பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 16-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2811 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 218 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 433 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Apr 02, 2024 07:06 ISTநான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? ஜெய்சங்கர்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது.
அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும். நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?. பெயர்களை மாற்றும் சீனாவின் செயல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் எல்லையில் நமது ராணுவத்தை குவித்திருக்கிறோம், என தெரிவித்துள்ளார்.
-
Apr 02, 2024 03:30 ISTஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
கரூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாச வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Apr 01, 2024 22:26 ISTகூட்டுக்குழு 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு நடக்கவில்லை - மத்திய அரசு பதில்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு நடக்கவில்லை. இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்னை காரணமாக அவர்கள் தரப்பில் தேதி முடிவு செய்யப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
-
Apr 01, 2024 22:13 ISTநாட்டின் பாதுகாப்பை பா.ஜ.க அடமானம் வைத்துவிட்டதா? - கனிமொழி கேள்வி
தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழி: “அருணாச்சலப் பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு சீனா ஊடுருவ பா.ஜ.க அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. வாக்குக்காக அவதூறு பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லைப் பிரச்னை குறித்து எப்போது வாய் திறப்பார்? நாட்டின் பாதுகாப்பை பா.ஜ.க அடமானம் வைத்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 01, 2024 21:11 ISTபா.ஜ.க.வுடன் சேர்ந்தால் டெபாசிட் வாங்குவது கடினம்: சீமான் காட்டம்
திண்டுக்கல்லில் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “பா.ஜ.க-வுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் டெபாசிட் வாங்குவது கடினம்; தமிழகத்தில் ஊர் ஊராக சென்று கையேந்தினாலும் பா.ஜ.க-வுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது” என்று காட்டமாகப் பேசினார்.
-
Apr 01, 2024 21:08 ISTபணம் செலுத்தி QR டிக்கெட் பெறாதவர்களுக்கு 2 நாட்களில் பணம் திரும்ப செலுத்தப்படும் - சென்னை மெட்ரோ
பணம் செலுத்தி QR டிக்கெட் பெறாதவர்களுக்கு 2 நாட்களில் பணம் திரும்ப செலுத்தப்படும். பணத்தை திரும்ப செலுத்தும் நடவடிக்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டது என்று சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.
-
Apr 01, 2024 20:26 ISTஅ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் தியாகி, இல்லையென்றால் துரோகியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
காஞ்சிபுரம் தொகுதி பா.ம.க வேட்பாளர் ஜோதி வெங்கடாசலத்தை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசாரம் செய்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “அ.தி.மு.க தேசிய கட்சியுடன் கூட்டணியில் இல்லை; அ.தி.மு.க-விற்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை விணடிகாதீர்கள். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் தியாகி, இல்லையென்றால் துரோகியா? உங்களுடன் எத்தனை முறை கூட்டணி வைத்து உங்களுக்கு உயிர் கொடுப்பது” என்று கேள்வி எழுப்பினார்.
-
Apr 01, 2024 19:53 ISTவிஜய் வசந்த்துக்கு வாக்கு சேகரித்த கனிமொழி
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பரப்புரை செய்தார்.
-
Apr 01, 2024 19:51 ISTஅரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், A.L. விஜயனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) April 1, 2024
திரு. A.L. விஜயன் அவர்களுக்கு
இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற… pic.twitter.com/4u4IbzbfPv -
Apr 01, 2024 19:49 ISTபொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க துடிக்கும் பா.ஜ.க; துரை வைகோ
திருச்சி பெல் நிறுவன தொழில்சங்க நிர்வாகிகளை சந்தித்து ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார். அப்போது, “பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
-
Apr 01, 2024 19:47 ISTஅ.தி.மு.க திட்டங்களுக்கு தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டுகிறது; எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவதை தவிற திமுக அரசு வேறு என்ன செய்தது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார் -
Apr 01, 2024 18:44 ISTஎத்தனை எதிர்க்கட்சிகள் வந்தாலும், மோடி வெல்வார்- அமித் ஷா
“பிரதமர் மோடி 3வது முறையாக வெல்வார்; இந்தியா 3வது நாடாக மாறும். எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பிரதமராக மோடி வருவார்” என அமித் ஷா கூறியுள்ளார். -
Apr 01, 2024 18:33 ISTகாங்கிரஸ் 50 ஆண்டு பகை; பா.ஜ.க 3,000 ஆண்டுகள் பகை: சீமான்
திண்டுக்கல் செம்பட்டியில் நாதக வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது, ““காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள் உருவாக்க வேண்டும்” என்றார். -
Apr 01, 2024 17:33 ISTசாதியக் கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு : பாஜக வேட்பாளர் அதிரடி
ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ரஞ்சித் சவுதாலா, சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதிய கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரஞ்சித் சவுதாலா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுளள் பிராமணர்கள் சபா, அவரை தோற்றடிக்க பிராமணர்கள ஒன்றினைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Apr 01, 2024 17:27 ISTபோராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதுதான் பாஜகவின் உண்மையான முகம் : கனிமொழி எம்.பி
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி. "இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதுதான் பாஜகவின் உண்மையான முகம்" என்று கூறியுள்ளார்.
-
Apr 01, 2024 16:35 ISTஎந்தெந்த கட்சிகளில் எத்தனை வேட்பாளர்கள்?
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுக - 22, அதிமுக - 34, பாஜக - 23, நாம் தமிழர் கட்சி - 39, காங்கிரஸ் - 9, பாமக - 10, தேமுதிக - 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தமிழகத்தில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அதில் 609 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்
-
Apr 01, 2024 16:05 ISTமக்களவை தேர்தல்; தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் போட்டி
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 950 வேட்பாளர்களில், 609 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்
-
Apr 01, 2024 15:47 ISTகச்சத்தீவு மீட்பு வாக்குறுதி தமிழக பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் – அண்ணாமலை
கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் காங்கிரஸ் மட்டுமின்றி, தி.மு.க.,வின் சதியும் உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. கச்சத்தீவு மீட்பு வாக்குறுதி தமிழக பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Apr 01, 2024 15:34 ISTஜெயக்குமார் வழக்கு; மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன்? என மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, தி.மு.க பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் தரப்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது
-
Apr 01, 2024 15:26 ISTசென்னை மாநகராட்சியில் ரூ.1800 கோடி சொத்து வரி வசூல்
சென்னை மாநகராட்சியில் ரூ.1800 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகம்
-
Apr 01, 2024 15:06 ISTஉங்களின் வாக்குறுதி என்னவானது? ‘பதில் சொல்லுங்கள் மோடி’ என்ற ஹாஷ்டாகில் உதயநிதி கேள்வி
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?
நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? என ‘பதில் சொல்லுங்கள் மோடி’ என்ற ஹாஷ்டாகில் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்
-
Apr 01, 2024 14:46 ISTகச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக பிரதமர் என்ன செய்தார்? - அமைச்சர் மா.சு
கச்சத்தீவு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக பிரதமர் என்ன செய்தார்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்
-
Apr 01, 2024 14:21 ISTபுதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்
புதுச்சேரி பள்ளிகளில் 2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது
-
Apr 01, 2024 13:58 ISTஇதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
-உதயநிதி ஸ்டாலின்
-
Apr 01, 2024 13:56 ISTஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் - 39,25,144;
மொத்த வாக்குச்சாவடி மையங்கள் - 3726 ;
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் - 579
- சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
-
Apr 01, 2024 13:39 ISTசனாதன வழக்கு - மே 6க்கு தள்ளிவைப்பு
சனாதன பேச்சு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரிட் மனு. விசாரணையை மே 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம். ரிட் மனுவில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வாரம் அவகாசம்.
-
Apr 01, 2024 13:25 ISTசத்யபிரத சாகு நாளை (ஏப்ரல் 2) ஆலோசனை
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை (ஏப்ரல் 2) ஆலோசனை நடத்த உள்ளார்
-
Apr 01, 2024 13:22 ISTசொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதி
தேர்தல் முடியும் வரை காங்கிரசிடம் இருந்து ரூ.3,500 கோடி நிலுவைத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை கிடையாது
உச்ச நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதி
-
Apr 01, 2024 13:20 ISTசத்யபிரதா சாகு பேட்டி
நேற்று (மார்ச் 31) காலை வரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது;
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,822 புகார்கள் பெறப்பட்டு, 1,803 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
- சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
-
Apr 01, 2024 12:56 ISTஇலங்கை திவாலான போது, கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே?
தோல்வி பயத்தின் காரணமாக கலர் கலராக பொய் சொல்லி வருகின்றனர்
கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, மக்களை திசை திருப்புகிறார்
கச்சத்தீவை கொடுக்க கூடாது என்று, கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்
கச்சத்தீவுக்கு எதிராக தமிழகம் முழுவதும், திமுக கூட்டம் நடத்தியது, நானும் அப்போது பங்கேற்றேன்
தமிழினத்தை அழித்த இலங்கை திவாலான போது, ரூ.34,000 கோடி கொடுத்தவர் பிரதமர் மோடி
இலங்கை திவாலான போது, கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே?
இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே?
அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுத்த போது, குடியரசு தலைவரை அவமதித்துள்ளனர்
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி
-
Apr 01, 2024 12:52 ISTஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு!
#WATCH | "10 ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்.?" -திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு!#SunNews | #DMK | #RSBharathi pic.twitter.com/5saEAJ5KMG
— Sun News (@sunnewstamil) April 1, 2024 -
Apr 01, 2024 12:29 ISTஎம்.எஸ்.தோனி புதிய சாதனை
டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களைக் கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர்
ஐபிஎல் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார் எம்.எஸ்.தோனி
-
Apr 01, 2024 12:23 ISTகாங்கிரஸ் கட்சி மேல்முறையீட்டு வழக்கு
வருமான வரித்துறையின் ரூ.1,700 கோடி அபராதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு;
தேர்தல் முடியும் வரை காங்கிரஸிடம் இருந்து அபராத தொகை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்காது;
தேர்தல் காலங்களில் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் பிரச்னை இருக்காது எனவும் வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்
மக்களவைத் தேர்தல் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவிப்பு;
தேர்தல் நேரத்தில் பாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜுலை மாதத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
-
Apr 01, 2024 12:18 ISTசிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?- தினகரனுக்கு சீமான் கேள்வி
உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி
"சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்?"
"சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்?"
"சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?"
"பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்?"
"சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் பாஜக தான்"
"டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான்"
"இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார்". "என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை"- சீமான்
-
Apr 01, 2024 12:00 ISTகெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை காவல்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப். 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
-
Apr 01, 2024 11:59 ISTசெந்தில் பாலாஜி வழக்கு: தடை விதிக்க மறுப்பு
செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
-
Apr 01, 2024 11:59 ISTசந்துரு குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு. தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு.
ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை நீட்டித்தது தமிழக அரசு. பிப்ரவரி மாதம் அறிக்கை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால நீட்டிப்பு.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலியாக, சந்துரு தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு.
பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளை தவிர்ப்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.
-
Apr 01, 2024 11:57 ISTகே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக் குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
இருதய பிரச்சினை தொடர்பாக சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல். மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
பரிசோதனைகளின் முடிவுக்கு ஏற்றார் போல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல்
-
Apr 01, 2024 11:28 ISTசெந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை.
-
Apr 01, 2024 11:13 ISTமோடிக்கு 3 கேள்விகளை எழுப்பிய ஸ்டாலின்
X தளத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். #பதில் சொல்லுங்க மோடி எனப் பதிவு
x தளத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்#MKStalin | #NarendraModi | #DMK | #BJP pic.twitter.com/X6zRZZFrex
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 1, 2024 -
Apr 01, 2024 10:58 ISTசரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்
நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார்
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்
அண்டை வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்
சிசிடிவி காட்சிகளை சமர்ப்பித்து, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு. ஸ்ரீதேவி அளித்த புகார் குறித்து விருகம்பாக்கம் போலீஸ் விசாரணை
கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாரோடு நடந்த தகராறில் நடிகை சரண்யா மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு
-
Apr 01, 2024 10:45 ISTபா.ஜ.க எம்.பி. நிஷிகாந்த் துபேயின் மனைவி மீது வழக்கு
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் மனைவி, 2 மகன்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல்
பி.என்.பி வங்கி அதிகாரியுடன் கூட்டுச் சதி செய்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றை வாங்கிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 01, 2024 10:39 ISTதங்கம் சவரனுக்கு ரூ.680 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,455க்கும், ஒரு சவரன் ரூ.51,640க்கும் விற்பனை
-
Apr 01, 2024 10:16 ISTகச்சத்தீவு விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கம்
கச்சத்தீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் ட்வீட்டைத் தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு 21 முறை பதிலளித்துள்ளேன்.
1974-ல் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. கச்சத் தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்.
-
Apr 01, 2024 09:56 ISTகச்சத்தீவு - திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது
கச்சத்தீவு - திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது" "கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது" - பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு "கச்சத்தீவு - புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது" "திமுகவும், காங்கிரசும் தங்கள் குடும்ப நலனை பற்றி மட்டுமே எண்ணுகின்றன" "கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்சிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" "தமிழக மீனவர்களை பாதுகாக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"- மோடி
-
Apr 01, 2024 08:57 ISTசுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு ரத்து
கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
-
Apr 01, 2024 08:16 ISTதனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு காற்றின் வேகமும் கடல் சீற்றமும் அதிகரித்து தடுப்புகளை தாண்டி கடல் நீர் வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
-
Apr 01, 2024 08:15 ISTஅண்ணாமலையை ஸ்லீப்பர் செல்லாக பாஜகவுக்குள் அனுப்பி உள்ளேன்
அண்ணாமலையை ஸ்லீப்பர் செல்லாக பாஜகவுக்குள் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எல்லா கட்சிகளிலும் ஆட்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
-
Apr 01, 2024 08:13 ISTபொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு
19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்துள்ளது ரூ.1960-க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1930 ஆக குறைந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50-க்கு விற்பனை
-
Apr 01, 2024 08:13 ISTசுங்கக் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்
அரியலூர் - மணகெதி, திருச்சி - கல்லக்குடி, வேலூர் - வல்லம், தி.மலை - இனம்கரியாந்தல், விழுப்புரம் - தென்னமாதேவி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்வு பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு பரனூர் சுங்கச்சாவடி - ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்வு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரையிலும், உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் ரூ.10 வரை உயர்வு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.