Advertisment

Tamil News Live Updates: நீட் தேர்வு முறைகேடு: மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன்- ராகுல் காந்தி

Tamil Nadu News Update Today- 9 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

PM Narendra Modi Oath Taking Ceremony Live Updates

2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம்: சீமான்

மக்களவைத் தேர்தலில் வெற்றி என்னும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.

இந்த தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாக கொண்டு 2026ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடிக்க உறுதியேற்போம்

- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

  • Jun 09, 2024 12:00 IST
    மத்திய அமைச்சராக பதவி ஏற்கும் அண்ணாமலை?

    3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் மோடி பதவி ஏற்க உள்ள நிலையில், மத்திய அமைச்சராக பதவி ஏற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து  அழைப்பு வந்துள்ளது.



  • Jun 09, 2024 11:37 IST
    மோடி தேநீர் விருந்து

    மத்திய அமைச்சரவையில் இடம் பெறப்போகும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு தேநீர் விருந்தளிக்கிறார்.

    அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல்.வெர்மா, பங்கஜ் சவுத்ரி, சிவ்ராஜ் சிங் சவுகான், அன்னபூர்னா தேவி, அர்ஜுன் ராம் மேவால், சிந்தியா, மனோகர் லால் கட்டார், நித்யானந்த் ராய், மஜத தலைவர் குமாரசாமி  ஆகியோர் பிரதமர் இல்லத்திற்கு வருகை

     



  • Jun 09, 2024 11:36 IST
    நீட் தேர்வு முறைகேடு: ராகுல் காந்தி கேள்வி

    மோடி அரசு பதவியேற்கும் முன்பே நீட் தேர்வில் நடந்த முறைகேடு 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை குலையவைத்துள்ளது

    ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பல மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால், வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க, காங்கிரஸ் சிறந்த திட்டத்தை முன்வைத்தது. மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன் என உறுதி அளிக்கிறேன்

    இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் குரல் நெறிபடுவதை இந்தியா கூட்டணி அனுமதிக்காது

    ராகுல் காந்தி



  • Jun 09, 2024 11:30 IST
    கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு மோதிரம் பரிசு

    விவசாயிகளை இழிவாக பேசிய பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த CISF பெண் காவலருக்கு, பெரியார் படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை பரிசளிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • Jun 09, 2024 10:57 IST
    திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி திருமணம்



  • Jun 09, 2024 10:51 IST
    193 மருத்துவர்களின் பணி நியமனம் ரத்து

    அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவு

    மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 1021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 193 பேர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேரவில்லை.



  • Jun 09, 2024 10:11 IST
    இந்தாண்டு முதல் முறையாக ‘Invalid மதிப்பெண்’ அறிமுகம்

    தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு முதல் முறையாக  ‘Invalid மதிப்பெண்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் பதில்களை தேர்வு செய்யும் போது ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்துவிட்டு அதை அடித்து பின்னர் வேறு பதிலை பதிவிட்டால் அந்த கேள்விக்கான மதிப்பெண் ‘Invalid’ ஆகிவிடும்



  • Jun 09, 2024 10:10 IST
    பிரேம்ஜி திருமணம்

    44 வயதான பிரேம்ஜி இந்து என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அவர்களுக்கு இன்று திருத்தணியில் நடைபெற உள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது



  • Jun 09, 2024 09:35 IST
    தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பதவி

    குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15க்கு பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.

    தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராமு மோகன் நாயுடு மற்றும் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்

     



  • Jun 09, 2024 09:04 IST
    ரஜினிகாந்த் பேட்டி

    பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3-வது முறையாக மோடி பதவி ஏற்கிறார், இது அவருடைய சாதனை

    - சென்னையில் ரஜினிகாந்த் பேட்டி



  • Jun 09, 2024 08:53 IST
    புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்

    ஜரோப்பிய பாராளுமன்றத்திற்கு பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

    கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடி மையங்களில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 4,546 பேர் இதில் வாக்களிக்க உள்ளனர்.



  • Jun 09, 2024 07:56 IST
    குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை

    தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள்ளனர்.

    நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் 2-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • Jun 09, 2024 07:55 IST
    தலைவர்கள் நினைவிடங்களில் மோடி மரியாதை

    3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, சதைவ் அடல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை



  • Jun 09, 2024 07:34 IST
    தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

    தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது. 20.36 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    கிராம நிர்வாக அலுவலர்,  வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,  தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.



  • Jun 09, 2024 07:34 IST
    3வது முறையாக பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

    3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.

    இன்று மாலை 7.15 மணிக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரிஷீயஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் என சுமார் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • Jun 09, 2024 07:33 IST
    திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை

    370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240-க்கு இறங்கி விட்டது பாஜக. இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும்.

    பலவீனமான பாஜக அரசை, நமது முழக்கங்களின் மூலம் செயல்பட வைக்க வேண்டும்.

    ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். இந்த வாய்ப்பை ஆக்க பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை



  • Jun 09, 2024 07:33 IST
    தேசிய தேர்வு முகமை விளக்கம்

    நீட் தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை

    தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    6 தேர்வு மையங்களில்தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்

    -சஞ்சய் மூர்த்தி, மத்திய உயர்கல்வித்துறை செயலர் 



  • Jun 09, 2024 07:32 IST
    காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு

    காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    மக்களவை எதிர்க் கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment