Tamil news updates: தொடங்கியது அரையாண்டு விடுமுறை; 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 23-12- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 23-12- 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news

Puducherry schools reopen postpone

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியுள்ளது.  1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5 ஆம் தேதியும், மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Advertisment

Petrol and Diesel Price

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் மினி ஏலம் -2023 : நாளை மதியம் 2.30 மணிக்கு கொச்சியில் தொடங்குகிறது 132 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 405 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு .

சர்வதேச பரிசோதனை முக்கியம்

சர்வதேச பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை. விமானநிலையங்களில் வரும் 24ம் தேதி முதல் கட்டாய பரிசோதனை அமல்.

Advertisment
Advertisements

  • 23:54 (IST) 23 Dec 2022
    புதுச்சேரியில் ரெஸ்டோ பாரை அடித்து நொருக்கிய பொதுமக்கள்

    புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் கோயில் மற்றும் குடியிருப்பு பகுதி அருகே பார் திறக்கப்பட்டதால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் ரெஸ்டோ பாரை கற்களை வீசியும், மேசை உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தும் அடித்து நொறுக்கியுள்ளனர்.


  • 21:11 (IST) 23 Dec 2022
    உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் : மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

    மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து பேசினார்.

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். பண்டிகை காலங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை தேவை. கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் மருத்துவமனைகளில் படுக்கைகள், உபகரணங்களை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

    முன்கள பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் மருத்துவமனைகளில் படுக்கைகள், உபகரணங்களை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்


  • 20:03 (IST) 23 Dec 2022
    "திராவிட மாடல் அரசு - எல்லா மதத்திற்குமானது" - முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, பெரம்பூரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தின் நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. ஏழைகளின் கண்ணில் இருந்து வரும் ஒரு துளி கண்ணீரை துடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என கூறியுள்ளார்.


  • 19:27 (IST) 23 Dec 2022
    கனமழை எச்சரிக்கை : ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

    எதிர்வரும் கனமழையினை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் தமிழக அரசு அறிவுறுது்தியுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என பேரிடர் மேலான்மைத்துறை தெரிவித்துள்ளது.


  • 18:59 (IST) 23 Dec 2022
    கள்ளக் குறிச்சி மாணவி மரணம்.. பெற்றோரின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல் துறையினருக்கு பதிலாக அரசு வழக்குரைஞரிடம் ஒப்படைக்க, உயிரிழந்த மாணவியின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துவிட்டார்.


  • 18:58 (IST) 23 Dec 2022
    கள்ளக் குறிச்சி மாணவி மரணம்.. பெற்றோரின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல் துறையினருக்கு பதிலாக அரசு வழக்குரைஞரிடம் ஒப்படைக்க, உயிரிழந்த மாணவியின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துவிட்டார்.


  • 18:40 (IST) 23 Dec 2022
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலர் பொறுப்பு

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலர் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியாகியுள்ளது.


  • 18:24 (IST) 23 Dec 2022
    ராஜ்கோட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி

    நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயணன் குருகுலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக பேசுகிறார்.


  • 18:07 (IST) 23 Dec 2022
    பாரிஸில் துப்பாக்கிச் சூடு.. முதியவர் கைது

    பாரிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 4 பேர் காயமுற்று மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 69 வயது முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


  • 17:53 (IST) 23 Dec 2022
    இந்திய ரூபாய் சரிவு

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 9 காசுகள் சரிந்து 82.75 ஆக காணப்பட்டது.


  • 17:34 (IST) 23 Dec 2022
    அப்ஃதாப் அமீன் நீதிமன்ற காவல் 14 நாள்கள் நீட்டிப்பு

    டெல்லியில் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய நிலையில் காதலியை கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய அப்ஃதாப் அமீனின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


  • 17:31 (IST) 23 Dec 2022
    16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்

    சிக்கிமில் நிகழ்ந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 17:16 (IST) 23 Dec 2022
    ஈரோட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

    ஈரோட்டில் மக்காசோள பயிர்களுக்கு இடையே கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்ததாக 58 வயதான ஜவராய கவுடர் என்ற விவசாய கைதுசெய்யப்பட்டார்.

    அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


  • 17:07 (IST) 23 Dec 2022
    2.6 கோடிக்கு ஏலம் போன ஜம்மு காஷ்மீர் வீரர்

    ஐபிஎல் ஏலத்தில் ஜம்மு காஷ்மீர் வீரர் விவ்ராந்த் சர்மாவை 2.6 கோடிக்கு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது.


  • 16:45 (IST) 23 Dec 2022
    ஆதார் மின்சார எண் இணைப்பு டிச.31 கடைசிநாள்

    ஆதாருடன் மின்சார இணைப்பை இணைக்க வரும் 31ஆம் தேதி கடைசி நாள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.


  • 16:34 (IST) 23 Dec 2022
    பயந்துட்டியா மல.. கோவையில் திமுகவினர் போஸ்டர்

    ரபேல் வாட்ச் விவகாரத்தில் பயந்துட்டியா மல என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


  • 16:16 (IST) 23 Dec 2022
    சிக்கிம்.. வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

    வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள ஜமா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    இதில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


  • 16:02 (IST) 23 Dec 2022
    பொங்கல் பரிசில் செங்கரும்பு வழங்க கோரிக்கை

    தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறு்த்தியுள்ளனர்.


  • 15:53 (IST) 23 Dec 2022
    உயர் நீதிமன்றங்களில் 333 நீதிபதி பணியிடங்கள் காலி

    இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் 33 நீதிபதிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.


  • 15:20 (IST) 23 Dec 2022
    உயர் நீதிமன்றங்களில் 333 நீதிபதி பணியிடங்கள் காலி

    இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் 33 நீதிபதிகளுக்கான பணியிடம் காலியாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 22 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.


  • 14:43 (IST) 23 Dec 2022
    கைகலா சத்யநாராயணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    "கைகலா சத்யநாராயணா மறைவு வேதனையளிக்கிறது; தனது நடிப்பு திறன் மற்றும் மாறுபட்ட பத்திரங்களுக்காக தலைமுறைகள் கடந்து பிரபலமானவராக திகழ்வார்", என்று தனது டுவிட்டரில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 14:19 (IST) 23 Dec 2022
    கரும்பு வழங்காதது ஏமாற்றம்; பொங்கல் பரிசு ரூ5000 வழங்குக- இ.பி.எஸ்

    "தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், பொங்கல் பரிசு தொகையை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


  • 13:58 (IST) 23 Dec 2022
    வரும் முன் காப்போம்

    எந்த முறையிலிருந்து கொரோனா வந்தாலும் அதைத் தடுக்கின்ற நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ளும், வரும் முன் காப்போம் என்ற நோக்கத்தோடு செயல்படுவது தமிழக அரசு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


  • 13:31 (IST) 23 Dec 2022
    பாஜகவினர் கைது

    பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு, கார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதாக 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.


  • 12:54 (IST) 23 Dec 2022
    கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 12:54 (IST) 23 Dec 2022
    பொங்கல் பரிசு

    பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


  • 12:18 (IST) 23 Dec 2022
    நான் யார் பக்கமும் இல்லை

    ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் யார் பக்கமும் இல்லை: அனைவருக்கும் பொதுவான நபராகவே செயல்படுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிவிட்டேன்- சசிகலா


  • 12:17 (IST) 23 Dec 2022
    சசிகலா பேட்டி

    ஆறுமுகசாமி ஆணையத்தில் எனது தரப்பு விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தந்துள்ளேன். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விருப்பமில்லை என மருத்துவர்களிடம் கூறியதே ஜெயலலிதா தான் என சசிகலா கூறியுள்ளார்.


  • 11:47 (IST) 23 Dec 2022
    பாரத் ஜோடா யாத்திரை

    ஹரியானாவில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையில் திமுக எம்,பி., கனிமொழி பங்கேற்று, நடைபயணம் மேற்கொண்டார்


  • 11:34 (IST) 23 Dec 2022
    ஒத்தி வைப்பு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கால வரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.


  • 11:10 (IST) 23 Dec 2022
    கொரோனா மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

    மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும். கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் திட்டத்தில் இன்று முதல் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


  • 10:51 (IST) 23 Dec 2022
    தொடர் கண்காணிப்பு, முககவசம் அவசியம்

    தொடர் கண்காணிப்பு, முககவசம் , பூஸ்டர் டோஸ் முக்கியம் என்று பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


  • 10:44 (IST) 23 Dec 2022
    இனி போர் வேண்டாம் - புதின்

    போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக, ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.


  • 10:37 (IST) 23 Dec 2022
    இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை.

    மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனை. கொரோனா பரவல் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.


  • 10:33 (IST) 23 Dec 2022
    கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை

    கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை- அமைச்சர்

    மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்


  • 10:25 (IST) 23 Dec 2022
    பாம்பன் பாலம் கோளாறு : மதுரை பயணிகளின் ரயில் ரத்து

    ராமநாதபுரம், பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் சேவை ரத்து.


  • 10:22 (IST) 23 Dec 2022
    கூட்டறவு சங்க திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்

    கூட்டறவு சங்க திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டுகள் பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தக்கலானது.


  • 10:11 (IST) 23 Dec 2022
    தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

    ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு. கடந்த ஆறு மாதத்தில் உயிரிழப்பு இல்லை – மா. சுப்பிரமணியம்


  • 09:59 (IST) 23 Dec 2022
    தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 விமான நிலையங்கள்

    கொரோனா பரவல் - நாளை முதல் பரிசோதனை தமிழகத்தில் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 விமான நிலையங்கள் BF-7 உருமாறிய கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தகவல்


  • 09:22 (IST) 23 Dec 2022
    6 மணி நேரத்தில் எந்த நகர்வும் இன்றி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் எந்த நகர்வும் இன்றி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது - வானிலை மையம்


  • 09:01 (IST) 23 Dec 2022
    வரும் 25, 26ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் வரும் 25, 26ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


  • 09:00 (IST) 23 Dec 2022
    ஐபிஎல் - 2023 மினி ஏலம்.

    கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் ஐபிஎல் - 2023 மினி ஏலம். 132 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 405 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு


  • 08:54 (IST) 23 Dec 2022
    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வருகை

    வரும் 27ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வருகை. கோவையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜகவினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்


Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: