Advertisment

Tamil news Today: கூட்டுறவுத் துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்தது தமிழ்நாடு அரசு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 13 September 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Today: கூட்டுறவுத் துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்தது தமிழ்நாடு அரசு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 115ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24
காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் எஸ்.பி.வேலுமணி, அவரது நண்பர் சந்திரசேகர் வீட்டிலும், சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு. தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:34 (IST) 13 Sep 2022
    எண்ணும் எழுத்தும் திட்டம்; 1 முதல் 5ம் வகுப்புக்கு பருவத்தேர்வு

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத்தேர்வை வரும் 19 முதல் 30 ஆம் தேதிகள் வரை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலாண்டு விடுமுறையில், செயலி வாயிலாக தேர்வை நடத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது


  • 21:42 (IST) 13 Sep 2022
    சென்னை, சர்வதேச ஓபன் டென்னிஸ்; இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி

    சென்னை, சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வி அடைந்துள்ளார். ஜெர்மனி வீராங்கனை தட்ஜினா மரியாவுடனான போட்டியில் தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்


  • 20:53 (IST) 13 Sep 2022
    6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

    6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், சின்னங்களை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல்கள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது


  • 20:28 (IST) 13 Sep 2022
    மேற்கு வங்க போராட்டம்; காவலரை பா.ஜ.க கொடியுடன் சென்ற கும்பல் தாக்கியதால் பரபரப்பு

    கொல்கத்தாவில் மேற்கு வங்க அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, காவலரை பாஜக கொடியுடன் சென்ற கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


  • 20:02 (IST) 13 Sep 2022
    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் லஞ்ச ஒழிப்பு சோதனை - சி.விஜயபாஸ்கர்

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஐ-போன்கள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மட்டுமே அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்


  • 19:35 (IST) 13 Sep 2022
    வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு; ரூ.32.98 லட்சம், 1228 கிராம் தங்கம், 948 கிராம் வெள்ளி பறிமுதல்

    முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கம், 1228 கிராம் தங்கம், 948 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டது. வழக்கிற்கு தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் வங்கி பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது


  • 19:15 (IST) 13 Sep 2022
    மதுரையில் உயர்தர குழந்தை நல மருத்துவமனை அமைக்க கோரிய வழக்கு; சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவு

    மதுரையில் உயர்தர குழந்தை நல மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு அமைக்க உத்தரவிட கோரிய வழக்கில், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    2018 முதல் 2021 வரை உரிய சிகிச்சை இல்லாமல் 261 குழந்தைகள் இறந்துள்ளது என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


  • 19:00 (IST) 13 Sep 2022
    ட்விட்டரில் பெயரை மாற்றிய திரிஷா

    நடிகை திரிஷா தனது பெயரை ட்விட்டரில் குந்தவை என மாற்றியுள்ளார்.


  • 19:00 (IST) 13 Sep 2022
    ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

    தெலங்கானாவில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதியை எம்.பி., ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் ஒதுக்கியுள்ளார்.


  • 18:57 (IST) 13 Sep 2022
    இங்கிலாந்தில் வீடு வாடகைகள் அதிகரிப்பு

    மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.

    இதனால் லண்டனில் உள்ள வீடுகள் 40 சதவீதம் வரை வாடகையை ஏற்றியுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.


  • 18:23 (IST) 13 Sep 2022
    மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் கைது!

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டப்பேரவை நோக்கி (நபனா அபியான்) பேரணியை பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் நடத்தினர்.

    இந்த நிலையில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, லாக்கட் சட்டர்ஜி, பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் தபாசி மோண்டால், திபாகர் கராமி உள்ளிட்ட பேரணியில் கலந்துகொண்ட முக்கிய தலைவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

    மேலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.


  • 18:12 (IST) 13 Sep 2022
    குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் - கெஜ்ரிவால் நம்பிக்கை

    குஜராத்தில் இன்னும் 2 மாதத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


  • 17:47 (IST) 13 Sep 2022
    பாங்காங்கில் ஏகே61 படப்பிடிப்பு

    நடிகர் அஜித் குமார் புதிய படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறவுள்ளது. இங்கு படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் 3 வாரங்கள் படமாக்கப்பட உள்ளன.

    அஜித் குமார் நடிக்கும் ஏகே 61 படத்தை இயக்குனர் ஹெச். வினோத் டைரக்ஷன் செய்கிறார்.


  • 17:37 (IST) 13 Sep 2022
    புதிய பாராளுமன்றத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க கோரிக்கை

    டெல்லியில் கட்டப்பட்டுவரும் புதிய பாராளுமன்றத்துக்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என தெலங்கானாவில் கே.சந்திர சேகர் ராவ் அரசு தீர்மானம் இயற்றியுள்ளது.


  • 17:11 (IST) 13 Sep 2022
    கவனம் ஈர்க்கும் ஆதித்த கரிகாலன் ட்வீட்

    நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஆதித்த கரிகாலனாவே மாறி ட்வீட் செய்துள்ளார்.

    அதில் தஞ்சை வருவதாகவும், பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா எனவும் குறிப்பிட்டுள்ளார்.


  • 17:10 (IST) 13 Sep 2022
    கவனம் ஈர்க்கும் ஆதித்த கரிகாலன் ட்வீட்

    நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ஆதித்த கரிகாலனாவே மாறி ட்வீட் செய்துள்ளார்.

    அதில் தஞ்சை வருவதாகவும், பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா எனவும் குறிப்பிட்டுள்ளார்.


  • 17:05 (IST) 13 Sep 2022
    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் - எஸ்.பி.வேலுமணி

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


  • 16:15 (IST) 13 Sep 2022
    கோவையில் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

    கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டெண்டர் முறைகேடு புகாரில் வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.


  • 15:59 (IST) 13 Sep 2022
    பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடாது - அண்ணா பல்கலைக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

    பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடாது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:12 (IST) 13 Sep 2022
    காங்கிரஸ் முடிந்துவிட்டது - அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் முடிந்து விட்டது என்றும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடும் என்றும் செவ்வாய்க்கிழமை கூறினார்.


  • 14:54 (IST) 13 Sep 2022
    கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை http://scholarships.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


  • 13:42 (IST) 13 Sep 2022
    அதிமுக தலைமை அலுவலகம் கலவர வழக்கு

    அதிமுக தலைமை அலுவலகம் கலவர வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கமளித்துள்ளது. விசாரணை குறித்த அறிக்கையை செப்.19ல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 13:27 (IST) 13 Sep 2022
    சோதனை நிறைவு

    புதுக்கோட்டை, இலுப்பூரில் விஜயபாஸ்கரின் வீட்டில், காலை 6 மணியில் இருந்து நடைபெற்று வந்த சோதனை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆர் தொடர்பாக எந்த ஆவணமும் சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.


  • 13:25 (IST) 13 Sep 2022
    5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:08 (IST) 13 Sep 2022
    ஸ்ரீமதி மரணம்.. புதிய ஆதாரம் வெளியானது

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி, இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதி தாய் செல்வி உட்பட 9 பேர் பேசியதாக வீடியோ ஆதாரம் வெளியானது.


  • 12:09 (IST) 13 Sep 2022
    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கொரோனா இறப்புகளை ஆய்வு செய்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை


  • 12:08 (IST) 13 Sep 2022
    தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    முக அமைச்சருக்கு எதிராக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை திசை திருப்ப, எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் நடத்தும் நாடகம் லஞ்ச ஒழிப்பு சோதனை தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம் - ஈபிஎஸ்


  • 11:22 (IST) 13 Sep 2022
    இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல்

    திருச்சி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் . பராமரிப்பு பணிகள் நடைபெறும் நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அதிகளவு இருசக்கர வாகனங்கள் செல்வதால், பராமரிப்பு பணி மேற்கொள்வதில் சிரமம்.


  • 11:21 (IST) 13 Sep 2022
    சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றார்.

    சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதி துரைசாமி பொறுப்பேற்பு


  • 11:20 (IST) 13 Sep 2022
    சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றார்

    சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதி துரைசாமி பொறுப்பேற்பு.


  • 10:48 (IST) 13 Sep 2022
    அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆலோசனை


  • 10:02 (IST) 13 Sep 2022
    எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்டிருந்த ஆதரவாளர்கள் கைது

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் கைது

    ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த காவல்துறை. எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் போலீசார்

    இடையே லேசான தள்ளுமுள்ளு


  • 09:32 (IST) 13 Sep 2022
    "எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர்" - ஜெயக்குமார் காட்டம்

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர்" என குற்றஞ்சாட்டினார்.


  • 09:31 (IST) 13 Sep 2022
    "எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர்" - ஜெயக்குமார் காட்டம்

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர்" என குற்றஞ்சாட்டினார்.


  • 09:11 (IST) 13 Sep 2022
    தீ விபத்தில் 8 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

    தெலங்கானா : செகந்திராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் - பிரதமர் மோடி

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் - பிரதமர் மோடி


  • 09:08 (IST) 13 Sep 2022
    ஓட்டலில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு

    தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு


  • 08:19 (IST) 13 Sep 2022
    எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்


  • 08:14 (IST) 13 Sep 2022
    சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

    வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு.

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு


Tamil Nadu Vijayabaskar Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment