Advertisment

Tamil News Updates: 3வது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு: 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு

Tamil Nadu News Update Today- 8 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi

Tamil news Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஜூன் 17ல் பக்ரீத் பண்டிகை

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை துல்ஹஜ் பிறை தென்பட்ட நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூன் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.

புதுச்சேரி அரசு தலைமை காஜி அறிவிப்பு!

  • Jun 09, 2024 07:03 IST
    3வது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு: 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு

    3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.

    இன்று மாலை 7.15 மணிக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரிஷீயஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • Jun 08, 2024 21:38 IST
    பாஜக அரசை, நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "பலவீனமான பாஜக அரசை, நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்"  என கூறியுள்ளார்.



  • Jun 08, 2024 20:54 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிவுரை : பெரம்பலூர் எம்.பி அருண் நேரு

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு "மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்" என கூறியுள்ளார்.



  • Jun 08, 2024 20:10 IST
    2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம் : வாக்களித்த மக்களுக்கு சீமான் நன்றி

    மக்களவைத் தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாக கொண்டு 2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம்  என நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி கூறியுள்ளார்.



  • Jun 08, 2024 19:36 IST
    கோவையில் ஜூன் 14-ந் தேதி முப்பெரும் விழா : தி.மு.க எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

    ஜூன் 14ஆம் தேதி கோவையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடைபெறும் என அரை மணி நேரம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மெலும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியும், நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  நீட் தேர்வு விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க தீர்மானம் போடப்பட்டுள்ளது.



  • Jun 08, 2024 18:49 IST
    காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு

    காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது



  • Jun 08, 2024 18:23 IST
    டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்

    டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத்தின், மத்திய மண்டபத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது



  • Jun 08, 2024 17:42 IST
    நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவது நம்பிக்கையை இழக்க வைக்கிறது - டாக்டர் ரவீந்திரநாத்

    நீட் நுழைவுத் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவது அதன் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது என டாக்டர் ரவீந்திரநாத் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்



  • Jun 08, 2024 17:26 IST
    மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 7 அமைச்சர்கள்?

    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • Jun 08, 2024 16:59 IST
    ஒடிசாவில் வி.கே.பாண்டியனை குறைசொல்வது துரதிர்ஷ்டவசமானது - நவீன் பட்நாயக்

    ஒடிசாவில் வி.கே.பாண்டியனை குறைசொல்வது துரதிர்ஷ்டவசமானது என தேர்தல் தோல்விக்கு பிறகு நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்



  • Jun 08, 2024 16:29 IST
    குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

    ஐந்தருவியை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொருத்தப்பட்ட பாதுகாப்பு அலாரம் ஒலித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மண், குச்சிகள் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது



  • Jun 08, 2024 16:05 IST
    'இ.பி.எஸ் பிரஸ்டீஜ் பார்க்க வேண்டாம்' - ஜே.சி.டி பிரபாகரன், புகழேந்தி 

    "இ.பி.எஸ் பிரஸ்டீஜ் பார்க்க வேண்டாம். தி.மு.க-வை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் தயவு செய்து ஒன்றாக சேருங்கள். எப்போதும் எவ்வளவு சதவீதம் வந்தது என பார்ப்போம், ஆனால் தற்போது 7 இடத்தில் டெபாசிட் போய்விட்டது. ஒரு தொகுதியை கூட அதிமுக வெல்லவில்லை. யாரோ அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். இரண்டாம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வர நாங்கள் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற தோல்வியை அ.தி.மு.க ஒருபோதும் சந்தித்தது இல்லை" என்று ஜே.சி.டி பிரபாகரன், புகழேந்தி தெரிவித்துள்ளனர் 



  • Jun 08, 2024 16:03 IST
    ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகல்: ஜே.சி.டி பிரபாகரன், புகழேந்தி கூட்டாக அறிவிப்பு 

    ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகுவதாக ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி கூட்டாக அறிவித்துள்ளனர். இதனால், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழு  உருவாகிறது. 



  • Jun 08, 2024 15:29 IST
    தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 

    தூத்துக்குடியில் முதல்முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம். முள்ளக்காடு கிராமத்தில் ரூ.904 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரியது சிப்காட். நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படவுள்ளது.



  • Jun 08, 2024 15:06 IST
    சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பு பதில் மனு

    "யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 



  • Jun 08, 2024 15:00 IST
    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் 

    கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜூக்கு முதல் வகுப்புசிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்கைதியாக உள்ள யுவராஜூக்கு முதல் வகுப்புசிறை ஒதுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கூடாது என சிறை விதிகள் உள்ளன எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 



  • Jun 08, 2024 14:54 IST
    டெல்லியில் 2 நாள் 144 தடை

    நாளை பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதை அடுத்து டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவை டெல்லி காவல்துறை பிறப்பித்துள்ளது. ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், உள்ளிட்டவை பறக்கவும் டெல்லி போலீசார் தடை விதித்துள்ளனர்



  • Jun 08, 2024 14:53 IST
    நீட் முறைகேடு - குழு அமைத்து விசாரணை

    "நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். கருணை மதிப்பெண் வழங்கியதால் தான் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர்" 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையான நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். 



  • Jun 08, 2024 14:49 IST
    நீட் முறைகேடு புகார் - மத்திய அரசு விளக்கம்

    "நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. தேர்வு தொடங்கி 2 மணி நேரத்திற்கு பின் தான் வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ளது. நீட் தேர்வு முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும்" என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 



  • Jun 08, 2024 13:49 IST
    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. 



  • Jun 08, 2024 13:37 IST
    டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

    “கிராம புறம், ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. நகர்புறங்களிலிலும்  காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்க உழைக்க வேண்டும்;

    காங்கிரஸ் தோல்வி அடைந்த மாநிலங்களின் காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நிதிப் பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது; 

    ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க வேண்டும். 

    இந்தியா கூட்டணி தொடர வேண்டும் என்பது காங்கிரஸின் எண்ணம். தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் மக்களின் முக்கிய பிரச்னைகள். இனி அவற்றை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து விவாதிப்போம்”



  • Jun 08, 2024 13:26 IST
    ஐந்தருவியில் குளிக்கத் தடை

    தென்காசி, குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை



  • Jun 08, 2024 13:06 IST
    ராமோஜிராவ் மறைவு: ரஜினி இரங்கல்

    உடல் நலக்குறைவால் மறைந்த ராமோஜி ஃபிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜிராவ் அவர்களுக்கு, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நடிகர்  ரஜினிகாந்த்



  • Jun 08, 2024 13:05 IST
    ரயிலில் துணை ராணுவப் படை வீரர்கள் மோதல்

    சென்னை சென்ட்ரல்- கோவை இடையேயான சேரன் விரைவு ரயிலில் நேற்று இரவு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சுமார் 20 துணை ராணுவப் படை வீரர்கள் தங்களுக்குள் மோதல். தட்டிக் கேட்ட பயணிகளை செருப்பால் அடித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு. அதிர்ச்சியில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள். வீராகளை வெளியேற்றும் படி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம்



  • Jun 08, 2024 13:01 IST
    கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த டெண்டர்

    தூத்துக்குடியில் முதல் முறையாக ரூ.904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. 



  • Jun 08, 2024 12:43 IST
    காங். செயற்குழு கூட்டம் தொடங்கியது

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

    மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, ப.சிதம்பரம், சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    தேர்தல் முடிவுகள் குறித்தும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 



  • Jun 08, 2024 12:26 IST
    2026 தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை: இ.பி.எஸ் திட்டவட்டம்

    2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்



  • Jun 08, 2024 12:19 IST
    ஓ.பி.எஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார்: இ.பி.எஸ்

    கோவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்பு போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணனைவிட அண்ணாமலை குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார். கனவு பலிக்காததால் ஓபிஎஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார்- ஈபிஎஸ் 



  • Jun 08, 2024 11:47 IST
    அ.தி.மு.க தோல்வி பற்றி இ.பி.எஸ் விளக்கம் 

    திமுக மற்றும் பாஜக தங்களின் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டது. தமிழகத்தில் பிரதமர் மோடி 8 முறை வந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

    அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவன் மட்டுமே பிரசாரம் செய்தேன் - ஈபிஎஸ்

    2024 தேர்தலில் தி.மு.க, பா.ஜ.கவை ஒப்பிடுகையில் அ.தி.மு.க தான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது

    2019 மக்களவை தேர்தலைவிட 2024 தேர்தலில் அ.தி.மு.க ஒரு சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது- மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி பற்றி இ.பி.எஸ் விளக்கம் 



  • Jun 08, 2024 10:48 IST
    மூத்த பத்திரிகையாளர் ராமோஜி ராவ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

    ராமோஜி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

    ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைகளில் அவராற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும். இந்த கடினமான நேரத்தில் ராமோஜி ராவ்வின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்



  • Jun 08, 2024 10:48 IST
    தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

    மிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது.



  • Jun 08, 2024 10:20 IST
    வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்

    சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்

    மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு



  • Jun 08, 2024 09:58 IST
    இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Jun 08, 2024 09:56 IST
    சவரனுக்கு ரூ.1,520 குறைந்த தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையாகிறது.



  • Jun 08, 2024 09:28 IST
    காங். காரிய கமிட்டி கூட்டம்

    டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.

    இன்று மாலை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டமும் நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவிப்பு



  • Jun 08, 2024 09:03 IST
    சென்னையில் ரவுடி கைது

    சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மணி என்ற ரவுடியை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

    வண்ணாரப்பேட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட சம்பவம் அரங்கேரிய நிலையில், மீண்டும் ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டது பொதுமக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



  • Jun 08, 2024 08:44 IST
    தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

    கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன். கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதை விட திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடங்கள் கிடைப்பது மிகவும் கவலையாக இருக்கிறது.

    - சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி



  • Jun 08, 2024 08:25 IST
    அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

    கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10ம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு



  • Jun 08, 2024 07:52 IST
    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,500 கன அடியாக அதிகரிப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • Jun 08, 2024 07:43 IST
    ஈநாடு பத்திரிகை நிறுவனர் மரணம்

    ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் இன்று உயிரிழந்தார்.



  • Jun 08, 2024 07:32 IST
    தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 08, 2024 07:32 IST
    இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்

    மத்தியில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூடுகிறது.



  • Jun 08, 2024 07:32 IST
    கனடா அணி வெற்றி

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் கனடா அணி வெற்றி பெற்றது.



  • Jun 08, 2024 07:31 IST
    சந்திரபாபு நாயுடு வரும் 12ம் தேதி பதவியேற்பு

    ஆந்திராவின் புதிய முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 12ம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு



  • Jun 08, 2024 07:31 IST
    நாளை இரவு 7.15 மணிக்கு மோடி பிரதமராக பதவியேற்பு

    டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, 3வது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி.

    நாளை இரவு 7.15 மணிக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு!



  • Jun 08, 2024 07:31 IST
    ப.சிதம்பரம் பேட்டி

    நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.

    தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

    தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது

    - ப.சிதம்பரம்



  • Jun 08, 2024 07:30 IST
    அரசு பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.

    1000 மாணவர்களில் நீங்களும் ஒருவராக தேர்வாக, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க: https://naanmudhalvan.tn.gov.in



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment