Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். அறிவியல் நகரத் திட்டத் துணைத் தலைவராக தேவ் ராஜ் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:05 (IST) 22 Jul 2023அண்ணா பல்கலை வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரம் – ஐகோர்ட் முக்கிய உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட தொடர்பான வழக்கை 3 மாதங்களில் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 21:17 (IST) 22 Jul 2023சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை
சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, மந்தைவெளி, மெரினா உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது
- 19:56 (IST) 22 Jul 2023தமிழ் முகமூடியை போட்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் - மு.க.ஸ்டாலின்
தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் என சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை அறக்கட்டளையின் 42ம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
- 19:18 (IST) 22 Jul 2023மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த முதல்வர் தனது தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
- 18:16 (IST) 22 Jul 2023அமைச்சர்களாகிய எங்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்தார் - உதயநிதி
ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லை என்றால் துறையை மாற்றி விடுவேன் என அமைச்சர்களாகிய எங்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்தார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 18:00 (IST) 22 Jul 2023இசை விழா - விருதுகளை வழங்கிய முதல்வர்
முத்தமிழ்ப் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும் வழங்கப்பட்டது. வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது
- 17:59 (IST) 22 Jul 2023அரசு மேல்நிலை எழுத்து தேர்வு பணிகள் தீவிரம்
காரைக்காலில் நாளை 13 மையங்களில் அரசு மேல்நிலை எழுத்து தேர்வு 5,148 பேர் எழுத உள்ளனர் - இலவச சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்
- 17:11 (IST) 22 Jul 2023சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் கோ.கருணாநிதி கருத்து
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட 604 நீதிபதிகளில் 79% உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள சமூக நீதி கண்காணிப்பு குழு உறுப்பினர் கோ.கருணாநிதி நீதித்துறையில் இட ஒதுக்கீடு என்கிற சமூகநீதி கொள்கை நடைமுறையில் இல்லை என்பதால்தான் என கூறியுள்ளார்.
- 17:09 (IST) 22 Jul 2023தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா ஆக.21ல் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
- 16:28 (IST) 22 Jul 2023ஜி20 மாநாட்டு நிகழ்வுகள் - ட்ரோன்கள் பறக்க தடை
ஜி20 மாநாட்டு நிகழ்வுகள் காரணமாக சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை முதல் 26ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு
- 16:03 (IST) 22 Jul 2023மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணிலேயே இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 16:02 (IST) 22 Jul 2023மனிதனைப் போன்று பற்கள் கொண்ட மீனை பிடித்த சிறுவன்
அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த சார்லி கிளிண்டன் என்ற சிறுவன் பிடித்த, மனிதனைப் போன்று பற்கள் கொண்ட மீன்; புகைப்படங்களை பகிர்ந்துள்ளது ஓக்லஹோமா வனவிலங்கு பாதுகாப்புத் துறை! இந்த மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது எனவும், இந்த மீன்களால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை எனவும் தகவல்!
- 15:22 (IST) 22 Jul 2023சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி கற்கலாம்.
நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளில் பயிற்றுவிக்க சிபிஎஸ்இ நடவடிக்கை.
முதல் கட்டமாக 5ம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வியை போதிக்க நடவடிக்கை
- 14:51 (IST) 22 Jul 2023தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 14:42 (IST) 22 Jul 2023மணிப்பூர் பெண்கள் மீதான கொடூரம்: வீடியோவில் உள்ள 5வது குற்றவாளி கைது!
கலவரம் நிறைந்த மணிப்பூரில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ ஜூலை 19 அன்று வெளியாகி நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் மே 4 ஆம் தேதி மணிப்பூரில் இரண்டு பெண்களை அணிவகுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் வெள்ளிக்கிழமை 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- 14:29 (IST) 22 Jul 2023அடுக்குமாடி குடியிருப்பில் மனித கழிவுகளை அகற்றிய தொழிலாளர்கள்!
அடுக்குமாடி குடியிருப்பில் மனித கழிவுகளை தொழிலாளர்கள் அகற்றியது தொடர்பான வீடியோ குறித்து செங்கல்பட்டு மாவட்டம் கண்ணகப்பட்டு பகுதியில் தேசிய துப்புரவு தொழிலாளர் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. வீடியோ பதிவுடன் டெல்லி தேசிய துப்புரவு தொழிலாளர் வாரியத்தில் இமெயில் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது.
- 14:17 (IST) 22 Jul 20232 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:04 (IST) 22 Jul 2023நெல்லை குப்பை கிடங்கு- 3வது நாளாக பற்றி எரியும் நெருப்பு!
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் 3வது நாளாக நெருப்பு பற்றி எரிந்து வருகிறது. பல கிலோமீட்டர் தூரம் புகைமண்டலம் சூழ்ந்து, உடல் உபாதைகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குப்பை கிடங்கு தீ அணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகள்; குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் அதிகாரிகள் வராததால், ராமையம்பட்டி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- 13:40 (IST) 22 Jul 2023முதியோர் உதவித்தொகை ரூ. 1200 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!
முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.
கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ.1000ல் இருந்து ரூ.1200 ஆக உயர்வு என்றும், விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
- 13:37 (IST) 22 Jul 2023மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம்!
ஆடி பூரத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருப்பதி போல திருநள்ளாறிலும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு பொது தரிசனமாக மாற்றியமைக்கப்பட்டது. அதனால் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- 12:50 (IST) 22 Jul 2023மணிப்பூர் பற்றி வெளியில் பேச முடியாது - கிரண் ரிஜிஜூ
மணிப்பூர் பற்றி வெளியில் பேச முடியாது - கிரண் ரிஜிஜூ
மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றித்தில் விவாதிக்கப்படும். இதை வெளியே பேச முடியாது. மணிப்பூர் விவகாரத்தை பற்றி வெளியில் பேசினால் அது மாறுபட்ட கருத்தாக மாறிவிடும் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
- 12:48 (IST) 22 Jul 202370,000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய மோடி
ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் 70,000 பேருக்கு காணொளி வாயிலாக பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
- 12:35 (IST) 22 Jul 2023மணிப்பூர் செல்கிறது தமிழக அரசு குழு?
மணிப்பூரில் உள்ள 4000 தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு செல்ல உள்ளதாக தகவல். அமைச்சர் ஒருவர் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மணிப்பூர் செல்லத் திட்டம் எனத் தகவல்
- 12:12 (IST) 22 Jul 2023தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு
- 12:05 (IST) 22 Jul 2023தெலங்கானாவில் அழுகி வீணாகும் தக்காளி
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் மழை காரணமாக அழுகி வீணான தக்காளி
அழுகல் தக்காளியை விற்க முடியாது என்பதால் கால்நடைக்கு தீவனமாக்கிய விவசாயிகள்
- 12:04 (IST) 22 Jul 2023கோவையில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட நபர்
கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட ராஜஸ்தானை சேர்ந்த சியாம் சிங்கிடம் போலீசார் விசாரணை
பாதுகாப்பு பரிசோதகர் அருண்குமார் புகாரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு
- 12:03 (IST) 22 Jul 2023முதியோர் உதவித்தொகை உயர்த்த முடிவு
தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த முடிவு
1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்
- 10:50 (IST) 22 Jul 2023தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
- 10:06 (IST) 22 Jul 2023தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44, 440க்கும், கிராம் ரூ. 5,555 க்கும் விற்பனையாகிறது.
- 10:03 (IST) 22 Jul 2023கர்நாடக அரசு உத்தரவு
மேகதாது அணை அமைய உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வுக்காக நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 09:25 (IST) 22 Jul 2023ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து, சாமி தரிசனம் செய்கின்றனர்.
- 09:21 (IST) 22 Jul 2023குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
சனி, ஞாயிறு வார விடுமுறையை தொடர்ந்து குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
- 08:18 (IST) 22 Jul 2023பணி நியமனக் கடிதங்களை வழங்கும் பிரதமர் மோடி
மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை காலை காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார்.
- 08:07 (IST) 22 Jul 2023தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது.
- 08:06 (IST) 22 Jul 2023சென்னை மெரினாவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சென்னை மெரினாவில் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் மெரினாவில் கூட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- 08:06 (IST) 22 Jul 2023இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் போட்டி
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 2ம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 352 ரன்கள் பின்னிலை வகிக்கிறது.
முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 121(206), ரோகித் ஷர்மா 80(143) ரன்கள் சேர்த்தனர்
- 08:05 (IST) 22 Jul 2023தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை இன்று கூடுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் அமைச்சரவை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
.
- 08:05 (IST) 22 Jul 2023திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் நியமனம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அம்மாவட்டத்திற்கு பதிலாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.