பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா நரகத்திற்கு செல்கிறது: டிரம்ப் ஆவேசம்
நகையுடன் இருந்த உறவை மறைப்பதாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சரணடைந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானது. அமெரிக்கா நரகத்திற்கு செல்கிறது என்றும் அமெரிக்காவின் இருளான பக்கத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளது குறிப்பிடதக்கது.
விளையாட்டு
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி;இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் காரைக்கால் திரும்பிய மீனவர்களுக்கு அரசு அதிகாரிகள் முதலுதவி வழங்கவில்லை என புகார் இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உறுதி
கர்நாடகாவில் மாட்டு வியாபாரியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பசு காவலர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினரின் உதவியுடன் ராமநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், வடலூரில் நீட் பயிற்சி மாணவி நிஷா(18) ரயில் முன் பாய்ந்து தற்கொலை * நீட் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்த நிலையில், ரயிலில் பாய்ந்து தற்கொலை – போலீசார் விசாரணை
திருவண்ணாமலை, சேவூர் அடுத்த மாங்காய் மரம் பேருந்து நிலையத்தில் உள்ள சைவ உணவகத்தில் சாப்பிட்ட உணவில் புழு நெளிந்ததால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவக ஊழியர்களிடம் கேட்டபோது புழுவை அப்புறப்படுத்தி விட்டு சாப்பிடுமாறு கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்” என உத்தரவு
மறைந்த பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது * வாணி ஜெயராம் சார்பில் அவரது உறவினர் குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்
பத்தாம் வகுப்பு படிக்கும் 1,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வழிவகை செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை கப்பலில் உள்ள சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மீனவர்கள் காரைக்கால் மீன் பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு மானியக் கோரிக்கையில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்க ரூ.87 லட்சம் செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும்” என்று அறிவித்தார்.
சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் மீது பால் வளத்துறை அமைச்சர் நாசர் பதிலுரை: அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்; தயிருக்கு தஹி, தஹிக்கு இங்கு நஹி. பால் இங்கே தூத் ஆகாது; தயிர் இங்கே தஹி ஆகாது; என்று கூறினார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர்: பால் உற்பத்தியில் எருமை மாடுகளின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதால் எருமை கன்று வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; எருமைக் கன்று வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்க்கப்படும் எருமை மாடு கன்று ஈனும் வரை கண்காணிக்கப்படும் என சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர்: “ஆவின் பண்ணைகளில் ரூ.30 கோடி செலவில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்; ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு இணைய வழி விற்பனை வசதி ஏற்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.
பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்களை உடனுக்குடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே, பெற்றுக்கொள்ளவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பா.ம.க நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்த பா.ம.க தலைவர் அன்புமணி நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி தப்பினார்.
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிசோடியா, கடந்த மார்ச் 9ம் தேதி பிஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டசபையில் வேளாண் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை முன்னிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தலா ஒரு பலா பழத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வழங்கினார்
சி.பி.ஐ, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால், ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு அளித்துள்ளார். வரப்போகும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என யாரும் என்னை மிரட்டவில்லை. முழு மனதுடன் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன் என நடிகர் சுதீப் கூறியுள்ளார்
கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
காரைக்கால் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். படுகாயம் அடைந்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர், முதலுதவி சிகிச்சை அளித்து கரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை அண்ணாமலை சந்தித்து, காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 45,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் 90 ரூபாய், உயர்ந்து 5,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 1,240 ரூபாய் உயர்ந்துள்ளது.
பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று இ.பி.எஸ் பேசியிருந்த நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக எம்.பி., தம்பிதுரை சந்தித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்கம் போன்ற திட்டங்களை எந்தக் காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் டெல்டா பகுதியில் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது- சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
நானும் டெல்டாகாரன் தான் என்கிறார் முதலமைச்சர்; இதே டெல்டாகாரன் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது. முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது; நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் தான் தீர்வு கிடைக்கும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி
நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சருக்கு வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினேன். நானும் டெல்டா காரன் தான், திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
ஓபிஎஸ்ஸை முன்னாள் முதல்வர் என குறிப்பிட்ட சபாநாயகர்
சட்டப்பேரவையில் இதுவரை ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என குறிப்பிட்டு பேசி வந்த சபாநாயகர் அப்பாவு, இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று; வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளி வாயிலாக ஆஜராகலாம். காணொளி வாயிலாக ஆஜராக விரும்பினால்
வழக்கறிஞர்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சம்பவ இடத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு
கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், ஏ.சி.யில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அரங்கில் இருந்த ஏ.சி.யில் பலத்த சத்தம் கேட்டதால் பரபரப்பு
ஏ.சி.யின் செயல்பாடு நிறுத்தப்பட்டு தற்போது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் சோகம்
சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 5,690 ரூபாய்க்கு விற்பனை.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனாவுக்கு 23,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ்
கேரளா, கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம். தாக்குதல் நடத்திய ஷாருக் சைஃபி என்பவர் மகாராஷ்டிராவில் கைது .
அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்.
விவசாயிகள் மீது பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஒன்றிய அரசு தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” . தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல்
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன; கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தொடரும் நடவடிக்கை .