பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளே ஆஃப்க்கு முன்னேறியது குஜராத் ஐபிஎல்
ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது குஜராத் தோல்வியை அடுத்து தொடரில் இருந்து வெளியேறியது ஹைதராபாத் அணி.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2434 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 741 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 465 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஏடிஜிபிக்கள் 4 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோருக்கு பதவி உயர்வு
மதுரவாயல் கெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பியை கைது செய்தது காவல்துறை 1,000 லிட்டர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்றது விசாரணையில் அம்பலம்
விஷச்சாராய வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் உத்தரவு
நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம் அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம், கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம் புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம், நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம் காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம், செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம், சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம், தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம் திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம், ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம் திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம், நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் உரிமை மீட்பு மாநாடு தொடங்கி நடந்துவருகிறது அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்பு
உதயநிதி செங்கலை தூக்குனா பாராட்டுறாங்க முதல்வர்.. இதே நாசர் செங்கலை தூக்குனா அவர் பதவி போகிறது”.. “இது எந்த வகையில் நியாயம்” – பிரேமலதா விஜயகாந்த்
திண்டிவனத்தில் சாராய விற்பனையாளர் மருவூர் ராஜா, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது கடந்த ஏப்ரல் 18ம் தேதி கைதான நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் பேட்டி: “காங்கிரஸ் கட்சி எனக்கு தாய் போல், இந்த கட்சியை நான் உருவாக்கினேன். நான் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடருவேன்” என்று கூறினார்.
திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி மருவூர் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆன்லைன் ரம்மியில் எதிர்முனையில் மற்றொரு நபர் உடன் விளையாடினாலும் அல்லது கணினியுடன் விளையாடினாலும் அது சூதாட்டம் இல்லை. ஆன்லைனில் விளையாடுவதற்கும் நேரில் விளையாடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இது முற்றிலும் திறன் அடிப்படையிலான விளையாட்டுதான் என்று ஆன்லைன் ரம்மி தொடர்பான் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவபாவுடன் பிரதமர் மோடியை சந்தித்த புகைபடத்தை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், “நம்முடைய தாய் நாட்டிற்காக கடினமாக மற்றும் அர்ப்பணிப்புடன் உழைப்பதற்கு நீங்கள் முதன்மையான உதாரணம். ஒவ்வொருவரையும் தொடர்ந்து பல்வேறு சிறப்பான வழிகளில் நீங்கள் உத்வேகம் கொள்ள வைப்பீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் பாடப் புத்தகங்கள் வழங்க உரிய நடடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளம் சிறார் இல்லங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு நபர் குழு அமைத்தது. சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உறைவிடவாசிகளின் நிர்வாகம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு,க ஆட்சியில் கள்ளச்சாராயத்தை தடுக்க குழு அமைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அ.தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை பட்டியலிட்டு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவின் முதலமைச்சர் பதவிக்கு நீடிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எங்களுடையது ஒற்றுமையான வீடு, எங்களது எண்ணிக்கை 135, யாரையும் பிரிக்க நான் விரும்பவில்லை என்று சிவக்குமார் கூறினார். முதலமைச்சரை கட்சி தலைமை தேர்வு செய்யலாம் என எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, தென்காசி, நெல்லை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை, திருவொற்றியூர் அருகே கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால். தமிழ்நாட்டில் சாராயம் கிடைக்காத சூழ்நிலை உள்ளதால், சில தொழிற்சாலைகளில் இருந்து விஷச்சாராயத்தை திருடி விற்கின்றனர் என காவல்துறை டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்
மேற்குவங்கம், எக்ராவில் உள்ள பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. சட்டவிரோதமாக இயங்கிய இந்த ஆலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
மாணவர்களின் கல்வி சான்றிதழை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. கட்டணம் தரவில்லை என்பதற்காக சான்றிதழ்களை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகம் வட்டி தொழில் ஏதும் செய்யவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. மேலும், தென்காசி வாசுதேவநல்லூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழை 10 நாட்களில் வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே பொய்கை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான முருகன் சுட்டெரிக்கும் வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முருகன், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வந்துள்ளார்
கள்ளச்சாராயம் விவகாரமானது உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல; இந்த சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் தொடர வேண்டும்; கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்- கமல்ஹாசன் வலியுறுத்தல்
எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பாதிப்பினால் 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்; சாராயம் அருந்திய 8 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது; 11 பேர் கொண்ட மருத்துவ குழு 24 மணி நேரமும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி
தேசிய தலைநகரை தொட்டவுடன், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது சகோதரர் டி.கே.சுரேஷின் அலுவலகத்திற்கு வந்தார். டி.கே.சுரேஷ் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் உயர் அதிகாரிகளை சந்தித்த ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் கானொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார்
காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் டெல்லி வந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் அக்கட்சியின் உயரதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார். சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
இந்திய அரசு மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே கள்ளச்சாராயத்தினை அழிக்க முடியும்; தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரவேண்டும்- விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 18ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ்-ல் இன்று நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்- பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி
தேசிய சராசரி அளவை விட தமிழக ஊரகப் பகுதிகளில் மின் விநியோகம் உயர்ந்ததை சுட்டிக்காட்டி தமிழக முதல்வருக்கு மத்திய அரசு பாராட்டு. மின் விநியோகம் 2021-22ம் ஆண்டு நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்ததற்கு பாராட்டு. 24 மணி நேரமும் மின் விநியோகம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உதவும் என எரிசக்தி துறை அமைச்சர் ஆர். கே. சிங் பாராட்டு
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பொன்னம்பலமேடு பகுதியில் சம்பிரதாயம் மற்றும் விதிகளை மீறி பூஜை
தடையை மீறி ஜோதி தெரியும் இடத்தில் அமர்ந்து 5 பேர் விசேஷ பூஜைகள் செய்து உள்ளனர்.
2 ஆண்டு காலம் திமுக அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தை தடுக்க பிரத்யேக குழு அமைத்து நடவடிக்கை எடுத்தோம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளச் சாராயத்தை விற்பனை செய்தவர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடன் நேரில் சந்திப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.
2011-2015 அதிமுக ஆட்சியில், அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார்.
புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்
கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் 12 பேரின் குடும்பத்தினற்கு தலா ரூ, 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை ஒரு சவரன் ரூ. 45,720க்கும், ஒரு கிராம் ரூ. 5,715க்கும் விற்பனை
கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் முதுகில் குத்தமாட்டேன். காங்கிரஸ் கட்சி எனது தாய். குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என தாய்க்கு தெரியும். டெல்லி புறப்படுவதற்கு முன் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் ஒருவர் பலி இதுவரை கள்ளச்சாரயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 19 பேர் உயிரிழப்பு
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 111 பேர் கைது
லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ – மும்பை அணிகள் மோதல்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி செல்கிறார். அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்க டெல்லி பயணம்
சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையான ரயில் சேவை சீரானது. 2வது நடைமேடை வாயிலாக செங்கல்பட்டு செல்லும் ரயில்களும், 4வது நடைமேடை வாயிலாக தாம்பரம் செல்லும் ரயில்களும் இயக்கம்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து . சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பெட்டிகள் கழன்ற நிலையில் ரயில்வே சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு