணம் அருகே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் நிறுத்தி வைப்பு
அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் சிக்னல் பழுதானதால் விரைவு ரயில்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை - மைசூர் சதாப்தி அதிவிரைவு ரயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டது. சென்னை - கோவை விரைவு ரயில், அரக்கோணம் - வேலூர் ரயில் ஆகியவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
-
Feb 26, 2024 09:54 ISTதங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹46,480-க்கும் ஒரு கிராம் தங்கம் ₹5810-க்கும் விற்பனை.
-
Feb 26, 2024 09:52 ISTதி,மு.க- சி.பி.ஐ: 2ம் கட்டப் பேச்சுவார்த்தை
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே 2ம் கட்டப் பேச்சுவார்த்தை
-
Feb 26, 2024 09:46 ISTஒரு வாரத்தில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் தி.மு.க
ஒரு வாரத்தில் தொகுதி பங்கீட்டை முடிக்கிறது தி.மு.க
ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்கிறது தி.மு.க
தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக
கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
காங்கிரஸுடன் ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை
-
Feb 26, 2024 09:40 ISTஆந்திர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளி அருகே நடந்த சாலைவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு. பைக் மற்றும் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் கவலைக்கிடம்
-
Feb 26, 2024 09:40 ISTஜி.கே.வாசனை சந்திக்கிறார் அண்ணாமலை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி இன்று உறுதியாக வாய்ப்பு
-
Feb 26, 2024 08:22 ISTஅமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணை
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரித்தது. தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு என பெரியசாமி மீது வழக்கு.
-
Feb 26, 2024 08:10 IST17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Feb 26, 2024 08:05 ISTகடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல்: ஒருவர் பலி
நாகை கடலில் திடீர்குப்பம்- கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி. பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதில் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தை சேர்ந்த சிவனேசெல்வம் என்பவர் பலி. நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் திடீர்குப்பத்தை சேர்ந்த காலச்சிநாதன் என்பவர் கடலில் மூழ்கி மாயம். மோதலில் காயமடைந்த மற்றொரு மீனவர் ஆத்மநாதன் நாகை மருத்துவமனையில் அனுமதி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.