Advertisment

Tamil News Highlights: 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Elections

IE Live updates

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 38-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Apr 24, 2024 07:06 IST
    2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடம் ஓய்வு

    இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையும் ஓய்கிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைவர்கள் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு



  • Apr 23, 2024 22:15 IST
    கர்நாடக காங்கிரஸூக்கு விசிக ஆதரவு

    “கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளோம்” என வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
    முன்னதாக இவர் கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆதரவை வழங்கினார்.



  • Apr 23, 2024 21:36 IST
    வளர்ப்பு நாயை குளிப்பாட்டிய அக்கா-தங்கை உயிரிழப்பு

    வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையில் உள்ள எராகுட்டை ஏரியில் மூழ்கி அக்காள் (ஜோதிகா (8)), தம்பி (ஜோதிஸ் (7)) உயிரிழந்தனர். வளர்ப்பு நாயை குளிப்பாட்டியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.



  • Apr 23, 2024 21:24 IST
    ஊட்டியில் 3 காட்டெருமைகள் உயிரிழப்பு

    உதகை அருகே உள்ள சின்கோனா கிராம பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
    இறந்த நிலையில் மீட்கப்பட்ட 1 ஆண் காட்டெருமை, 2 பெண் காட்டெருமையின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கபபட்டன. வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • Apr 23, 2024 21:05 IST
    வெள்ளியங்கிரி மலையேற்றம்; பக்தர்கள் கண்காணிப்பு

    வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் ஈடுபடும் பக்தர்களை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.



  • Apr 23, 2024 20:48 IST
    ராகுல் காந்தி தீவிர அரசியல்வாதி அல்ல; பினராய் விஜயன்

    “ராகுல் காந்தி தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டதில்லை. மக்களின் கருத்தும் இது ஆக உள்ளது. நாட்டில் பல தீவிர அரசியல் மாற்றங்கள் நிகழ்தபோதும் அவர் இங்கு இருந்தது இல்லை” என கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.



  • Apr 23, 2024 19:38 IST
    தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

    பள்ளி சிறுமிகள் 6 பேரை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Apr 23, 2024 18:45 IST
    சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது

    சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



  • Apr 23, 2024 17:51 IST
    ஏ.ஐ மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வு வினாத்தாள் : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

    சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை 22 மாநில மொழிகளிலும் வழங்கக் கோரிய வழக்கில்,  ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மொழி மாற்றம் செய்து வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், சரி செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.



  • Apr 23, 2024 17:20 IST
    ராமர் படம் போட்ட தட்டில் பிரியாணி பரிமாறியவர் கைது

    டெல்லி ஜஹாக்கிர்புரி பகுதியில், ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில் பிரியாணி பரிமாறியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, உணவக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோவால் கடையை சுற்றி உள்ளூர் மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Apr 23, 2024 17:17 IST
    சென்னையில் குடிநீர் பிரச்சினை இருக்காது : தனியார் வானிலை ஆர்வலர் தகவல்

    தென்மேற்கு பருவமழை அதிகமாக கிடைக்கும். வட உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். மே மாதத்தில் கடலோர மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். சென்னையில் குடிநீர் பிரச்சினை இருக்காது என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்



  • Apr 23, 2024 16:43 IST
    காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் மந்திரத்தை உச்சரிப்பது கூட குற்றமாகிவிட்டது : பிரதமர் மோடி

    "கடவுள் ராமரை விட தன்னை பெரியதாக நினைக்கிறது காங்கிரஸ். அனுமன் மந்திரத்தை உச்சரிப்பது கூட காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகிவிட்டது. ராமர் கோயில் திறப்பை புறக்கணித்து, துறவிகளை அவமானப்படுத்தியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



  • Apr 23, 2024 16:13 IST
    `கில்லி' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.10 கோடியை தாண்டியது

    ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட `கில்லி' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.10 கோடியை தாண்டியது. ரீ-ரிலீஸில் இந்த வசூலை தாண்டிய முதல் தமிழ் படமாகவும் 2வது இந்திய படமாகவும் கில்லி மாறியுள்ளது. இதற்கு முன் 2013ல் அமிதாப் பச்சனின் `ஷோலே' ரீ-ரிலீஸானபோது ரூ.10 கோடி குவித்தது.



  • Apr 23, 2024 16:12 IST
    கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டும் நிகழ்வு

    விழுப்புரம்: கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டும் நிகழ்வு தொடங்கியது மணக்கோலத்தில் வரும் திருநங்கைகள் அரவாணை, கணவனாக நினைத்து பூசாரியின் கைகளால் தாலி கட்டுவதே இந்நிகழ்வு ஆகும்



  • Apr 23, 2024 15:45 IST
    தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

    கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். நீர் நிலைகளில் தண்ணீரின் இருப்பு குறைந்து வரும் நிலையில், தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது



  • Apr 23, 2024 15:19 IST
    தமிழக விவசாயிகள் – டெல்லி போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய பெண் விவசாயிகளை அவதூறாக பேசியதால் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுடன் தமிழக விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



  • Apr 23, 2024 14:55 IST
    சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம் - ஐகோர்ட் வேதனை

    கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது மோசமான நிலையாகும். துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது



  • Apr 23, 2024 14:42 IST
    கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற 31 வயது இளைஞர் மரணம்

    கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற 31 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். 7வது மலையில் இருந்து தவறி விழுந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.



  • Apr 23, 2024 14:17 IST
    பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் - ஜெயக்குமார்

    100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை. பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று காகிதம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்



  • Apr 23, 2024 13:58 IST
    சென்னையில் உள்ள வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள வி.ஆர். மாலுக்கு இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் மாலில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்



  • Apr 23, 2024 13:42 IST
    வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

    வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Apr 23, 2024 13:24 IST
    பதஞ்சலி விளம்பர விவகாரம்: நீதிமன்றம் அதிருப்தி

    தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக, பதஞ்சலி நிறுவன இணை நிறுவனர் பாபா ராம்தேவ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

    மன்னிப்பு கோரியது விளம்பரத்துக்கு இணையாக பெரிய அளவில் இருந்ததா என உச்சநீதிமன்றம் கேள்வி

    மன்னிப்பு கோரிய விளம்பரம் 67 நாளேடுகளில் வெளியிடப்பட்டதாக பதஞ்சலி நிறுவனம் தரப்பில் வாதம்

    பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது - நீதிபதிகள் அதிருப்தி

    பொருளை விளம்பரப்படுத்துவது போல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் ஏப்ரல் 30ஆம்  தேதிக்குள் வெளியிட வேண்டும் - நீதிபதிகள்

    தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி 



  • Apr 23, 2024 13:20 IST
    ராஜேஷ்தாஸ் மனு தள்ளுபடி: நீதிமன்ற தீர்ப்பு விவரம்

    காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்பட்ட ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. 

    அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய காவல் துறையினர், நாட்டின் பிற குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

    முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஒழுக்கக்குறைவுடன், உடன் பணியாற்றும் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார்.

    பெண்களுக்கு எதிராக சாதாரணமானவர்கள் முறை தவறி நடக்கும் போது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், காவல்துறையில் உயர் பதவி வகித்த ராஜேஷ் தாஸ், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார்- சென்னை உயர்நீதிமன்றம் 



  • Apr 23, 2024 13:17 IST
    வெப்ப நிலை: 3-ம் இடம் பிடித்த ஈரோடு

    அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு. நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல். நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு. 



  • Apr 23, 2024 12:47 IST
    மோடி ராஜஸ்தான் பிரச்சாரம்: இ.பி.எஸ் எதிர்ப்பு

    அரசியல் கட்சி தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ராஜஸ்தானில் பிரசாரத்தின் போது இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    வாக்குவங்கி அரசியலுக்காக பிரதமர் இதுபோல் பேசுவது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



  • Apr 23, 2024 12:42 IST
    தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

    தமிழகத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஒடிசா,  பீகாருக்கு மஞ்சள் எச்சரிக்கை



  • Apr 23, 2024 12:38 IST
    ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை கூறினேன்: மோடி

    2 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் காங்கிரஸ் குறித்த சில  உண்மைகளை முன்வைத்தேன். நான் கூறிய உண்மையைக் கேட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி பீதியடைந்துள்ளது- பிரதமர் மோடி. 



  • Apr 23, 2024 12:32 IST
    விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் தீர்த்தவாரி

    வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர். கள்ளழகரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் பக்தர்கள். கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு



  • Apr 23, 2024 12:31 IST
    1 மாதத்திற்கு பின் தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின்

    சுமார் ஒரு மாதத்திற்கு பின் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வருகை. கடந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தலைமைச் செயலகம் வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின். 



  • Apr 23, 2024 12:29 IST
    ஆணவ படுகொலை: சிக்கிய கடிதம்

    ஆணவ படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம்

    தன் மரணத்திற்கு தன்னுடைய பெற்றோர், அண்ணன்களே காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷர்மிளா

    தன் கணவன் இல்லாத இந்த உலகத்தில் இனி இருக்கப்போதில்லை என உருக்கம்

    பெற்றோர், சகோதரர்கள் பெயரை குறிப்பிட்டு ஷர்மிளா எழுதிய கடிதம் வெளியானது

    சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.



  • Apr 23, 2024 12:00 IST
    நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

    நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர். கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்.

    கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். 

    வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம். தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர். 



  • Apr 23, 2024 11:45 IST
    பறவை காய்ச்சல்: எல்லைப் பகுதியில் தீவிர சோதனை

    கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி

    தமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு உத்தரவு

    தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல்

    கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவு

    தமிழக - கேரள எல்லைப் பகுதியில் 12 சோதனை சாவடிகள் அமைப்பு



  • Apr 23, 2024 11:21 IST
    ராஜேஸ்தாஸின் மனு தள்ளுபடி

    முன்னாள்  சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியான நிலையில் சரணடைய விலக்கு கோரிய ராஜேஷ்தாஸ் மனு தள்ளுபடி 



  • Apr 23, 2024 10:46 IST
    கோடைகால குடிநீர் பற்றாக்குறை : இன்று ஆலோசனை

    கோடைகால குடிநீர் பற்றாக்குறை = இன்று ஆலோசனை கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை. 



  • Apr 23, 2024 10:46 IST
    ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 529 கோடி ரூபாய்

    ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 529 கோடி ரூபாய் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரமாண பத்திரத்தில் தகவல்.



  • Apr 23, 2024 09:58 IST
    கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு

    மதுரை: வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின்போது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு கூட்ட நெரிசலின் போது இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியை கொண்டு வந்து மற்றொருவரை தாக்க முற்பட்டுள்ளார் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை



  • Apr 23, 2024 09:56 IST
    கல்வி அதிகாரி காலி பணிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

    11 மாவட்டயி கல்வி அதிகாரி காலி பணிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு வரும் ஏப்.30ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.



  • Apr 23, 2024 08:54 IST
    கோயம்பேடு வணிக வளாக பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

    மாம்பழ சீசன் தொடங்கியதை முன்னிட்டு அதிரடியாக சோதனை.  ரசாயன கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதா?, சோதனை நடத்தும் அதிகாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கைப்பற்றி கடைகளுக்கு அபராதம். 



  • Apr 23, 2024 08:17 IST
    கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி



  • Apr 23, 2024 08:16 IST
    அடுத்த 4 நாட்களுக்கு வெயில் மேலும் அதிகரிக்கும்

    தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment