Advertisment

Tamil News Updates: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

Tamil Nadu News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin india alliance

Tamil news Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

அண்ணாமலைக்கு கனிமொழி பதில்

பாஜகவினர் பெரியார் வாழ்க என்று சொல்லட்டும். அதன்பின் பாஜகவில் இணைவது பற்றி பார்க்கலாம். பாஜகவை வளர்ப்பது என் வேலை கிடையாது நான் இளம் வயதில் இருந்து பார்த்தது திமுக மட்டும் தான்.

- கனிமொழி பாஜகவிற்கு வந்தால் நான் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் எனக் கூறிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கனிமொழி பதில்

  • Jun 08, 2024 07:07 IST
    இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

    புதிய மத்திய அரசு அமைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூடுகிறது.



  • Jun 07, 2024 22:01 IST
    கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற திருப்பூர், நாகை தொகுதியில் வெற்றி பெற்ற சி.பி.ஐ எம்.பி.க்கள்

    திருப்பூர், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் மற்றும் செல்வராஜ் இருவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



  • Jun 07, 2024 21:32 IST
    மோடி ஜூன் 9-ம் தேதி இரவு 7.15க்கு பதவியேற்கிறார் - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

    மோடி ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி, அமைச்சர்களுக்கு திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.



  • Jun 07, 2024 21:27 IST
    மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு இ.பி.எஸ் வாழ்த்து

    “இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Jun 07, 2024 20:40 IST
    பள்ளிகள் திறக்கும் முதல்நாளே நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான 10-ம் தேதியே புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள், உள்ளிட்டவைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.



  • Jun 07, 2024 20:26 IST
    புதுச்சேரியில் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை  - மாநில அரசு காஜி அறிவிப்பு

    புதுச்சேரியில் வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என மாநில அரசு காஜி அறிவித்துள்ளார். துல்ஹஜ் பிறை இன்று தென்பட்டதால் வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொடாடப்பட உள்ளது என்று புதுச்சேரி அரசு காஜி அறிவித்துள்ளார்.



  • Jun 07, 2024 20:02 IST
    நீட் தேர்வு முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கிறது - சீமான்

    நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் குளறுபடி முறைகேடுகள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை மாணவர்களீன் கனவை சிதைக்கும் கொடும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.



  • Jun 07, 2024 18:50 IST
    பிரதமராக நியமிக்கும் ஆணையை மோடியிடம் வழங்கிய குடியரசுத் தலைவர்

    மீண்டும் பிரதமரானார் மோடி. பிரதமராக நியமிக்கும் ஆணையை மோடியிடம் வழங்கிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. வரும் 9ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்



  • Jun 07, 2024 17:50 IST
    மக்கள் ஈவிஎம் இயந்திரத்தை சந்தேகிக்க தான் செய்கிறார்கள் : ப.சிதம்பரம்

    "வாக்குப்பதிவு இயந்திரத்தை செம்மை படுத்த வேண்டும்" விவிபேட் இயந்திரத்தில் இருந்து வரும் ஒப்புகை தாளை, வாக்காளர்கள் எடுத்து பார்த்துவிட்டு பெட்டியில் போடலாம் என்பது தான் காங்கிரசின் கோரிக்கை. இன்னுமும் மக்கள் ஈவிஎம் இயந்திரத்தை சந்தேகிக்க தான் செய்கிறார்கள் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



  • Jun 07, 2024 17:44 IST
    தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான் : ப.சிதம்பரம்

    "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது  என  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    மேலும் "நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" - ப.சிதம்பரம்



  • Jun 07, 2024 16:55 IST
    'காங்கிரஸின் தோல்வியை ராகுலுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது': வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ


    காங்கிரஸூம், இந்தியா கூட்டணியும் மக்களவை தேர்தலில் தோற்றத்தை ராகுலுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
    உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.



  • Jun 07, 2024 16:32 IST
    வெற்றியோ, தோல்வியை பா.ஜ.க ஒரே மாதிரி நடந்துக்கொள்ளும்; பிரதமர் நரேந்திர மோடி

    தேசிய ஜனநாயக கூட்டணி எஎம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “எதிர்க் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களுக்கு எனது வாழ்த்துகள்; வெற்றியோ, தோல்வியோ பாஜக ஓரே மாதிரி தான் நடந்து கொள்ளும்.
    தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் இந்தியா வளரும், உலகத்தின் கவனம் ஈர்க்கும். தேசிய ஜனநாயக கூட்டணி மீது மட்டுமே இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது” என்றார்.



  • Jun 07, 2024 16:10 IST
    குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி

    இன்று மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
    3-வது முறையாக ஆட்சி அமைப்பதற்கான 292 NDA கூட்டணிக்கட்சி எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.



  • Jun 07, 2024 15:19 IST
    கமல்ஹாசனை சந்தித்த சரத்குமார்


    நடிகர் கமல்ஹாசனை சந்தித்து, தனது மகள் வரலட்சுமி திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு நடிகர் சரத் குமார் அழைப்பிதழ் வழங்கினார்.



  • Jun 07, 2024 14:58 IST
    ஆர்.சி.பி அணி போல தமிழ்நாட்டில் பா.ஜ.க தோற்றுக் கொண்டே இருக்கிறது -ஜெயக்குமார்

    ஆர்.சி.பி அணி போல தமிழ்நாட்டில் பா.ஜ.க தோற்றுக் கொண்டே இருக்கிறது. சி.எஸ்.கே அணி போன்று இன்னும் பல வெற்றிகளை குவிக்க காத்திருக்கும் கட்சி அ.தி.மு.க என சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்



  • Jun 07, 2024 14:33 IST
    ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடரும்; தெலுங்கு தேசம் கட்சி

    ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடரும், அதில் எந்த பிரச்னையும் இல்லை என ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளது



  • Jun 07, 2024 14:10 IST
    தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பா.ஜ.கவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது – மோடி

    தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பா.ஜ.கவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பா.ஜ.க கூட்டணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தை படைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவராக தேர்வு செய்து புதிய பொறுப்பை வழங்கியது என்னுடைய அதிர்ஷ்டம் என்று மோடி தெரிவித்துள்ளார்



  • Jun 07, 2024 13:43 IST
    அனைத்து மதமும் சமமானவை என்பதில் பா.ஜ.க கூட்டணி உறுதி கொண்டுள்ளது – மோடி

    இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு இவ்வளவு பெரிய வெற்றி இதுவரை கிடைத்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து மதமும் சமமானவை என்பதில் பா.ஜ.க கூட்டணி உறுதி கொண்டுள்ளது என மோடி கூறியுள்ளார்



  • Jun 07, 2024 13:35 IST
    நாளை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஜூன் 8) தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்



  • Jun 07, 2024 13:20 IST
    நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு – அமைச்சர் மா.சு

    பொதுவாக நீட் தேர்வு என்பது குழப்பமான ஒன்று தேவையற்ற ஒன்று. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இந்தாண்டு நீட் தேர்வில் ஹரியானாவில் 7 பேர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். அது எப்படி வந்தது என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும். மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பிறகு தான் முழு தகவல் தெரியும் என சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்



  • Jun 07, 2024 12:59 IST
    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் ஒலிக்கும் பிரதமர் மோடி பெயர்

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கில் ஒலிக்கும் பிரதமர் மோடி பெயர். தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை தேர்வு செய்யும் தீர்மானத்தை வழிமொழிகிறேன்- அமித்ஷா



  • Jun 07, 2024 12:57 IST
    முதன் முறையாக ஒடிசாவில், மூன்றாவது முறையாக அருணாச்சலில் பாஜக தனது அரசை அமைக்க போகிறது: ஜே.பி.நட்டா

    முதன் முறையாக ஒடிசாவில், மூன்றாவது முறையாக அருணாச்சலில் பாஜக தனது அரசை அமைக்க போகிறது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமையான மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறி உள்ளது- ஜே.பி.நட்டா



  • Jun 07, 2024 12:31 IST
    மோடி ஆட்சியில் வளர்ச்சி அடைந்த பாரதம்

    நாட்டின் உட்கட்டமைப்பு முன்னேற்ற பாதையில் செல்வதோடு, கிராமங்களும் ஏழைகளும் வலிமை பெற்று வருகின்றனர். தேசத்தின் சேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார் மோடி - ஜே.பி.நட்டா



  • Jun 07, 2024 12:30 IST
    ஜெயக்குமார் வழக்கு : வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு

    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலம் கிடந்த தோட்டத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு ஜெயக்குமார் சடலம் கண்டெடுக்கப்பட்டு 35 நாட்களாகும் நிலையில் கொலையா? தற்கொலையா? என தீர்மானிக்க முடியாமல் திணறும் காவல்துறை



  • Jun 07, 2024 12:09 IST
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

    பா.ஜ.க தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.கர்நாடகாவில் வெளியிடப்பட்ட கட்சி விளம்பரங்களில் ராகுல் காந்திக்கு தொடர்பில்லை என காங்கிரஸ் வாதிட்டது. அன்றைய தினம் ராகுல் ஆஜராகாத நிலையில், இன்று  ஆஜரானார். இதனை தொடர்ந்தே அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.



  • Jun 07, 2024 11:43 IST
    என்.டி.ஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் டிடிவி தினகரன்

    பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என்.டி.ஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.



  • Jun 07, 2024 11:42 IST
    தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள், நிர்வாகிகள் கூட்டம் சற்று நேரத்தில் தொடக்கம்

     பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மத்திய அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.



  • Jun 07, 2024 11:40 IST
    இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்; ராமதாஸ்

    “மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது ஆனால் இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை; இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்; அடுத்தாண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும்” - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை 



  • Jun 07, 2024 11:38 IST
    நீட் விடைத்தால் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ?: ராமதாஸ் கேள்வி

    “நீட் விடைத்தால் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ? என ஐயம் எழுந்துள்ளது; இந்தாண்டு நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது; தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும், சில மையங்களில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது”- பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை



  • Jun 07, 2024 11:25 IST
    தேசிய தேர்வு முகமைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

    நீட் முறைகேடு வழக்கில், தேசிய தேர்வு முகமை 10 நாட்களுக்குள் பதிலளிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 07, 2024 11:23 IST
    நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்- ராமதாஸ்

    ஆண்டு இளநிலை மருத்துப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

    நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட்  நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.

    - ராமதாஸ்



  • Jun 07, 2024 11:18 IST
    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

    வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிக்கும் என ரிசர்வ் வக்கி சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

    பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என விளக்கம்



  • Jun 07, 2024 10:42 IST
    நீட் தேர்வு முறைகேடு- பிரியங்கா காந்தி கேள்வி

    கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத் தாள் கசிந்தது, தற்போது நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருவது, நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது உள்ளிட்டவை நீட் தேர்வு முறை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது

    இதன் மூலம் நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

    லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்?

    நீட் தேர்வு முடிவுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரித்து தீர்வு காண்பது பாஜக அரசின் பொறுப்பு

    - பிரியங்கா காந்தி X தளத்தில் பதிவு



  • Jun 07, 2024 10:42 IST
    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

    நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.



  • Jun 07, 2024 10:35 IST
    சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி

    மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத நிலையில், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும்

    டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு



  • Jun 07, 2024 09:57 IST
    ராகுல் காந்தி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்

    கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களுக்கு 40% கமிஷன் எனக்கூறியது தொடர்பாக பாஜகவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.



  • Jun 07, 2024 09:57 IST
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6840-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கும் விற்பனையாகிறது.



  • Jun 07, 2024 09:32 IST
    நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற 3 பேர் கைது

    போலி ஆதார் கார்டுகளை காண்பித்து கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தின் 3வது எண் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றதாக 3 பேரை காவல்துறை கைது செய்தது



  • Jun 07, 2024 09:14 IST
    கனமழை- தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்

    புதுச்சேரி, காரைக்கால், கேரளா, உள் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Jun 07, 2024 09:12 IST
    சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு பிரகாஷ்ராஜ் வாழ்த்து

    வரலாற்று வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள். உங்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். நீங்கள் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியை போல் இல்லாமல் மதசார்பற்ற தலைவர்கள் என நம்புகிறேன்.

    ஆந்திர மக்களுக்காக நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது. எங்களை கைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

    பிரகாஷ் ராஜ்



  • Jun 07, 2024 08:30 IST
    மதுராந்தகம் அருகே விபத்தில் 2 பேர் மரணம்

    மதுராந்தகம் அருகே பட்டாளத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதி, சிறுவன் சச்சின் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jun 07, 2024 07:52 IST
    சென்னையில் விடிய விடிய மழை- விமான சேவை பாதிப்பு

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய 17 விமானங்கள், புறப்பட வேண்டிய 18 விமானங்கள் தாமதமாகின. கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு,கோவை, ஐதரபாத் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியவில்லை. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.



  • Jun 07, 2024 07:45 IST
    தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jun 07, 2024 07:45 IST
    நீட் முறைகேடு? தேசிய தேர்வு முகமை விளக்கம்

    நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. நேர்மையான முறையில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

    - தேசிய தேர்வு முகமை



  • Jun 07, 2024 07:45 IST
    டி20 உலகக் கோப்பை- அமெரிக்கா வெற்றி

    டி20 உலகக் கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் அமெரிக்கா அணி வெற்றி  பெற்றது.

    அமெரிக்கா அணி போட்டி சமன் செய்த நிலையில் போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு தள்ளப்பட்டது, முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 18 ரன்கள் சேர்ப்பு



  • Jun 07, 2024 07:44 IST
    பங்குச்சந்தையில் முறைகேட்டில் மோடி, அமித்ஷாவுக்கு தொடர்பு- ராகுல் காந்தி

    பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்

    பிரதமரும், உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியது ஏன்? பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

    - டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு



  • Jun 07, 2024 07:44 IST
    தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. தென் சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள் என்னோடு இணையலாம். தென் சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்.

    பாஜக ஐடி விங், அண்ணாமலை வார் ரூம் நிர்வாகிகள், கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை? எனவும் ஆவேசம்

    - பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment