Advertisment

Tamil News Highlights: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

15/02/2024- இன்று நடைபெறும் செய்திகளை, இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Update

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 762 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 487 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Feb 15, 2024 22:23 IST
  வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - கமல்ஹாசன்

  உச்சநீதிமன்றம், நமது தேர்தல் நிதிச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தவறை சரிசெய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்களை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று குறைத்ததன் மூலம், பின் அறை அரசியல் மற்றும் நிதியத்தின் இருண்ட அரங்குகளுக்கு உச்ச நீதிமன்றம் வெளிச்சம் போட்டுள்ளது.

  இந்த தீர்ப்பு சலுகை பெற்ற சிலரின் கைகளில் அதிகாரம் குவிவதை தடுக்கிறது. வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகம் செழிக்கும் அடித்தளம். தாங்கள் ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு எப்படி நிதி வழங்கப்படுகிறது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது, என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் • Feb 15, 2024 21:52 IST
  பிரீமியர் வாலிபால் லீக்; சென்னை பிலிட்ஸ் அணி தோல்வி

  சென்னையில் நடைபெற்று வரும் பிரீமியர் வாலிபால் லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை பிலிட்ஸ் அணியை அகமதாபாத் அணி வீழ்த்தியது. 3-0 என்ற நேர் செட் கணக்கில் அகமதாபாத் அணி வெற்றி பெற்றது. • Feb 15, 2024 21:18 IST
  தென்பெண்ணை நீர் பங்கீட்டு பிரச்சனை; குழு அமைப்பு

  தென்பெண்ணை நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பேச்சுவார்த்தை குழுவின் முதல் கூட்டம், டெல்லியில் பிப்.21ம் தேதி நடக்கிறது • Feb 15, 2024 20:50 IST
  ரன் அவுட் ஆன சர்ஃபராஸ் கான்: வருத்தம் தெரிவித்த ஜடேஜா

  நீண்டகால போராட்டத்திற்கு பிறகு தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
  அதற்கு ஜடேஜா இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் . • Feb 15, 2024 20:47 IST
  தேர்தல் பத்திரம் ரத்து: மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

  தேர்தல் பத்திரம் ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார். • Feb 15, 2024 20:04 IST
  அள்ளித்தரும் நிதியில் கிள்ளிக் கொடுக்கிறது தமிழகஅரசு: அண்ணாமலை

  “மத்திய அரசு அள்ளிக் கொடுக்கும் நிதியில் தமிழக அரசு மக்களுக்கு கிள்ளி கொடுக்கிறது; தமிழக அரசு அளித்த ரூ.6 ஆயிரம் நிதியில் 75 சதவீதம் மத்திய அரசு கொடுத்தது” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்தார். • Feb 15, 2024 19:22 IST
  அக்கோன்காகுவா மலைத்தொடரில் எறி தமிழ் பெண் சாதனை: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

  “அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா மலைத்தொடர், 22378அடி உயரத்துடன், தென் அமெரிக்க கண்டத்தில் உயரமான மலைத்தொடராக உள்ளது. 
  அந்த மலைத்தொடரில் ஏறி சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரி முத்தமிழச்செல்விக்கு என் அன்பும், வாழ்த்தும்.


  உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து இம்மாதிரியான சாதனைகளைப் படைத்து வரும் சகோதரி முத்தமிழ்ச்செல்வியின் தீரமிகு செயல்கள் போற்றத்தக்கது" என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • Feb 15, 2024 18:44 IST
  அஜித் பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ்; தகுதி நீக்க மனுக்களை தள்ளுபடி சபாநாயகர்

  ஜூன் 2023-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சரத் பவார் மற்றும் அஜித் பவார் கோஷ்டிகளின் மனுக்களை சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் நிராகரித்தார். • Feb 15, 2024 17:44 IST
   பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிப். 20 முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற தளத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். • Feb 15, 2024 17:42 IST
  கல்வி நிதியில் முறைகேடு: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

  கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில்  முறைகேடு நடந்ததாக, திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். • Feb 15, 2024 17:39 IST
  தேர்தல் பத்திரம் ரத்து: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு

  தேர்தல் பத்திரம் ரத்து என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் சனநாயகத்தை காப்பாற்றுவதில் இந்த தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது, அதற்காக உச்ச நீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம், இந்த தீர்ப்பை வழங்கியது போலவே, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். • Feb 15, 2024 17:13 IST
  இ.டி. தரப்பு வாதம் நிறைவு; செந்தில்பாலாஜி ஜாமீன் மனு  ஒத்திவைப்பு

  செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அமலாக்கத்துறை வாதம் நிறைவடைந்த நிலையில், செந்தில்பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. • Feb 15, 2024 16:52 IST
  20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்!

  பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  • Feb 15, 2024 16:30 IST
  அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 

  "பழனி கிரிவல வீதியில் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியைப் போல பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும். கிரிவல வீதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பக்தர்களுக்கு இலவசமாக பார்க்கிங் வசதியும் ஏற்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  • Feb 15, 2024 15:23 IST
  தி.மு.க வேட்பாளர்- விண்ணப்ப தேதி அறிவிப்பு

  "தி.மு.க  வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 19ந் தேதி முதல் விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம். வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும். ரூ. 2000 செலுத்தி, தி.மு.க வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமையகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்." என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  • Feb 15, 2024 15:21 IST
  தேர்தல் பத்திரங்கள் ரத்து - ஸ்டாலின் வரவேற்பு

  தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். 

  "தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, சரியானதே. உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும்" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

    • Feb 15, 2024 14:22 IST
  தமிழகம், பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்  நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தின் குறுக்கே முள்வேலிகளை போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் • Feb 15, 2024 14:20 IST
  எய்ம்ஸின் சோகக்கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை : மு.க.ஸ்டாலின்

  மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது; இரண்டு பேரிடர்களை சந்தித்தபோதும் இதுவரை வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை. பா..க ஆளாத மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களை கூட மத்திய அரசு தருவதில்லை; தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ்-ன் சோகக்கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • Feb 15, 2024 13:48 IST
  தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு சொல்வது பச்சைப் பொய் : எடப்பாடி பழனிச்சாமி

  தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றியதாக திமுக அரசு பச்சைப் பொய் சொல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக கேட்டதற்கு அரசிடம் பதில் இல்லை. காவிரியில் தமிழகத்திற்கான பங்கைப் பெறாததால் குறுவை சாகுபடி பாதிப்பு

  அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.63,000 கோடிக்கு அடிக்கல் நாட்டினோம். திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட 52 குழுக்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். • Feb 15, 2024 13:43 IST
  போலீஸ் பாதுகாப்பு கோரிய சூர்யா சிவா : மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

  பாஜகவைச் சேர்ந்த சூர்யா சிவா தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டதுஎன கருத்து தெரிவித்துள்ள நீதிபதி தண்டபாணி, சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பு வாதம் • Feb 15, 2024 12:56 IST
  இந்திய தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை


  மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்ய பிப்.23ல் இந்திய தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார். சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து  ஆலோசனை • Feb 15, 2024 12:47 IST
  தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19% ஆக உள்ளது: ஸ்டாலின்

  ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி 7.2% ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19% ஆக உள்ளது -தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். • Feb 15, 2024 12:24 IST
  பாதிக்கப்பட்ட பெண் ஆஜராக உத்தரவு

  திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு 

  மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் நேரில் பதிலளிக்க உத்தரவு

  வழக்கு விசாரணை பிப்.21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு • Feb 15, 2024 11:53 IST
   சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ உத்தரவு

  பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து சாட்டை துரைமுருகன் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட  அனைத்து வீடியோக்களையும் சமர்ப்பிக்க வேண்டும்

  அண்மையில் சோதனை நடத்திய நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவு • Feb 15, 2024 11:45 IST
  தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதக்கள் ரத்து 

  தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதக்களும் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பு . தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து-உச்சநீதிமன்ற நீதிபதிகள் • Feb 15, 2024 11:45 IST
  தேர்தல் பத்திரம் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும்

  தேர்தல் பத்திரம் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும்- உச்சநீதிமன்றம்

  தேர்தல் பத்திரம் வழங்குவதை வங்கிகள் உடனே  நிறுத்த வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச்-6க்குள் வழங்க வேண்டும்- உச்சநீதிமன்றம் • Feb 15, 2024 11:21 IST
  தேர்தல் பத்திரங்கள் அரசமைப்புக்கு எதிரானது

  தேர்தல் பத்திரங்கள் செல்லாது - உச்சநீதிமன்றம்

  கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கம்பெனி சட்டம் அரசமைப்புக்கு எதிரானது

  தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்த சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்த சட்டம் ரத்து- உச்சநீதிமன்றம் • Feb 15, 2024 11:20 IST
  தேர்தல் பத்திர முறை ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி

  தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானவை எனக் கூறி அவற்றை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தற்போதைய விதிகளின் கீழ் உள்ள தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது-  உச்ச நீதிமன்றம் • Feb 15, 2024 10:37 IST
  சாட்டை துரைமுருகன் யூடியூபில் பதிவு செய்த அனைத்து வீடியோக்களையும் வழங்க என்.ஐ.ஏ உத்தரவு

  நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் யூடியூபில் பதிவு செய்த அனைத்து வீடியோக்களையும் வழங்க என்.ஐ.ஏ உத்தரவு; சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தி விசாரணை நடத்திய நிலையில் என்ஐஏ உத்தரவு • Feb 15, 2024 10:35 IST
  அங்கன்வாடி மையங்களை சரிசெய்து தர கோரிக்கை

  மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதியில் அங்கன்வாடி மையங்களை சரிசெய்து தர கோரிக்கை - பாஜக எம்எல்ஏ சரஸ்வதி. ஒரு ஆண்டுக்கு 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு வருகிறது; எந்த பகுதி என்று குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் • Feb 15, 2024 10:19 IST
  பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி கேள்வி

  பென்னாகரம் தொகுதியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் பள்ளிகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுசுவர் கட்ட அரசு ஆவண செய்யுமா? - பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி கேள்வி.  சரிசெய்யக்கூடிய 8,500 பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டு ரூ.190 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன; புதிதாக எந்தெந்த பள்ளிகள் கட்டித்தர முடியுமோ அதை செய்வோம் - அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்  • Feb 15, 2024 10:11 IST
  நாடாளுமன்ற தேர்தல் - பிப்.24, 25ல் சென்னையில் ஆலோசனை

  பிப்.23ஆம் தேதி சென்னை வருகிறார், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார் சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொண்டார். • Feb 15, 2024 10:01 IST
  என்.ஐ.ஏ. சோதனை - ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

  கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு • Feb 15, 2024 10:00 IST
  தமிழக சட்டப்பேரவை - இன்றைய நிகழ்வுகள்

  காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் வினாக்கள் விடைகள் நேரம் நடைபெறும்.  உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வாய்ப்பு.  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் பதிலளித்து பேசுவார்.  110விதியின் கீழ் முதலமைச்சர் சில முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு.  அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்படும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமுன் வடிவுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.  • Feb 15, 2024 09:24 IST
  விவசாயிகள் - மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

  "டெல்லி சலோ" போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் சண்டிகரில் இன்று மாலை பேச்சுவார்த்தை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தகவல் • Feb 15, 2024 09:23 IST
  மதுரையில் பா.ஜ.க நிர்வாகி கொலை

  மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் கொலை - போலீசார் விசாரணை சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்  • Feb 15, 2024 08:58 IST
  மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது - கவிஞர் வைரமுத்து • Feb 15, 2024 08:22 IST
  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறுகிறது

  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக இன்று விசாரணை • Feb 15, 2024 08:00 IST
  சி.பி.எஸ்.இ: 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு

  சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது • Feb 15, 2024 07:59 IST
  மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை

  கேரளா: வயநாட்டில் யானைக்கு மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை - சத்தம் எழுப்ப துப்பாக்கியால் சுட்டபடியே ஓடியதால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கிருந்த ஒருவரை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்! • Feb 15, 2024 07:58 IST
  சென்னை செண்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டது

  சென்னை செண்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டது. நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் உடனுக்குடன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று சரிசெய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment