Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மயில்சாமி மரணம்: இன்று இறுதிசடங்கு
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. வடபழனி ஏ.வி.எம் மயானத்தில், உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
காட்டு தீயால் மரங்கள் தீயில் எரிந்து வருகின்றன
போடி மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அத்தியூத்து வனப்பகுதியில் பரவும் காட்டு தீயால் சந்தனம், தேக்கு, மிளகு, கருங்காலி உள்ளிட்ட மரங்கள் தீயில் எரிந்து வருகின்றன. வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கையை சேர்ந்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை அவசியம் என ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
ஆந்திரா மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் மீது ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து, காருக்கு தீ வைத்து கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர் சுப்ரமணியத்தை மத்திய அரசு திங்கள்கிழமை நியமித்துள்ளது.
கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்
2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியை தொலைநோக்கி மூலமாக கூட பார்க்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடந்த பரப்புரை கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
“நாம் அனைவரும் வேறுபட்டவர்கள்; இதை நாம் ஏற்றுக்கொண்டால் நாம் ஒன்றாக இருக்க முடியும், அது விதிகளை மீறுவதாக இருக்காது.”
மேலும், “நான் விதிகளை மீறுபவள் அல்ல. ட்ரெண்ட்செட்டரும் அல்ல. நான் எனது சொந்த விதிமுறைகளின்படி வாழ்கிறேன்” என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி-ரம்யா தம்பதியர் தங்களது குழந்தையர் இந்துஜா, ஜெயஸ்ரீ மற்றும் தங்கமயிலன் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது, 30 சென்ட் நிலத்தை அபகரிக்க முயலும் நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுதர கோரிக்கை விடுத்தனர்.
தென்காசியில் ரயில்வே ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடந்துள்ளது. இது குறித்து 10 தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தி கேரள இளைஞரை கைது செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு தடை கோரி கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் 4.03 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தத் தங்கம் துபாய், கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 2.02 கோடி ஆகும்.
மார்ச் 5-ல் அணி வகுப்பிற்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு டி.ஜி.பி-க்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அனுமதி அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைன் பலவீனமாக உள்ளது. மேற்கத்திய நாடுகள் பிரிந்து உள்ளன என நினைத்து ரஷ்ய அதிபர் புதின் ஓராண்டுக்கு முன்பு போர் தொடுத்தார். ஆனால், அவர் தப்பு கணக்கு போட்டுவிட்டார்.” என்று பதிவிட்டுள்ளார்.
ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால், ரூ.10,000 வரை அபராதம், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும் பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது.
விமான நிலையம் வருவதற்கு தாமதம் ஆனதால், தான் சென்னைக்கு பயணிக்க இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பிய சென்னையைச் சேர்ந்த பத்திரையா என்பவரை போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர இருந்த விமானம் புறப்படுவதை தாமதிக்க அவர் இவ்வாறு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நடிகர் ரோபோ சங்கர் உரிய அனுமதி பெறாமல் வீட்டில், வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் அவருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய துரை மற்றும் சோமு ஆகிய 2 ரவுடிகளை கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரித்து வந்தபோது, தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகளையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். குழுமாயின் அம்மன் கோயில் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் 2 பேருக்கும் காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 2 ரவுடிகளும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கழிவுநீர் கால்வாயில் 6 மாத பெண் சிசு கண்டெடுக்கப்பட்டது. சிசுவை வீசிச் சென்றவர்கள் யார்? என குடியாத்தம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் ஸ்டாலின்
கர்நாடகா, சிக்கமகளூருவில் டூவிலரில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டு துப்பாக்கியால் சுட்ட ரமேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் கபடி போட்டியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரர் மாணிக்கத்தின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்குவதற்கும், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கும் தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது – ஓபிஎஸ்
தேர்தல் முடிவு வெளியாகும் போது அனைத்தும் தெரியவரும் – ஓபிஎஸ்
சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – ஈபிஎஸ் மீது ஆவேசம் – ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு
திருச்சியில் மாநாடு நடத்த வாய்ப்பு தாருங்கள், பலத்தை நிரூபித்து காட்டுகிறோம் – வைத்திலிங்கம்
அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை, அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார் – ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் ஓபிஎஸ் ஆவேசம்
“இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது” – ஓபிஎஸ்
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உறவினரை மீட்க கோரி திருப்பூரை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனு பிப்.27க்கு ஒத்திவைப்பு
இறுதிச்சடங்கில் மயில்சாமியின் உறவினரும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி பங்கேற்பு
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு மகன்கள் இருவரும் இறுதிச்சடங்கு செய்தனர்.
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் – ராஜமன்னார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
திரைத்துறையினரோடு சேர்ந்து பொதுமக்களும் திரண்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல்
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ சிவசேனா கட்சியாக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு
நடிகர் மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், அப்பு குட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் சற்று நேரத்தில் ஆலோசனை. 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது .மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி
நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்: கமல் ட்வீட்
மயில்சாமி எனது நெருங்கிய நண்பர்; எம்.ஜி.ஆர் பற்றி தான் அதிகம் பேசுவார். விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு. விர சிவ பக்தரான மயில்சாமியை சிவராத்திரி அன்று சிவன் தன்னுடன் அழைத்து கொண்டுள்ளார், மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்- நடிகர் ரஜினிகாந்த்
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.
நடிகர் மயில்சாமி நல்ல உள்ளம் கொண்டவர் யார் உதவி கேட்டாலும் செய்பவர். எத்தனை பேர் நாம் இல்லாத போது வருகிறார்கள் என்பதே எப்படி வாழ்ந்தார் என்பதற்கு அர்த்தம் – நடிகர் பிரபு
சென்னையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு – சோகத்தில் திரையுலகம் .விண்ணதிரும் சிவ வாத்தியங்களுடன் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது. துருக்கியில் மட்டும் பலி எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்ததாக தகவல்