News Highlights: அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வியூகம்- மு.க.ஸ்டாலின்

தொகுதியில் பணம் அதிக அளவில் விளையாடும். அதனால், நம் பலத்தால் வென்று காட்ட வேண்டும்.

cm edappadi k palaniswami doubts, cm palaniswami doubts abut mk stalin contest, stalin does contest assemly election, ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியுமா, எடப்பாடி பழனிசாமி, சந்தேகம், முதல்வர் பழனிச்சாமி, election case on mk stalin, திமுக, முக ஸ்டாலின், தேர்தல் வழக்கு, உச்ச நீதிமன்றம், supreme court, aiadmk, dmk, mk stalin

Tamil News Today : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வியூகத்தை நாங்கள் அமைத்திருந்தாலும் நீங்களும் ஒரு தனி வியூகம் அமைக வேண்டும் என்று கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, “பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் இந்த திட்டம், வருகிற ஜனவரி 4-ந் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் புதிதாக கட்டப்பட உள்ள மசூதியின் வரைபடத்தை இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. மேலும், புதிய மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழா 2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Live Blog

News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


19:35 (IST)20 Dec 2020

ஜெருசலமுக்கு புனிதப் பயண மானியம் உயர்த்தப்படும் – முதல்வர்

ஜெருசலமுக்கு புனிதப் பயணம் செல்ல வழங்கப்படும் மானியம் ₹20,000ல் இருந்து, ₹37 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

19:33 (IST)20 Dec 2020

உலகக்கோப்பை குத்துச் சண்டை போட்டியில் அமித் பங்கல் தங்கப்பதக்கம்

உலகக்கோப்பை குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல் தங்கப்பதக்கம் வென்றார்.

19:33 (IST)20 Dec 2020

கூட்டணியில் பாஜக மாநிலத் தலைமை குழப்பத்தை ஏற்படுத்தவில்லை – அண்ணாமலை

முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் போன்ற முக்கிய முடிவுகளை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்பதைத்தான் முருகன் தெரிவித்தார் என தமிழக பாஜக துணைத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.    

18:12 (IST)20 Dec 2020

தடுப்பு மருந்து  மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும் – மத்திய அரசு விளக்கம்

கோவிட் – 19 தொற்றுக்கான தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி அளித்தபிறகே, அவை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

18:10 (IST)20 Dec 2020

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர்  நரேந்திர மோடி டிசம்பர் 22 அன்று காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் பிரதமர் வெளியிடுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

17:46 (IST)20 Dec 2020

மேட்டூர் அணையின் உபரிநீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும்

மேட்டூர் அணையின் உபரிநீரை வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் கொங்கனாபுரம் வழியாக ஓமலூர் வரை நான்குவழி சாலை அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.  

17:45 (IST)20 Dec 2020

பொங்கல் பரிசு  2, 500 வழங்கி முதல்வர்  வரலாறு படைத்துள்ளார் – செங்கோட்டையன் கருத்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பொங்கல் பரிசு  2, 500 வழங்கி முதல்வர்  வரலாறு படைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். 

17:41 (IST)20 Dec 2020

இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழா, டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது.

17:38 (IST)20 Dec 2020

கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.‌4,813 கோடி அளிக்க மத்திய அரசு அனுமதி

மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ( Reform linked borrowing permissions are facilitating Ease of Doing Business reforms), தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதனால் கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.‌4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும் , கர்நாடகாவிற்கு ரூ. 4,509 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.  

17:34 (IST)20 Dec 2020

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைகிறது – ஹர்ஷ்வர்தன்

நாட்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை இருபதாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

17:33 (IST)20 Dec 2020

வாக்கு பதிவு எந்திரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்குத் தேவைப்படும் வாக்கு பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு எந்திரங்கள், விவி பேட் எந்திரங்கள் மகாராஸ்டிரா மாநிலத்திலிருந்து எடுத்து வரப்பட்டு உதகமண்டல கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டன.

16:20 (IST)20 Dec 2020

சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு தேர்வானது அசுரன்

கோவாயில் நடைபெறும் 51வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது படக்குழுவிற்கு கிடைத்த பெருமை என்று நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

14:47 (IST)20 Dec 2020

டெல்லியில் உள்ள குருத்துவாராவிற்கு சென்று வழிபட்ட பிரதமர் மோடி

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள குருத்துவாராவிற்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி பிரதமர் மோடி சென்று வழிபட்டார். பிரதமரின் வருகை திட்டமிடப்படாததால் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளோ போக்குவரத்து மாற்றங்களோ செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14:43 (IST)20 Dec 2020

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு; பிரதமர் சர்மா ஒலி பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

நேபாள பிரதமர் சர்மா ஒலி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

14:03 (IST)20 Dec 2020

அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:41 (IST)20 Dec 2020

மிஷன் 200: திமுகவினருக்கு இலக்கு நிர்ணயித்த ஸ்டாலின்

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்த தேர்தலில் திமுக 200 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும். மிஷன் 200 இலக்கு நிர்ணயிக்க வேண்டும்” என்று கூறினார்.

12:37 (IST)20 Dec 2020

திமுகவுக்கு 2 பலம்; ஒன்று அண்ணா மற்றொன்று கலைஞர் – மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு இரண்டு பலம் உள்ளது. ஒன்று அண்ணா மற்றொன்று கலைஞர்; தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும்” என்று கூறினார்.

12:29 (IST)20 Dec 2020

தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்த தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களை தோற்கடிக்க நான் ஒரு வியூகம் வைத்திருக்கிறேன் என்றால் நீங்களும் ஒரு வியூகம் வகுக்க வேண்டும்” என்று கூறினார்.

11:41 (IST)20 Dec 2020

அதிமுகவை நிராகரிக்கிறோம் – திமுக தேர்தல் பிரச்சார வீடியோ வெளியீடு

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் அனிமேஷன் முறையில் திமுக தேர்தல் பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதிய விடியலுக்கு நாம் ஒன்ன்றிணைவோம் என அறைகூவல் விடுத்துள்ளார்.

11:28 (IST)20 Dec 2020

டிசம்பர் 23 முதல் மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரம் – துரை முருகன் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23ம் தேதி முதல் நேரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் சட்டமன்றத் தேர்தல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் குறைகளை எடுத்துக்கூற முடிவு செய்துள்ளது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

10:45 (IST)20 Dec 2020

புதிய வகை கொரோனா – இங்கிலாந்து அரசு எச்சரிக்கை

இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகை ஒன்று வேகமாக பரவுவதாக அந்நாட்டு அரசு உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் தென் பகுதியில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

10:40 (IST)20 Dec 2020

அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக தொண்டர்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

10:27 (IST)20 Dec 2020

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

திமுக மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இன்று மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:39 (IST)20 Dec 2020

டெல்லியில் விவசாயிகள் 25வது நாளாக போராட்டம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 25வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி எல்லைகளை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளதால் டெல்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

09:35 (IST)20 Dec 2020

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத் தொடர் பகுதியில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத் தொடர் பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது; நில நடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆகப் பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:06 (IST)20 Dec 2020

இன்று 2-ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் 2-ம் கட்ட பிரசாரத்தை காஞ்சிபுரம், ஆலந்தூர், போரூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

Tamil news Today: சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.79.21க்கும் விற்பனையாகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று மாலை 6.30 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live dmk stalin election campaign former protest

Next Story
மீண்டும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை! எல்.முருகன் கருத்துக்கு அதிமுக பதிலடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com