Tamil News Today : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வியூகத்தை நாங்கள் அமைத்திருந்தாலும் நீங்களும் ஒரு தனி வியூகம் அமைக வேண்டும் என்று கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, “பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் இந்த திட்டம், வருகிற ஜனவரி 4-ந் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடத்தை இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. மேலும், புதிய மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Live Blog
News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் போன்ற முக்கிய முடிவுகளை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்பதைத்தான் முருகன் தெரிவித்தார் என தமிழக பாஜக துணைத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
கோவிட் - 19 தொற்றுக்கான தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி அளித்தபிறகே, அவை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 22 அன்று காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் பிரதமர் வெளியிடுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் உபரிநீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் கொங்கனாபுரம் வழியாக ஓமலூர் வரை நான்குவழி சாலை அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பொங்கல் பரிசு 2, 500 வழங்கி முதல்வர் வரலாறு படைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா, டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது.
மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ( Reform linked borrowing permissions are facilitating Ease of Doing Business reforms), தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதனால் கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும் , கர்நாடகாவிற்கு ரூ. 4,509 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.
நாட்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இருபதாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள குருத்துவாராவிற்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி பிரதமர் மோடி சென்று வழிபட்டார். பிரதமரின் வருகை திட்டமிடப்படாததால் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளோ போக்குவரத்து மாற்றங்களோ செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்த தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும். மிஷன் 200 இலக்கு நிர்ணயிக்க வேண்டும்” என்று கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு இரண்டு பலம் உள்ளது. ஒன்று அண்ணா மற்றொன்று கலைஞர்; தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும்” என்று கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்த தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களை தோற்கடிக்க நான் ஒரு வியூகம் வைத்திருக்கிறேன் என்றால் நீங்களும் ஒரு வியூகம் வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் அனிமேஷன் முறையில் திமுக தேர்தல் பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதிய விடியலுக்கு நாம் ஒன்ன்றிணைவோம் என அறைகூவல் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23ம் தேதி முதல் நேரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் சட்டமன்றத் தேர்தல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் குறைகளை எடுத்துக்கூற முடிவு செய்துள்ளது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகை ஒன்று வேகமாக பரவுவதாக அந்நாட்டு அரசு உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் தென் பகுதியில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 25வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி எல்லைகளை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளதால் டெல்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று மாலை 6.30 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights