Advertisment

Tamil News Updates: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வழக்கு விசாரணைக்கு தடை கோரி கேசவ விநாயகம் நீதிமன்றத்தில் மனு

Tamil News Live updates: 21-05-2024: இன்று நடைபெறும் முக்கிய செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆன்லைன் ரம்மி; ப்ளேகேம்ஸ் நிறுவனம் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது; காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

lE updates

Tamil News Live updates:  பெட்ரோல் - டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • May 21, 2024 21:56 IST
    உலக பாராலிம்பிக்ஸ் போட்டி: தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    உலக பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்  பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் மேலும், பல உயர்ந்த இடங்களை மாரியப்பன் எட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • May 21, 2024 20:45 IST
    கருவில் சிசுவின் பாலினம் அறிவித்தால் நடவடிக்கை: யூடியூபர் இர்ஃபானுக்கு தமிழக அரசு குறிப்பாணை

    கருவின் பாலினம் அறிவது அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அறிவித்துள்ளது. கருவின் பாலினத்தை ஸ்கேன் செய்யும் மையங்கள், மருத்துவமனைகள் மீது நடவடிககி எடுக்கப்படும். யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை உலகம் முழுவதும் பலர் பார்த்து பகிர்ந்துள்ளனர். இத்தகைய செயலால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும், பாலினத் தேர்வை தடை செய்தல், சட்ட விதிகளை மீறியதாக இர்ஃபானுக்கு குறிப்பணை அனுப்பப்பட்டுள்ளது. இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்க யூடியூப் மற்றும் கணினி குற்றப்பிரிவுக்கு கடிதம்மூலம் தமிழக மருத்துவத் துறை அறிவுறுத்தியுள்ளது.



  • May 21, 2024 19:34 IST
    கருவில் உள்ள குழந்தை பாலினம்: சுகாதாரத்துறை நோட்டீஸ் கிடைக்கவில்லை -  யூடியூபர் இர்ஃபான்

    கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்த வீடியோ சர்ச்சையானதால் அதை நீக்கிவிட்டேன். சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸ் கிடைக்கவில்லை. சுகாதாரத்துறை நோட்டீஸ் கிடைத்த பின்னர் அது குறித்து பதிலளிக்கப்படும் என்று யூடியூபர் தெரிவித்துள்ளார்.



  • May 21, 2024 19:32 IST
    பா.ஜ.க மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விசாரணை - எஸ்.ஆர். சேகர்

    “பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பா.ஜ.க மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இன்றைய விசாரணை நடந்துள்ளது. விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை” என்று பா.ஜ.க நிர்வாகி எஸ்.ஆர். சேகர் கூறினார்.



  • May 21, 2024 19:29 IST
    உலக பாராலிம்பிக் போட்டி: தங்கப் பதக்கம் வென்றார் மாரியப்பன்

    ஜப்பானில் நடைபெற்றுவரும் உலக பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 



  • May 21, 2024 19:02 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; கூடுதல் ஏ.டி.எம் மையங்கள் வைக்க ஏற்பாடு

    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குறைவான கூடுதல் ஏ.டி.எம் மையங்கள் இருப்பதாக மக்கள் புகார் அளித்தனர்.
    இந்த நிலையில் கூடுதல் ஏ.டி.எம் மையங்கள் திறக்க சி.எம்.டி.ஏ நடவடிக்கை எடுத்துள்ளது.



  • May 21, 2024 18:41 IST
    2ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம்

    “மக்களுடன் முதல்வர் திட்டம்' 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆக. 15 முதல் அக். 15-க்குள் தீர்வு காண இலக்கு” நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • May 21, 2024 17:53 IST
    ஆமை இனப்பெருக்க பகுதியில் சி.எம்.டி.ஏ திட்டம்; தடை விதித்த பசுமை தீர்ப்பாயம்

    ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் மணற்பகுதியை சமப்படுத்தும் பணிகள் சி.எம்.டி.ஏ சார்பில் நடைபெற்ற நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையம், சுற்றுச் சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



  • May 21, 2024 17:27 IST
    நடுவானில் குலுங்கிய விமானம்; ஒருவர் உயிரிழப்பு


    லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வினானம் நடுவானில் திடீரௌ குலுக்கியது. இதில் ஒரு பயணி உயிரிழந்தார். சிலர் காயமுற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



  • May 21, 2024 16:39 IST
    முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்; 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக பீலா அளித்த புகாரின் அடிப்படையில் அவரின் கணவர் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.



  • May 21, 2024 15:52 IST
    ஈரான் அதிபர் இறுதிச் சடங்கு - இந்திய குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு 

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

     



  • May 21, 2024 15:44 IST
    போதைப் பொருளுக்கு எதிராக நடந்த சிறப்பு சோதனையில் 58 பேர் கைது

    சென்னையில் 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளுக்கு எதிராக நடத்திய சோதனையில் 58 கைது. 7 நாட்களில் 31 வழக்குகள் பதியப்பட்டு 61.42  கிலோ கஞ்சா, 5789 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல். நடப்பாண்டில் 133 குற்றவாளிகள் போதனை பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. 



  • May 21, 2024 15:29 IST
    மதுரை ஒத்தக்கடை பகுதியில் கர்ப்பிணி பெண் மீது பைக் மோதி விபத்து.

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் மீது சைக்கிள் மோதியது. தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
    சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிய பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து, போக்குவரத்து போலீசாரிடம் பாதுகாப்பு பணியை ஒப்படைக்க, பொதுமக்களின் கோரிக்கை.



  • May 21, 2024 15:21 IST
    முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

    அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளில் ஜாமின் கோரி மணிஸ் சிசோடியா தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.



  • May 21, 2024 15:12 IST
    சிவகங்கை - பங்குப் பேரவையில் உறுப்பினர்களாக மாற பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை

    சிவகங்கை மாவட்டம் சூசையார்பட்டினத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் சப்பரம் தூக்கவும், பங்குப் பேரவையில் உறுப்பினர்களாக சேர்க்கவும் கோரி வழக்கு ஆலைய பங்குக்குழுவில் அனைவரும் இருக்கும் வகையில் நடவடிக்கை மற்றும் சாதிய பாகுபாடு இல்லாத வகையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் வண்டியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது 



  • May 21, 2024 15:05 IST
    காவிரி மேலாண்மை ஆணைய குழு கூட்டம் - டெல்லியில் தொடங்கியது.

    தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தாருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.



  • May 21, 2024 15:00 IST
    கலைஞர் நூலகத்திற்குள் மீண்டும் புகுந்த மழைநீர் - ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை 

    “மதுரை மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி, நோய் தொற்று ஏற்படும் நிலையில் உள்ளது. ரூ.130 கோடிக்கு மேல் செலவு செய்து திறந்துள்ள கலைஞர் நூலகத்திற்குள் மீண்டும் மழைநீர் புகுந்துள்ளது. 

    மக்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டிய இடத்தை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்” என்று மதுரையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்  எம்.ல்.ஏ. தெரிவித்தார். 

     



  • May 21, 2024 14:51 IST
    மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம் 

    "ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே பலமுறை சம்மன் அனுப்பியும் பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகவில்லை. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீசும் அறிவிக்கப்பட்டு இருந்தது" என்று மத்திய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம் எழுதியுள்ளது. 



  • May 21, 2024 14:47 IST
    கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை! 

    கோவையில் உள்ள ஒரு சில வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு உள்ளதை அறிய முடிவதால், மாநகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நில பரப்பளவு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து வார்டு மறுவரையறை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். 



  • May 21, 2024 13:52 IST
    தமிழர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? -ஸ்டாலின் கேள்வி

    “தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல; தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?; தமிழர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • May 21, 2024 13:49 IST
    தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்:மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்; வாக்குக்காக தமிழ்நாட்டு மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்" - திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் 



  • May 21, 2024 13:25 IST
    நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜூ

    நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி.  ராகுல்காந்தி உணவருந்தும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ



  • May 21, 2024 13:11 IST
    சென்னை எழும்பூர் - கோட்டை ரயில் நிலையம் இடையே சிக்னல் கோளாறு

    சென்னை எழும்பூர் - கோட்டை ரயில் நிலையம் இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கும் மேலாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு சிக்னலில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம்.  



  • May 21, 2024 12:54 IST
    பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

    பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை; ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சேகருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கோவை கணபதி பகுதியில் உள்ள அவரது வீட்டில் விசாரணை



  • May 21, 2024 12:33 IST
    காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

    கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுவதாக கூறி தஞ்சை தபால் நிலையம் முன் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடந்த  போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். திருவாரூர், நாகை, காரைக்காலிலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  



  • May 21, 2024 12:28 IST
    பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி வெளியுறவுத்துறைக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கடிதம்

     பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி வெளியுறவுத்துறைக்கு சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கடிதம். தற்பொழுது ரேவண்ணா ஜாமினில் உள்ள நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிறப்பு புலனாய்வு குழு சார்பாக இன்று அல்லது நாளை பெங்களூர் நகரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தகவல். 



  • May 21, 2024 12:27 IST
    யூ டியூபர் இர்பான் மீது நடவடிக்கை - சுகாதாரத்துறை

    வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூ டியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை.



  • May 21, 2024 11:57 IST
    நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக வர மாட்டார்: அரவிந்த் கெஜ்ரிவால்

    மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்; நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக வர மாட்டார்; எனவே தனது ஆணவத்தை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துக் கொள்ள வேண்டும் - டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி வாயிலாக பேச்சு



  • May 21, 2024 11:56 IST
    பண மோசடி : தலைமை காவலர் கிருஷ்ணபிரதீஷ் பணியிடை நீக்கம்

    பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி பலரிடம் பண மோசடி செய்த சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய தலைமை காவலர் கிருஷ்ணபிரதீஷ் பணியிடை நீக்கம். 



  • May 21, 2024 11:33 IST
    சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    உரிய அனுமதி பெறவில்லை என்றால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு; தடுப்பணை கட்டுவது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை பதிவு செய்துள்ளது; கேரள அரசும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு



  • May 21, 2024 11:32 IST
    இந்திய கடல்சார் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்

    இந்திய கடல்சார் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும்; தொழில் பாதுகாப்பு துறை மற்றும் பசுமை தீர்பாயத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற்றிட வேண்டும் எனவும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு



  • May 21, 2024 11:29 IST
    எண்ணூர் அமோனியா வாயு கசிவு: ஆலையை திறக்க பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் அமர்வு தீர்ப்பு

    எண்ணூர் அமோனியா வாயு கசிவு தொடர்பான வழக்கில் கோரமண்டல் ஆலையை மீண்டும் திறக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரைகள் மற்றும் தொழில் நுட்ப குழு பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்வு தீர்ப்பு



  • May 21, 2024 10:56 IST
    கோபிசெட்டிபாளையம்: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்

    கோபிசெட்டிபாளையம்: செட்டியம்பதி குளம் நிரம்பி வருவதால் பெரியார் நகர் நம்பியூர் பேருந்து நிலையம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்



  • May 21, 2024 10:55 IST
    பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ சோதனை

     கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ சோதனை செய்துவருகின்றனர். கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக தகவல்.



  • May 21, 2024 10:53 IST
    பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு

    நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  ரூ.823 கோடி செலவில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.  பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 



  • May 21, 2024 10:52 IST
    ரவுடி தீபக் ராஜா கொலை: 6 தனிப்படைகள் அமைப்பு

    நெல்லையில் கேடிசி நகர் உணவகம் முன்பு ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம் . 6 தனிப்படைகள் அமைப்பு .தீபக் ராஜாவின் அண்ணன் முத்துகுமார் புகாரில், மர்மநபர்கள் கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு .



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment