Advertisment

Tamil news Highlights: 2 நாட்கள் கள ஆய்வுக்காக இன்று விழுப்புரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 25-04- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Annamalai, Annamalai news, Annamalai DMK files, தி.மு.க ஃபைல்ஸ், அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள், ஸ்டாலின் பதில், DMK, DMK files, Stalin corruption allegations, AIADMK, Tamil Nadu, Tamil Nadu latest news, Indian Express news

MK Stalin

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது

நில நடுக்கம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.7ஆகப் பதிவு.

ஐபிஎல் இன்று

ஐபிஎல் 2023 - அகமதாபாத்தில் இன்று இரவு 7.30க்கு குஜராத் அணியுடன் மும்பை அணி மோதல்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:44 (IST) 25 Apr 2023
    அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க காங்கிரஸ் கடிதம்

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியதாகவும், தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினர் அவருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு என்றும் தேர்தல் ஆணையத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி கடிதம் அளித்துள்ளது


  • 22:15 (IST) 25 Apr 2023
    பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மரணம்

    பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்(95) காலமானார். மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


  • 20:49 (IST) 25 Apr 2023
    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


  • 20:27 (IST) 25 Apr 2023
    முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்

    ஒரு பெரிய உயரத்திற்கு வரனும்னா வலிகளையும் தடைகளையும் தாண்டிதான் வரனும் தெரியுது என முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்


  • 20:06 (IST) 25 Apr 2023
    12 மணி நேர வேலை மசோதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது ஏன்? தமிழிசை விளக்கம்

    தொழிலாளர் நலனையும், தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே 12 மணி நேர வேலை மசோதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிக்கை வெளியிட்டுள்ளார்


  • 19:51 (IST) 25 Apr 2023
    அவதூறு வழக்கு; தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி மனு

    அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்


  • 19:34 (IST) 25 Apr 2023
    டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு

    ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது


  • 19:12 (IST) 25 Apr 2023
    வி.ஏ.ஓ வெட்டிக்கொலை; கனிமொழி எம்.பி., நேரில் ஆறுதல்

    தூத்துக்குடி கோவில்பத்து பகுதி விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், விஏஓ லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி., ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும் ஆறுதல் தெரிவித்தனர்


  • 18:41 (IST) 25 Apr 2023
    அ.தி.மு.க ஆட்சியில் மதுரை திருமங்கலத்தில் சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கியதில் முறைகேடு - அமைச்சர் மா.சு

    அதிமுக ஆட்சியில் மதுரை திருமங்கலத்தில் சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. 3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் ஒரே IP முகவரியில் இருந்து ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்


  • 18:30 (IST) 25 Apr 2023
    அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அதிமுக அரசு முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்


  • 18:08 (IST) 25 Apr 2023
    ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் திலகவதி தலைமையில் விசாரிக்க குழு அமைப்பு

    சென்னை ஐ.ஐ.டி-யில் கடந்த 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாணவர் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


  • 18:04 (IST) 25 Apr 2023
    குட்கா, பான்மசாலா புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடர்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி: தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடருகிறது; தடையை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


  • 17:45 (IST) 25 Apr 2023
    பட்டியல் இனத்தவருக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.10,446 கோடி செலவு செய்யாதது ஏன்? - தடா பெரியசாமி

    பா.ஜ.க பட்டியல் இன தலைவர் தடா பெரியசாமி: “மத்திய அரசு பட்டியல் இனத்தவருக்கு 2022 - 2023 ஆண்டில் ரூ.16,442 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு, ரூ.10,446 கோடியை செலவு செய்யவில்லை. இந்த அரசு ஏன் செலவு செய்யவில்லை. பல ஆதி திராவிடர் விடுதிகள் மோசமான நிலையில் உள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு ஏன் இந்த விடுதிகளுக்கு செலவு செய்யவில்லை.

    பஞ்சமி நிலம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் சிறப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டும்.” என தெரிவித்தார்.


  • 17:36 (IST) 25 Apr 2023
    பா.ஜ.க பட்டியல் இன அணி தலைவர்கள் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு

    தமிழக பா.ஜ.க பட்டியல் இன அணி தலைவர்கள் தடா பெரியசாமி, வி.பி. துரைசாமி, ஆகியோர் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில், 19.04.2023 அன்று கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு பட்டியல் இனத்தவருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

    கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு பட்டியல் இனத்தவருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பட்டியல் இனத்தவரை பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிவித்தனர்.


  • 17:29 (IST) 25 Apr 2023
    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 2 பெண் யானைகளின் சடலங்கள் கண்டெடுப்பு

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கல்லம்பாளையம் மற்றும் மசினகுடி சரகம் அவரல்லா பகுதியில் என 2 இடங்களில் இன்று 2 பெண் யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 17:23 (IST) 25 Apr 2023
    குட்கா புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணை - தமிழக அரசுக்கு சுப்ரிம் கோர்ட் அனுமதி

    குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என்றும் புதிய அரசாணை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள்து. குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து 2018-ல் வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையிட்டது.


  • 17:11 (IST) 25 Apr 2023
    அலுவலகத்துக்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக் கொலை; ரூ.1 கோடி நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவு

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


  • 16:28 (IST) 25 Apr 2023
    கூடங்குளத்தில் ரஷ்ய விஞ்ஞானி மாரடைப்பால் உயிரிழப்பு

    நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு உலையின் 3வது மற்றும் 4வது அலகு கட்டுமானப் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த ரஷிய விஞ்ஞாணிகள் குழு தலைவரன கிளினின் கோ வடின் (55) மாரடைப்பால் உயிரிழந்தார். தூதரகம் மூலம் உடலை ரஷியா கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  • 15:41 (IST) 25 Apr 2023
    சூடானில் உள்நாட்டுப்போர்: வெளியேற முடியாமல் தமிழர்கள் தவிப்பு

    உள்நாட்டுப் போரால் சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 17 தமிழர்கள் தவித்து வருகின்றனர். 2 மாதங்களாக ஊதியம் வழங்காததுடன் பாஸ்போர்ட்டையும் கொடுக்காததால் தவிக்கிறோம். அடிப்படை வசதியும் இல்லை என டைல்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.


  • 15:39 (IST) 25 Apr 2023
    தூத்துக்குடி அருகே அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ வெட்டிக் கொலை

    தூத்துக்குடி முறப்பநாடு அருகே அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்; மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


  • 14:59 (IST) 25 Apr 2023
    குட்கா முறைகேடு புகார்: சீலை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி

    குட்கா முறைகேடு புகாரில் கிடங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி கிடங்கு உரிமையாளர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்.


  • 14:48 (IST) 25 Apr 2023
    கூடங்குளம் அணு உலை: ரஷிய விஞ்ஞானிகள் தலைவர் குழு மரணம்!

    கூடங்குளம் அணு உலையின் 3வது மற்றும் 4வது அலகு கட்டுமானப் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த ரஷிய விஞ்ஞானிகள் குழு தலைவரான கிளினின் கோ வடின் (55) மாரடைப்பால் காலமானார். தூதரகம் மூலம் அவரது உடலை ரஷியா கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


  • 14:36 (IST) 25 Apr 2023
    ராணுவ ட்ரக் மீதான தாக்குதல்: விவரித்ததால் அதிர்ச்சி!

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ ட்ரக் மீதான பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் இறந்தனர். இது தொடர்பாக பிஏஎப்எப் அமைப்பு ராணுவ வாகனத்தின் கீழே வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை வெளியிட்டது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றதோடு, எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என விவரித்ததால் அதிர்ச்சி நிலவி வருகிறது.


  • 14:34 (IST) 25 Apr 2023
    பழங்குடி மாணவி பலாத்காரம்: உறவினர் வீடியோ வெளியீடு

    உதகையில் பழங்குடியின மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மாணவியின் உறவினர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தலைமறைவான நபர்களை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


  • 14:32 (IST) 25 Apr 2023
    கோயம்பேடு சந்தை: 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

    ரசாயனம் கலந்து பழுக்க வைத்ததாக புகார் எழுந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் காலி மைதானத்தில் கொட்டி அழித்தனர்.


  • 14:24 (IST) 25 Apr 2023
    500 டாஸ்மாக் கடைகளை மூட கணக்கெடுப்பு பணி தொடக்கம்: மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தகவல்

    தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


  • 14:14 (IST) 25 Apr 2023
    14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


  • 12:52 (IST) 25 Apr 2023
    12-ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்- அன்பில் மகேஷ்

    12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் - அன்பில் மகேஷ் தகவல்

    12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். மே 7-ம் தேதி நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும். திட்டமிட்டபடி மே 5-ம் தேதி தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.


  • 12:43 (IST) 25 Apr 2023
    தமிழ் தெரிந்த தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்

    அரசு பள்ளிகளில் தமிழ் தெரிந்த தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது


  • 12:18 (IST) 25 Apr 2023
    யாஷிகா ஆனந்த் ஜூலை 27ல் ஆஜராக உத்தரவு

    கடந்த 2021 ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகே கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு

    விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணித்த அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார்

    இன்று ஆஜரான நிலையில் மீண்டும் ஜூலை 27ல் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு


  • 12:17 (IST) 25 Apr 2023
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ரஹானே சேர்ப்பு

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ரஹானே சேர்ப்பு

    ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்


  • 11:56 (IST) 25 Apr 2023
    வந்தே பாரத் ரயில் சேவை

    திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பச்சை கோடி காட்டி தொடங்கி வைத்தார்


  • 11:55 (IST) 25 Apr 2023
    பிரதமர் மோடி திருவனந்தபுரம் வருகை

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோடி

    வழிநெடுகிலும் திரண்டுள்ள தொண்டர்களுக்கு கையசைத்தப்படி சென்றார் பிரதமர்


  • 10:47 (IST) 25 Apr 2023
    இந்தியா கொரோனா நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,660 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி . கடந்த 24 மணி நேரத்தில் 9,213 பேர் கொரோவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை 63,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்


  • 10:36 (IST) 25 Apr 2023
    12 மணி நேர பணி மசோதாவை நிறுத்தி வைப்பு: கமல்ஹாசன் பாராட்டு

    12 மணி நேர பணி மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாற்று தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயல்படுவதே ஆரோக்கியமான அரசு. முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன் - மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்


  • 10:17 (IST) 25 Apr 2023
    செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

    கேரள மாநிலம் திருச்சூரில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழப்பு. திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி, வீடியோ பார்த்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்தது


  • 09:43 (IST) 25 Apr 2023
    ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து

    திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பிய வேன் கவிழ்ந்து விபத்து. மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில் 17 பேர் காயம்


  • 08:21 (IST) 25 Apr 2023
    காதலிக்க மறுத்ததால் கழுத்தை அறுக்க முயற்சி

    காதலிக்க மறுத்ததால் கழுத்தை அறுக்க முயற்சி . ஹைதராபாத்தில் பட்ட பகலில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி


  • 08:20 (IST) 25 Apr 2023
    வேங்கைவயல்: 11 நபர்களுக்கு இன்று டி.என்.ஏ பரிசோதனை

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் அடுத்த நகர்வு . சந்தேகிக்கப்படும் 11 நபர்களுக்கு இன்று டி.என்.ஏ பரிசோதனை


  • 08:18 (IST) 25 Apr 2023
    20 மாவட்டங்களில் மழை

    தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


  • 08:18 (IST) 25 Apr 2023
    கேரள மாநிலம் கொச்சியில் இன்று வாட்டர் மெட்ரோ சேவை தொடக்கம்

    நாட்டில் முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சியில் இன்று முதல் வாட்டர் மெட்ரோ சேவை தொடங்குகிறது.


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment