Advertisment

Tamil News Today: 32 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

Tamil News Today Live: 20- 03- 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

பெட்ரோல் – வீசல் விலை

Advertisment

சென்னையில் 6- வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கு, ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கு விற்பனை.

 தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் தேர்தல் பறக்கும்படை

தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Mar 21, 2024 00:12 IST
  பொன்முடி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

  பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசின் மனு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு • Mar 21, 2024 00:11 IST
  தமிழக மீனவர்கள் 20 பேர் கைது

  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை • Mar 20, 2024 21:04 IST
  விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்

  மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். • Mar 20, 2024 21:00 IST
  அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் : இந்திய தேர்தல் ஆணையம்

  சுவர்களில் போஸ்டர்கள், அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்கள் தொடர்ந்து இடம் பெற்றுள்ளதாக வரும் புகாரைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மாலை 5 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு • Mar 20, 2024 20:01 IST
  மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை


  தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. • Mar 20, 2024 19:18 IST
  மதுபானம் விநியோகம் - கண்காணிக்க உத்தரவு

  சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் வினியோகிப்பதை, அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதுபானத்தை விற்பனை செய்யக் கூடாது.  நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்து அன்பளிப்பாக மதுபானம் வழங்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. • Mar 20, 2024 19:16 IST
  சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை

   

  ஒற்றை தலைவலியால் அவதிப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு, டெல்லி அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிடி ஸ்கேனில், மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு கண்டறியப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. • Mar 20, 2024 19:14 IST
  ED வழக்கை விசாரணை : உச்சநீதிமன்றம் கண்டனம்

  ED வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்காவிடில், சிறையில் இருப்பவருக்கும் ஜாமின் பெற உள்ள உரிமையை ED தடுக்கக் கூடாது. சட்டப்பூர்வ ஜாமின் உரிமையைத் தடுக்கும் குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. • Mar 20, 2024 17:53 IST
  அ.ம.மு.க. தொகுதி எண்ணிக்கையில் கவனம் செலுத்தவில்லை; டி.டி.வி தினகரன்

   

  “அமமுக கட்சி தொகுதிகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வில்லை. தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் அமமுகவின்  வாக்கு வங்கி அதிகம் உள்ளது” என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். • Mar 20, 2024 17:50 IST
  அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

   

  மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து புரட்சி செய்த அதிமுக அலுவலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி.
  2011-ல் அதிமுக, தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சியம் வெற்றி பெறும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். • Mar 20, 2024 16:56 IST
  தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோ பிக்; ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்ட இளையரஜா, கமல்ஹாசன்

  இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாறு தனுஷ் நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகிறது. ' இளையராஜா' பட ஃபர்ஸ்ட் லுக் கமல்ஹாசன் மற்றும் இளையராஜாவால் வெளியிடப்பட்டது. • Mar 20, 2024 16:53 IST
  சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தொலைதூர, இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு

  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர, இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியானது. தொலைதூர, இணையவழிக் கல்வியில் பயின்று 2023 டிசம்பரில் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. • Mar 20, 2024 16:31 IST
  அ.தி.மு.க கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் அறிவிப்பு

  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுகல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சியின் எம்.எம். முபாரக் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. • Mar 20, 2024 16:28 IST
  சொந்த கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது - போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

  சொந்த பயன்பாட்டு கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது. தேர்தல் நேரத்தில் சிலர் பயன்படுத்துவதாக புகார்கள் வருகிறது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். • Mar 20, 2024 16:23 IST
  மக்களவைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டி - டி.டி.வி. தினகரன் உறுதி

  அ.ம.முக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்: “அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் குக்கர் சின்னத்தில்தான் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடுவர்” என்று கூறினார். • Mar 20, 2024 16:19 IST
  ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் மீதான வழக்கு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட் உத்தரவு

  இந்திய வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்; தங்களை யார் சரியாக வழிநடத்துகிறார்கள்; யார் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதை நன்கு அறிந்துவைத்துள்ளார்கள்; நாட்டிற்கு எதிராக எதிர்மறை பிம்பத்தை உருவாக்கி வருவதாக ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து டெல்லு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • Mar 20, 2024 15:43 IST
  பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

  பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்,  “நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க தலைமை ஒதுக்கியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறினார். • Mar 20, 2024 15:37 IST
  பா.ஜ.க - த.மா.கா தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை -  ஜி.கே. வாசன்

  த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன்: “பா.ஜ.க - த.மா.கா இடையே இன்னும் தொகுதிப்பங்கீடு இறுதியாகவில்லை; தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்; தொகுதிப் பங்கீடு குறித்து பா.ஜ.க-வுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார். • Mar 20, 2024 15:07 IST
  பாஜக - தமாகா தொகுதி ஒப்பந்தம்

  பாஜக - தமாகா தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்னும் சற்றுநேரத்தில் கையெழுத்தாகிறது

  பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வருகை • Mar 20, 2024 15:03 IST
  மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல்

  வேலூர் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார் மன்சூர் அலிகான்! • Mar 20, 2024 13:47 IST
  அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்

  திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

  தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது, தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  • Mar 20, 2024 13:43 IST
  மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

  வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், "வாக்கு குறைந்தால் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும். தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்-தமிழ்நாட்டோட நலன் முக்கியம். நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். 

  ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும் தான் பொறுப்பு. தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய - நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை  எடுக்கப் போகிறேன்" என்று எச்சரிக்கைவிடுத்துள்ளார்.  • Mar 20, 2024 13:37 IST
  மத்திய இணையமைச்சர் ஷோபா மீது வழக்கு 

  மத்திய இணை அமைச்சர் ஷோபா மீதான புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் மதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  • Mar 20, 2024 13:15 IST
  மக்களவை தேர்தல் - நாளை அ.தி.மு.க 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

  நாளை அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. வருகிற 22ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது • Mar 20, 2024 12:39 IST
  'காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிப்பு' - செல்வப்பெருந்தகை பேச்சு 

  "ஓ.பன்னீர் செல்வத்தையும், டிடிவி தினகரனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் எனவும், அன்புமணி, ஜி.கே.வாசனை வைத்துக்கொண்டு குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்களை பரிந்துரைத்துள்ளோம். டெல்லியில் வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.  • Mar 20, 2024 12:38 IST
  தேர்தல் ஆணையத்தில்  ஆர்.எஸ்.பாரதி மனு

  தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள மத்திய இணையமைச்சர் ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார்.  • Mar 20, 2024 12:36 IST
  பா.ஜ.க கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு 

  பா.ஜ.க கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  • Mar 20, 2024 10:35 IST
  கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை: இ.பி.எஸ்

  கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. யார் வந்தாலும் வரவேற்போம் அ.தி.மு-கவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது - எடப்பாடி பழனிசாமி  • Mar 20, 2024 10:05 IST
  அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

  அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 

  1.  வடசென்னை – ராயபுரம் ஆர்.மனோ
  2.  தென்சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
  3.  காஞ்சிபுரம் – ராஜசேகர்
  4.  அரக்கோணம் – ஏ.என்.விஜயன்
  5.  கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
  6.  ஆரணி – கஜேந்திரன்
  7.  விழுப்புரம் – பாக்யராஜ்
  8.  சேலம் – விக்னேஷ்
  9.  நாமக்கல் – கவிமணி
  10.  ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
  11.  கரூர் – தங்கவேல்
  12.  சிதம்பரம் – சந்திரகாசன்
  13.  நாகப்பட்டினம் – சுர்ஜித் சங்கர்
  14.  தேனி – வீ.டி.நாராயணசாமி
  15.  மதுரை – டாக்டர் சரவணன்
  16.  ராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள் • Mar 20, 2024 09:45 IST
  கேரளாவைச் சேர்ந்த 80 மீனவர்களை நடுக்கடலில் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தன

  கேரளாவைச் சேர்ந்த 80 மீனவர்களை நடுக்கடலில் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர் • Mar 20, 2024 09:42 IST
  மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம் : கோவை பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

  கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கோவை பாஜக நிர்வாகிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  • Mar 20, 2024 08:44 IST
  ஏப்ரல் 19 - காலை 7ல் இருந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் - அரசாணையை வெளியிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.  • Mar 20, 2024 08:11 IST
  மக்களவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது

  மக்களவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று துவக்கம்.  • Mar 20, 2024 08:06 IST
  திமுக வேட்பாளர்கள் பட்டியல்: இன்று வெளியிடுகிறார் ஸ்டாலின்

  மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment