Advertisment

Tamil News Updates: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் தேதி மாற்றம்

Tamil News Updates - 30 April 2024-அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Interim unity govt common voter list Law panel readies report on simultaneous polls Tamil News

Tamil news updates

Tamil New Updates : பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 46-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2976 மில்லியன் கன அடியாக உள்ளது.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 108 மில்லியன் கன அடியாக உள்ளது.  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 378 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • May 01, 2024 07:05 IST
    வாக்குப்பதிவு தேதி மாற்றம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் - ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு நாளை மே 7ல் இருந்து மே 25ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • Apr 30, 2024 23:40 IST
    தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுது

    தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுதாகியுள்ளது. திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் கேமரா பாதிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன



  • Apr 30, 2024 23:37 IST
    ஏற்காடு மலைப்பகுதியில் விபத்து : காவல்துறை அதிரடி முடிவு

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் மட்டுமே இனி ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 30, 2024 21:18 IST
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் நாள் மாற்றம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் - ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு மே 7ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 25ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • Apr 30, 2024 21:17 IST
    தொடரும் காட்டுத்தீ : கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு

    கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை, இந்த தடை நாளை மற்றும் நாளை மறுதினம் அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் அறிக்கை



  • Apr 30, 2024 19:54 IST
    ஏற்காடு தனியார் பேருந்து விபத்து; 4 பயணிகள் உயிரிழப்பு

    ஏற்காடு தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.



  • Apr 30, 2024 19:38 IST
    நாகர்ஜுனா பர்ஸ்ட் லுக் மே2 வெளீயீடு

     

    சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘குபேரா’ படத்தில் நாகர்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக்கை மே 2ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.



  • Apr 30, 2024 19:05 IST
    ஏற்காட்டில் பேருந்து விபத்து; 20 பயணிகள் காயம்

    ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, மலைப்பாதையில் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து - 20 பயணிகள் காயம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 30, 2024 18:44 IST
    நிர்மலா தேவி வழக்கில் 2 பேர் விடுவிப்பு; மேல்முறையீடு செய்ய வாய்ப்பு - சி.பி.சி.ஐடி வழக்கறிஞ சந்திரசேகர்

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் இருந்து முருகன், கருப்பசாமி ஆகிய 2 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்று சி.பி.சி.ஐ.டி வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



  • Apr 30, 2024 18:40 IST
    தமிழகத்திற்கு மேலும் நீர் அளிக்க முடியாது - கர்நாடக அரசு திட்டவட்டம்

    தமிழகத்திற்கு மேலும் காவிரி நீர் அளிக்க முடியாது என்று கர்நாடக அரசு, ஒழுங்காற்றுக்குழுவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க கர்நாடகாவிற்கு ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது.



  • Apr 30, 2024 18:36 IST
    நிர்மலா தேவிக்கு தண்டனை: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் தெரிவித்துளார்.



  • Apr 30, 2024 17:27 IST
    மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ. 5,000 அபராதம் - நீதிமன்றம் தீர்ப்பு

    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்துள்ளார்.



  • Apr 30, 2024 16:51 IST
    கெஜ்ரிவால் கைது; அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் குறித்த கேள்விக்கு பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 



  • Apr 30, 2024 16:13 IST
    டி20 உலக கோப்பை: ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    ரோகித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரோகித் ஷர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்



  • Apr 30, 2024 15:57 IST
    வள்ளலார் சர்வதேச மைய வழக்குகள் மே 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

    வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இதனையடுத்து சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன



  • Apr 30, 2024 15:38 IST
    பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக சென்னை தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டம்

    பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக சென்னை தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக தீவுத் திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. அடுத்த ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது



  • Apr 30, 2024 15:29 IST
    ரிங்கு சிங் ஆசை இதுதான் - ஷாருக்கான்

    உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறான் என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்



  • Apr 30, 2024 15:14 IST
    டெல்லி காங்கிரஸ் கமிட்டிக்கு இடைக்கால தலைவர் நியமனம்

    டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Apr 30, 2024 14:28 IST
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு



  • Apr 30, 2024 14:27 IST
    திருச்சியில் பட்டப்பகலில் கொலை

    திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் முத்துக்குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் தப்பியோட்டம்.  

    தொழில் போட்டி மற்றும் முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்



  • Apr 30, 2024 13:47 IST
    அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இமெயில் மூலமாக ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல், 100க்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை டேக் செய்தும் மிரட்டல்

    மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சென்னை மருத்துவமனைக்கு வந்த இமெயில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 30, 2024 13:45 IST
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

    தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    நாளை முதல் 03ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • Apr 30, 2024 13:30 IST
    சிசிடிவி காட்சி பிரச்சினை குறித்து, மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா ஒயரில் ஏற்பட்ட பழுது காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக காட்சிகள் தெரிவதில் பிரச்சினை.

    இன்று காலை 9 மணிக்கு கேமரா ஒயர்கள் மாற்றப்பட்டு பழுது சரிசெய்யப்பட்டது

     சிசிடிவி காட்சி பிரச்சினை குறித்து, மாவட்ட ஆட்சியர் விளக்கம்



  • Apr 30, 2024 13:26 IST
    வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு

    கேரள மாநிலம் வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை

    வனப்பகுதிக்குள் தப்பியோடிய மாவோயிஸ்டுகளை கம்பமலை பகுதியில் அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர்.

    இதே பகுதியில், தேர்தலுக்கு 2 நாள் முன்பாக வாக்களிக்க வேண்டாம் என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது



  • Apr 30, 2024 13:25 IST
    சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

    வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், சென்னை மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

    அதிக நீர் அருந்தவும், பழங்கள் உட்கொள்ளவும், மது அருந்துவதை தவிர்க்கவும் சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்



  • Apr 30, 2024 13:25 IST
    நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப். 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.



  • Apr 30, 2024 12:44 IST
    பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வால் சஸ்பெண்ட்

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி அறிவிப்பு. பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ்



  • Apr 30, 2024 12:23 IST
    பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்க

    பிரஜ்வால் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்  

     இந்தியாவை உலுக்கிய தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். பிரஜ்வாலை உடனடியாக கைது செய்து வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்  



  • Apr 30, 2024 12:02 IST
    6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது

    தேனி வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லூரி, பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரி வளாகத்திற்குள் ராஜேஷ் நேற்று இரு சக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது காவலர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ மதுக்கண்ணன் அளித்த புகாரில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். 

     



  • Apr 30, 2024 11:59 IST
    வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயற்சி

    தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட வாக்குப் பெட்டிகள் கம்மவார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன

    கல்லூரியின் முன்னாள் ஊழியரான ராஜேஷ் கண்ணன் நுழைய முயன்றதால் பரபரப்பு

    கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் கண்ணனை கைது செய்து போலீசார் விசாரணை. 



  • Apr 30, 2024 11:51 IST
    மருத்துவமனையில் மதுபோதையில் ரகளை: கைது

    எமர்ஜென்சி வார்டுக்குள் ருட்ரதாண்டவம். மதுபோதையில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரகளை, இருக்கைகளை தூக்கி வீசியபடி, அங்கும் இங்கும் ஓடியதால் பீதியடைந்த நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவை சூறையாடிய மர்ம நபரால் பரபரப்பு மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது



  • Apr 30, 2024 11:49 IST
    கோவை தேர்தல் வழக்கு: நீதிமன்றம் மறுப்பு

    கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது

    சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

    ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த வழக்கு

    கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என்றும் மனுதாரருக்கு கேள்வி

    வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்



  • Apr 30, 2024 11:10 IST
    கொடநாடு வழக்கில் 4 பேர் ஆஜர்

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக, 4 பேர் ஆஜர். ஓட்டுநர் ரமேஷ், அப்துல் காதர், தேவன், ரவிக்குமார் ஆகிய 4 பேர் ஆஜர். கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்



  • Apr 30, 2024 10:55 IST
    நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனுக்கு சிபிசிஐடி சம்மன்

    நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனுக்கு சிபிசிஐடி சம்மன். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பெருமாளுக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.



  • Apr 30, 2024 10:01 IST
    ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் இன்றும் சிசிடிவி இயங்கவில்லை

    ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் இன்றும் சிசிடிவி இயங்கவில்லை என புகார்.  ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி இயங்கவில்லை காலை 8 மணி முதல் சிசிடிவி இயங்காத நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து சரி செய்யும் பணி தீவிரம் சிசிடிவி கேமராக்களை வேட்பாளர்கள், பூத் ஏஜென்டுகள் கண்காணிக்கும் அறையில் பழுது ஏற்பட்டு சர்வர் இயங்கவில்லை. 



  • Apr 30, 2024 09:01 IST
    5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை. 



  • Apr 30, 2024 08:31 IST
    மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

    நாகை, கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் மீனவர்களின் படகை வழிமறித்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை பறிப்பு தலையில் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனவரை, மருத்துவமனையில் சேர்த்த சக மீனவர்கள்.



  • Apr 30, 2024 07:48 IST
    திட்டமிட்டபடி பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகும்

    தமிழ்நாட்டில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.



  • Apr 30, 2024 07:45 IST
    நாகை மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

     மீனவர்களின் படகிலிருந்த வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேல் மதிப்புடைய பொருட்களையும், கொள்ளையடித்துச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, பொருட்களைப் பறித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



  • Apr 30, 2024 07:42 IST
    ராமநாதபுரம்: மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment