Advertisment

Tamil news today : துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 50 ஆயிரத்தை தாண்டும் என ஐ.நா. அதிர்ச்சித் தகவல்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today : துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம்:  உயிரிழப்பு 50 ஆயிரத்தை தாண்டும் என ஐ.நா. அதிர்ச்சித் தகவல்

A man searches for people in the rubble of a destroyed building in Gaziantep, Turkey, Monday, Feb. 6, 2023. A powerful quake has knocked down multiple buildings in southeast Turkey and Syria and many casualties are feared. (AP Photo/Mustafa Karali)

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் நிலநடுக்கம்

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு . ஏற்கனவே நடைபெற்ற நிலநடுக்கத்தில் 34 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நீர் நிலவரம்

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 3120 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:19 (IST) 13 Feb 2023
    பிரபாகரனை நேரில் காட்ட சொல்லுங்கள் சந்திக்கிறேன் - கே.எஸ்.அழகிரிசொல்லுங்கள் சந்திக்கிறேன் - கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: “பிரபாகரனை நேரில் காட்ட சொல்லுங்கள் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


  • 22:15 (IST) 13 Feb 2023
    சென்னை நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சாலையில் போக்குவரத்து மாற்றம்; 2 ஆண்டுகள் நீட்டிப்பு

    மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சாலையில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.


  • 22:12 (IST) 13 Feb 2023
    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்-கள் கொள்ளை எதிரொலி; 6 காவல்துறையினர் பணியிட மாற்றம்

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


  • 22:09 (IST) 13 Feb 2023
    திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம்-கள் கொள்ளை எதிரொலி; 6 காவல்துறையினர் பணியிட மாற்றம்

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.


  • 21:56 (IST) 13 Feb 2023
    மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது; மின் இணைபுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான்; முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


  • 21:52 (IST) 13 Feb 2023
    பிரபாகரனை நேரில் காட்ட சொல்லுங்கள் சந்திக்கிறேன் - கே.எஸ்.அழகிரிசொல்லுங்கள் சந்திக்கிறேன் - கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: “பிரபாகரனை நேரில் காட்ட சொல்லுங்கள் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


  • 20:55 (IST) 13 Feb 2023
    பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

    பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

    செய்தார். நடிகை சமந்தா படிவழி பாதையில் நடந்து வந்து 600 படிகள் சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்தார். தனது உடல்நலம் முன்னேறுவதற்காக கோவிலில் வழிபாடு செய்தார்.


  • 20:31 (IST) 13 Feb 2023
    முகத்தை அடையாளம் காணும் கேமராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும் - டி.ஜி.பி சைலேந்திரபாபு

    திருவண்ணாமலையில் நேற்று 4 ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளைபோனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினார். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.கள் உடைக்கப்படும்போது அந்த மையத்திலும், அருகே உள்ள காவல் நிலையத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


  • 19:54 (IST) 13 Feb 2023
    ‘ஆதி மஹோத்சவ்' பழங்குடி திருவிழா.. பிப்.16 மோடி தொடங்கிவைக்கிறார்

    டெல்லியில் 15 நாள் பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ்’வை பிரதமர் மோடி பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.


  • 19:42 (IST) 13 Feb 2023
    பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? சீமான் பதில்

    பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை; எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியவர், 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்க மாட்டார்; குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


  • 19:32 (IST) 13 Feb 2023
    ஈரோடு இடைத் தேர்தல்; எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

    ஈரோடு இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெரியளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், ஈவிகேஎஸ் இளங்கோவனை தகுதி நீக்கம் செய்யப்படும் அளவுக்கு குற்றங்கள் நடைபெறுகின்றன என்றும் எஸ்.பி. வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.


  • 18:38 (IST) 13 Feb 2023
    பெங்களூரு நெடுஞ்சாலை திட்ட பணிகளை முடிக்க கோரிக்கை

    " "நெடுஞ்சாலை பணிக்காக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்கிறது" "ஆனாலும், சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை பணிகள் தாமதம் ஆகிறது" திட்ட பணிகளை விரைந்து முடிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை - திமுக எம்.பி. தயாநிதி மாறன்


  • 17:56 (IST) 13 Feb 2023
    “இந்த தேர்தல் எங்களுக்கு பெரிதல்ல“ : அமைச்சர் துரைமுருகன்

    பல தேர்தல்களை பார்த்த எங்களுக்கு, இந்த தேர்தல் பெரிதல்ல" "அதிமுகவினர் புகார் தரட்டும், தேர்தல் ஆணையம் பதில் சொல்லட்டும்" - அமைச்சர் துரைமுருகன்


  • 17:27 (IST) 13 Feb 2023
    என்எல்சி விரிவாக்கம் - இழப்பீடு வழங்குக : திருமாவளவன் வலியுறுத்தல்

    என்எல்சி விரிவாக்க பணிக்காக நிலம் தருபவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" "வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை அந்த பகுதியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தல்


  • 17:27 (IST) 13 Feb 2023
    என்எல்சி விரிவாக்கம் - இழப்பீடு வழங்குக : திருமாவளவன் வலியுறுத்தல்

    என்எல்சி விரிவாக்க பணிக்காக நிலம் தருபவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" "வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியை அந்த பகுதியின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தல்


  • 16:56 (IST) 13 Feb 2023
    திருவள்ளூர் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி

    திருவள்ளூர், பூண்டி பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமராக்களில் கருப்பு ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருவண்ணாமலையில் ஏற்கனவே 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள், ஆந்திரா தப்பிச்செல்லும் வழியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்


  • 16:35 (IST) 13 Feb 2023
    டெல்லி கேப்பிடல்சில் ஜெமீமா; ரூ. 2.20 கோடிக்கு ஏலம்

    மகளிர் பிரிமியர் லீக் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜெமீமா ரோட்ரிக்சை ரூ. 2.20 கோடிக்கு வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக்லானிங்-ஐயும் ரூ1.10 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது


  • 16:10 (IST) 13 Feb 2023
    ஈரோடு கிழக்கு வாக்காளர் பட்டியலில் குளறுபடி – அ.தி.மு.க தேர்தல் ஆணையத்தில் புகார்

    ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 40 ஆயிரம் பேர் அந்த தொகுதியில் வசிக்கவில்லை. சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் 2 முறை வாக்காளர் பட்டியலில் உள்ளது என அ.தி.மு.க எம்.பி. சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


  • 16:03 (IST) 13 Feb 2023
    முதுமலை புலிகள் காப்பக பகுதியில், தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக மசினக்குடி வனப்பகுதியில், தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கடும் பனியால் புற்கள், செடி, கொடிகள் காய்ந்துவிடுவதால் எளிதில் தீப்பிடிக்கும் என்பதால், காட்டுத்தீ அபாயம் உள்ளது


  • 15:48 (IST) 13 Feb 2023
    இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் இயான் மார்கன் அறிவித்துள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது


  • 15:28 (IST) 13 Feb 2023
    ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி

    ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க, ஒன்றிய அரசு குழு அமைத்துள்ளது


  • 15:13 (IST) 13 Feb 2023
    ஹர்மன்ப்ரீத் கவுர் ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

    இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது


  • 14:59 (IST) 13 Feb 2023
    அரசு விடுமுறை அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 14:25 (IST) 13 Feb 2023
    மதுரை சித்திரை திருவிழா

    மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே.5 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.


  • 13:29 (IST) 13 Feb 2023
    மேவாட் கொள்ளையர்கள்

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானா, ராஜஸ்தான் பகுதிகளைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் ஈடுபட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


  • 13:16 (IST) 13 Feb 2023
    5 தனிப்படை அமைப்பு

    கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு- கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்


  • 13:15 (IST) 13 Feb 2023
    சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி

    ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே புதிய உறவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.


  • 13:15 (IST) 13 Feb 2023
    ஈரோடு இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வரும் 14 , 15 மற்றும் 16ம் தேதிகளில் பரப்புரை செய்யவுள்ளேன்- தமிழ்நாடு காங்.,கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


  • 13:01 (IST) 13 Feb 2023
    நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் கொலை - 5 தனிப்படை அமைப்பு

    கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்

    கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

    கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்


  • 12:36 (IST) 13 Feb 2023
    காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - அரசாணை தொடர்பான வழக்கு

    பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய கோரிய மனு தள்ளுபடி ரூ.50,000 அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்


  • 12:35 (IST) 13 Feb 2023
    தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் போலீசார் புதிய தகவல்

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து கைவரிசை

    கடந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே பாணியில் ஏடிஎம் கொள்ளை

    ஒரே இடத்தில் பயிற்சி பெற்று கொள்ளையில் ஈடுபட்டார்களா என விசாரணை

    ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்த கும்பல்தான் இந்தியா முழுவதும் கைவரிசையா?

    எஸ்பிஐ ஏடிஎம்-களை குறிவைத்து கைவரிசை காட்டியது அம்பலம்


  • 12:07 (IST) 13 Feb 2023
    கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

    கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு

    ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்

    2 பேரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி வெறிச்செயல்


  • 12:02 (IST) 13 Feb 2023
    பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்

    பெங்களூருவில் 14-வது சர்வதேச விமான கண்காட்சி

    வானில் வட்டமிட்டு, டைவ் அடித்து சாகசம் நிகழ்த்திய விமானிகள்

    சி 17 போர் விமானத்துடன் சூரிய கிரண் விமானங்கள் சாகசம்


  • 11:20 (IST) 13 Feb 2023
    ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஊழியர்களிடம் விசாரணை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்

    ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை


  • 11:19 (IST) 13 Feb 2023
    நிசான் கார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

    சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

    எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ரூ, 3,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்


  • 10:51 (IST) 13 Feb 2023
    நிலத்தில் தொடங்கி ஆகாயம் வரை பல்வேறு புதிய வாய்ப்புகளை அதிகரிக்கும்

    "நிலத்தில் தொடங்கி ஆகாயம் வரை பல்வேறு புதிய வாய்ப்புகளை அதிகரிக்கும் . இந்தியா புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, விரைவான முடிவுகளை எடுக்கிறது" பிரதமர் மோடி


  • 08:56 (IST) 13 Feb 2023
    குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு

    கடலூர், செல்லாங்குப்பத்தில் குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு . ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செல்வி(45) என்பவரும் உயிரிழப்பு .


  • 08:28 (IST) 13 Feb 2023
    தோவாளை பூ சந்தையில் ரோஜா மலர்கள் 4 மடங்கு விலை அதிகரிப்பு

    காதலர் தினத்தை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்வு. ஸ்டெம் ரோஜா பூக்கள் கட்டு ஒன்று ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 550வரை விலை அதிகரிப்பு.


  • 08:14 (IST) 13 Feb 2023
    ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆசிரியர்கள் சங்கம் முழு ஆதரவு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் முழு ஆதரவு.


  • 08:13 (IST) 13 Feb 2023
    திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை

    திருவண்ணாமலை ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் -என்று காவல்துறை சந்தேகம்.


  • 08:09 (IST) 13 Feb 2023
    4 பேர் உயிரிழப்பு

    கடலூர்: திட்டக்குடி அருகே ஆவட்டி கூட்டு ரோட்டில் கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து. 4 பேர் உயிரிழப்பு


  • 08:09 (IST) 13 Feb 2023
    34 ஆயிரத்தை தாண்டியது

    துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment