Advertisment

Tamil News Highlights: அனல் மின் நிலையம் : முதல்வர் இன்று துவக்கி வைப்பு

Tamil News Today Updates- 06 March 2024-இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

655-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

‘நீங்கள் நலமா’  புதிய திட்டம் 

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Mar 06, 2024 22:38 IST
    புதுச்சேரி சிறுமி கொலை; குற்றவாளிகள் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் வழக்குப் பதிவு

    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது



  • Mar 06, 2024 21:56 IST
    புதுச்சேரி சிறுமி கொலை; ராகுல் காந்தி கண்டனம்

    புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறுமிகளுக்கு எதிராக நாட்டில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெறுவது ஏன்? ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம் இது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்



  • Mar 06, 2024 21:24 IST
    அமெரிக்க அதிபர் தேர்தல்; நிக்கி ஹேலி விலகல்

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகியுள்ளார்



  • Mar 06, 2024 21:12 IST
    சிறுமி படுகொலை விவகாரம்; புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த் அறிவிப்பு

    புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரியில் நாளை மறுதினம் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 06, 2024 20:32 IST
    கூடுதலாக வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்; தி.மு.க அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

    “சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசு, பத்திரப்பதிவுத் துறையில் 2017 ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்று, முந்தைய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.
    சட்டவிரோதமாக இத்தனை நாட்களாகக் கூடுதல் கட்டணம் வசூலித்து, மக்களை அவதிக்குள்ளாக்கிய திமுக அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது. இத்தோடு நில்லாமல், இத்தனை நாட்களாக பொதுமக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்கே திருப்பித் தர வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 06, 2024 20:09 IST
    கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியார்; கல்வித் துறை அறிவிப்பு


    பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்து, கர்நாடக பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    அதாவது, சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப்பணி குறித்த பாடம் இடம்பெறும் என  கர்நாடக கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • Mar 06, 2024 19:18 IST
    புதுச்சேரி சிறுமி வன்கொடுமை: உரிய நீதி கிடைக்க கனிமொழி வலியுறுத்தல்

    புதுச்சேரி சிறுமி வன்கொடுமை: உரிய நீதி கிடைக்க கனிமொழி வலியுறுத்தல்

    “புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.
    மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என கனிமொழி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.



  • Mar 06, 2024 18:48 IST
    புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஒரு வாரத்தில் நீதி - தமிழிசை உறுதி

    புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒரு வாரத்தில் சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்கும்; சிறப்பு விரைவு நீதிமன்றம் ஒரு வாரத்தில் வழக்கை விசாரித்து உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போதையால் மட்டுமல்ல பாதை மாறியவர்களாலும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.” என்று தெரிவித்தார்.



  • Mar 06, 2024 18:26 IST
    புதுச்சேரி சிறுமி கொலைக்கு த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்

    புதுச்சேரியில் 9-வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மிருகத்தனமாக ஈவிரக்கமற்ற படுகொலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 06, 2024 18:24 IST
    புதுச்சேரி சிறுமி கொலைக்கு த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்

    புதுச்சேரியில் 9-வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மிருகத்தனமாக ஈவிரக்கமற்ற படுகொலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 06, 2024 17:54 IST
    அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை; வெற்றிக் கூட்டணியாக அமையும் - தே.மு.தி.க குழு பேட்டி

    அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ஊடகங்களிடம் பேசிய தே.மு.தி.க குழுவினர் எதிர்காலத்தில் தே.மு.தி.க வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று கூறினார்.



  • Mar 06, 2024 17:51 IST
    குழந்தை கடத்தல் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் - கிருஷ்ணகிரி எஸ்.பி எச்சரிக்கை

    குழந்தை கடத்தல் என சமூக வலைதளங்களில் பரவு வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இது தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் செம்மடமுத்தூரில் புலம் பெயர் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் அவர் குழந்தை கடத்தினார் என பரவும் தகவல் வதந்தி என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.



  • Mar 06, 2024 17:31 IST
    ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க  ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் - அமைச்சர் ரகுபதி 

    உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி சென்னையில் போராடிவரும் போராட்டக்காரர்களை சந்தித்தபின் அமைச்சர் ரகுபதி,  “சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்து வருகிறார்” என்று குறினார். 



  • Mar 06, 2024 17:28 IST
    புதுச்சேரியில் சிறுமி படுகொலை; போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

    புதுச்சேரியில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகேட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.



  • Mar 06, 2024 17:27 IST
    அ.தி.மு.க - தே.மு.தி.க 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அ.தி.மு.க - தே.மு.தி.க இடையே தொகுதி பங்கீடு குறித்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.



  • Mar 06, 2024 17:24 IST
    நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? இ.பி.எஸ்-க்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  ‘நீங்கள் நலமா?’ திட்டத்தை தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி ‘நலமாக இல்லை’ என்று கூறி விமர்சித்த நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    “விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டுகொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க-வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?


    தூத்துகுடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    பொள்ளாச்சி இள்ம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    கட்சித் தலைவி வாழ்ந்த கொடாநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்கவிட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Mar 06, 2024 17:08 IST
    கரும்பு விவசாயி சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் நா.த.க. மேல்முறையீடு 

    நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திர்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தது; இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்துள்ளார்.



  • Mar 06, 2024 16:03 IST
    தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு

    தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு.

    தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அறிவித்தார் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

    தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், இளங்கோவன் அடங்கிய குழு அறிவிப்பு



  • Mar 06, 2024 16:00 IST
    மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி : சரத்குமார் அறிவிப்பு

    பாஜக - சமக கூட்டணி வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் "மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு" - சரத்குமார்



  • Mar 06, 2024 15:23 IST
    புதுச்சேரி சிறுமி படுகொலை : முன்னாள் முதல்வர் போராட்டம்

    புதுச்சேரி சிறுமி படுகொலையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லி போராட்டத்தை துவங்கியிருக்கிறார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி



  • Mar 06, 2024 14:57 IST
    புதுச்சேரி சிறுமி படுகொலை- கமல்ஹாசன் ஆதங்கம்

    புதுச்சேரி சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்;

    இந்த சீரழிவை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது;

    போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம்;

    போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்"

    - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்



  • Mar 06, 2024 14:53 IST
    சனாதனத்திற்கு எதிராக பேசிய வழக்கு முடித்து வைப்பு

    சனாதனத்திற்கு எதிராக பேசிய வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

    அமைச்சர் போன்று உயர்பதவியில் இருப்பவர்கள், சனாதனம் குறித்து பேசியிருக்கக் கூடாது;

    சனாதனத்திற்கு எதிராக பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலகத் தேவையில்லை

    - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து



  • Mar 06, 2024 14:33 IST
    டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது;

    இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்

    - டிடிவி தினகரன் வலியுறுத்தல்



  • Mar 06, 2024 14:33 IST
    புதுச்சேரி சிறுமி கொலை- ரூ. 20 லட்சம் நிவாரணம்

    புதுச்சேரி: படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி



  • Mar 06, 2024 14:12 IST
    முதல்வர் உடன் சிறுமியின் தந்தை சந்திப்பு

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் - பெற்றோர்

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடன் சிறுமியின் தந்தை சந்தித்து பேசி வருகிறார்



  • Mar 06, 2024 14:10 IST
    ஈஷா யோகா மையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

    கோவை ஈஷா யோகா மையத்தில், கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல், விழாக்களை நடத்த தடை விதிக்கக் கோரி கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் தொடர்ந்த வழக்க்கில் ஈஷா யோகா மையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கழிவு நீர், அருகில் உள்ள விவசாய நிலங்களில்  வெளியேற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய  வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

    சிவராத்திரி நாட்களில் ஒலி, ஒளி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.சில்சன் வாதம்



  • Mar 06, 2024 14:10 IST
    9 வயது சிறுமி கொலை

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை;

    சிறுமி கொலைக்கு நீதி வழங்க கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆலோசனை



  • Mar 06, 2024 13:32 IST
    செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி-யின் நீதிமன்ற காவல் மார்ச் 11ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு



  • Mar 06, 2024 13:24 IST
    7 நாட்களுக்கு வறண்ட வானிலை

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும்

    இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு

    -சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Mar 06, 2024 13:24 IST
    மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு கொடுமைகள்

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு கொடுமைகள் நடக்கின்றன - பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு



  • Mar 06, 2024 13:23 IST
    உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்

    மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட  ஆட்சியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்



  • Mar 06, 2024 13:23 IST
    திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு

    வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஆதித்தமிழர் கட்சியின் சமூக நீதி காப்போம்மாநாட்டில் அக்கட்சி தலைவர் ஜக்கையன் அறிவிப்பு



  • Mar 06, 2024 12:29 IST
    இது குடும்ப ஆட்சி தான்" தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது : ஸ்டாலின்

    "எங்களை சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள், ஆம் இது குடும்ப ஆட்சி தான்" தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது - முதலமைச்சர் ஸ்டாலின்



  • Mar 06, 2024 12:17 IST
    ஜெயலலிதா சொத்து வழக்கு - ஒத்திவைப்பு

    ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு விசாரணையை ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு கர்நாடக நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை தமிழக அரசுக்கு ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது தொடர்பான வழக்கு



  • Mar 06, 2024 11:49 IST
    சொத்து வரி - மத்திய அரசு அலுவலகத்திற்கு நோட்டீஸ்

    நிலுவையில் உள்ள ரூ.10.3 கோடி, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.12.5 கோடி வரி செலுத்த வேண்டும்" குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - மாநகராட்சி எச்சரிக்கை. 



  • Mar 06, 2024 11:24 IST
    நீட் பயிற்சி தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 25ஆம் தேதி முதல் நீட் பயிற்சி தொடக்கம் மே மாதம் 2ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 



  • Mar 06, 2024 11:07 IST
    கொல்கத்தாவில் வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் துவக்கம்

    மேற்கு வங்கம், கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி நாட்டிலேயே முதல் முறையாக ஹவுரா மைதான் - எஸ்பிளானேட் வழித்தடத்தில் நீருக்கு அடியில் செல்லும் ரயில்.



  • Mar 06, 2024 10:41 IST
    அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி கோரிக்கை

    அதிமுக கூட்டணியில் தங்களுக்கு தேனி அல்லது தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி கோரிக்கை



  • Mar 06, 2024 10:21 IST
    அ.தி.மு.க உடன் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி கூட்டணி

    மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி,

     சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் சந்திப்பு



  • Mar 06, 2024 10:04 IST
    புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை

    வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.48,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,040-க்கும் விற்பனை.



  • Mar 06, 2024 09:31 IST
    இளைஞர்களுக்கு 10 முக்கிய தேர்தல் வாக்குறுதி

    இளைஞர்களுக்காக 10 முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவிக்க உள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் கார்கே தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்.



  • Mar 06, 2024 09:25 IST
    சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

    புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலம். சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

    போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 06, 2024 09:20 IST
    சிவில் சர்வீஸ் தேர்வு: கால அவகாசம் இன்று முடிவு

    சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!



  • Mar 06, 2024 09:15 IST
    தி.மு.க வேட்பாளராக போட்டி? வடிவேலு பதில்

    மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதாக வெளியான தகவல்.நடிகர் வடிவேலு மறுப்பு. திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன் என பதில். 



  • Mar 06, 2024 07:53 IST
    தி.மு.க- வி.சி.க இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

    தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க- வி.சி.க இடையே இன்று சென்னையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை



  • Mar 06, 2024 07:52 IST
    சனாதனம் பற்றி பேச்சு: இன்று தீர்ப்பு

    சனாதனம் பற்றி பேச்சு: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு

    சனாதனம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு. எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிப்பார்கள் என விளக்கமளிக்க இந்து முன்னணி வழக்கு 



  • Mar 06, 2024 07:51 IST
    'டெல்லி சலோ' போராட்டம் இன்று மீண்டும் தொடக்கம்

    மத்திய அரசுக்கு எதிரான  விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணியை தொடங்கினர். போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் தொடக்கம் 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment